வியாழன், 19 டிசம்பர், 2019

ஜூன் 21 சூரிய கிரகணம் குறித்த எச்சரிக்கை!
வெறுங்கண்ணால் கிரகணத்தைப் பார்க்கக் கூடாது!
மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுக்குமுன்
தகுந்த பில்டரை ஒட்டவும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
ஜூன் 21, 2020 வளையல் வடிவ சூரிய கிரகணம்.
(காலை) 09:15மணி முதல் 15: 04 மணி வரை.

சூரிய கிரகணத்தை எப்படிப் பார்க்கக் கூடாது!
--------------------------------------------------------------------------
1) வெறுங்கண்ணால் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்
கூடாது. மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டோ
கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டோ பார்க்கக் கூடாது.

2) சூரிய ஒளியில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய
கதிர்வீச்சை வடிகட்டி அனுப்பும் தகுந்த வடிகட்டிகளை
அணிந்து கொண்டுதான் கிரகணத்தைப் பார்க்க
வேண்டும்.

3) பைனாகுலர் மூலமோ டெலஸ்கோப் மூலமோ
பார்க்கும்போதும், லென்சுக்கு முன்னால் தகுந்த
வடிகட்டியை ஒட்டிக்கொண்டுதான் பார்க்க வேண்டும்.

4) பழைய exposed எக்ஸ்ரே ஃபிலிம் மூலமாகப்
பார்க்க விரும்புவோர், எக்ஸ்ரே ஃ பிலிமானது
தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சை முற்றிலுமாக
வடிகட்டுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். 

5) மொபைல் போன் மூலம் சூரிய கிரகணத்தைப்
புகைப்படம் எடுக்கும்போது, காமிரா வழியாக
சூரியனை நேரடியாகப் பார்ப்பது பெருந்தவறு.
மொபைல்போன் காமிராவுக்குப் பின்புறம்
அதாவது கண்ணுக்கு அருகில்
தகுந்த வடிகட்டியை (solar filter) ஒட்ட வேண்டும். வடிகட்டி
இல்லாமல் புகைப்படம் எடுக்கக் கூடாது.

6) பிற காமிராக்கள் மூலம் புகைப்படம் எடுக்கும்போதும்
தகுந்த வடிகட்டியை ஒட்ட வேண்டும்.

7) தகுந்த நல்ல தரமான கதிர்வீச்சு வடிகட்டிகள்
இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது.

8) குழந்தைகள் கையில் மொபைல் போன் இருப்பதால்
பெற்றோர்கள் தகுந்த கண்காணிப்புடன் இருக்க
வேண்டும்.

சூரிய கிரகணத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?
---------------------------------------------------------------------------
சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும்
கதிர்வீச்சில் இருந்து உரிய முறையில் பாதுகாத்துக்
கொண்டு தாராளமாக சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.
சூரிய ஒளியின் intensityஐ லட்சத்தில் ஒரு பங்காகக்
குறைக்க வல்ல வடிகட்டிகளை அணிந்து கொண்டு,
வீட்டை விட்டு வெளியே வந்து சூரிய கிரகணத்தைப்
பார்க்கலாம். பின்ஹோல் காமிராவுடன் கூடிய
ப்ரஜெக்டர் மூலமாகப் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை
ஒரு SURFACEல் விழச் செய்து, அந்த REFLECTED IMAGEஐப்
பார்க்கலாம்.   
*************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக