ஞாயிறு, 1 டிசம்பர், 2019

அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.‌ அரசும் நிர்வாகமும் கபடத்தனமாக விரிந்துள்ள VRS- 2019 என்ற மாயவலையிலிருந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள்/ அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. செவ்வாய் கிழமை ( 03/12/19)மாலை முடிய இதற்கு நேரம் இருக்கிறது.பணம் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையின் காரணமாக இந்த திட்டத்தின் ஆபத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாமல் அதன் விவரம் அறியாமல் தவறுதலாக விருப்பம் தெரிவித்துவிட்ட ஊழியர்கள் அந்த தவறை சரிசெய்ய ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது. அதனை தாமதமின்றி பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். வேதனை அளிக்கும் அம்சம் என்னவென்றால் எந்த தொழிற்சங்கமும் இதுகுறித்து ஊழியர்களுக்கு போதுமான எச்சரிக்கை தராதது தான். மாறாக சில" தொழில்" சங்க தலைவர்கள் அரசின் இந்த ஆட்குறைப்பு திட்டத்திற்கு பகிரங்கமாக வக்காலத்து வாங்குகிறார்கள். வேறு சிலரோ VRS -2019 ல் ஓய்வுபெறுவோருக்காக என பிரத்யேக ஓய்வூதியர் சங்கம் அமைக்க ஆயத்தப் பணிகளை துவக்கியுள்ளனர். அவர்களின் வசூல் வேட்டையும் துவங்கிவிட்டது. தொழிற்சங்க இயக்கத்தில் " கருநாகங்கள்" புகுந்துவிட்டிருப்பதைத் தான் இத்தகைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. அரசின் இந்த ஆட்குறைப்பு திட்டத்திற்கு ஊழியரிடையே ஆதரவு பெருகியுள்ளதற்கு காரணம் என்ன? 1) எதிர்காலத்தைப் பற்றி கிளப்பிவிடப்படும் உண்மையற்ற அச்சம்/பயம் 2) பல மாதங்களாக ஊதியம் உரிய தேதியில் வழங்கப்படாத அவலம். இதனை சங்கங்கள் கண்டுக் கொள்ளாத அவலம். 3) பெரும் தொகை (?) Ex-gratia என்ற பெயரில் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கை. உண்மை நிலை என்ன ? -------------------------------------------- 1) பெருந் தொகை Ex-gratia வாக கிடைக்கும் என்பதே ஒரு மோசடி. ஊழியர் ஓய்வு பெறும் போது அவருக்கு நியாயப்படி - சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பென்ஷன் கம்யூடேசன் + கிராஜிவடி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பெருந்தொகையை சட்டவிரோதமாக வழங்கமறுத்து அரசும் நிர்வாகமும் ஆறுதல் பரிசாக ஒரு சிறு தொகையை மட்டும் Exgratia என்ற பெயரில் ஊழியர்களுக்கு அதுவும் இரண்டு தவணையில் தந்து ஏமாற்றுகின்றன. இதனால் ஊழியருக்குத் தான் பெரும் நட்டம். 2) ஓய்வூதியம் சம்பந்தமாக தெளிவுபடுத்த பொறுப்பும் அதிகாரமும் உள்ள DOP & PW மற்றும் DOT உள்ளிட்ட அரசு இலாக்காக்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்காது வேண்டும் என்றே கள்ள மெளனம் சாதிக்கின்றன. ஆனால் எந்த அதிகாரமும் பொறுப்பும் இல்லாத பிஎஸ்என்எல் அதிகாரிகள் மட்டும் கிளிப்பிள்ளை போல " எல்லாம் தற்போது போல தொடர்ந்து கிடைக்கும் என" பொத்தாம் பொதுவாக சமாதானம் சொல்லுகிறார்கள். ( ஆற்றல்மிகு நம் தலைவர் குப்தா அரும்பாடுபட்டு பாதுகாத்த அரசு ஓய்வூதியத்தை இன்று அரசு நீர்த்துப்போகச் செய்து விட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். Rule 37 A அடிப்படையில் ஓய்வூதியம் அரசின் நிதியிலிருந்து அரசு ஊழியர்களுக்கு அமலாகும் ஃபார்முலாவின்படி வழங்கப்பட்டாலும் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்ட 01-01-2016 தேதி முதலான Pension revision நான்காண்டாய் நமது ஓய்வூதியருக்கு அரசால் நியாயமே இல்லாமல் மறுக்கப்படுகிறது. காரணம் கேட்டால் நொண்டிச் சாக்கு வியாக்கியானம் செய்யப்படுகிறது) 3) 31-01-2020 தேதிக்குப் பிறகு VRS -2019 ல் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு எந்த பணப்பலனும் வழங்கப்பட மாட்டாது என நிர்வாகம் தெளிவு படுத்துவிட்டது. 01-02-20 அன்று கிடைக்க வேண்டிய இன்கிரிமென்ட், NEPP பதவிஉயர்வு, மூன்றாம் ஊதிய உயர்வு, அதன் பயனாய் ஏற்படும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட எந்த பலனும் கிடைக்காது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 31-01-2020 அன்று பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு தொகையை ( Ex-gratia) நஷ்ட ஈடாக தந்து தனது ஊழியரை mutual concent அடிப்படையில் விவாகரத்து ( Divorse) செய்துவிடுகிறது. அதற்கு பிறகு அந்த ஊழியருக்கும் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் சட்டப்படி இல்லை. அன்றைய தேதிக்குப் பிறகு இவ்வாறு ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு அரசாங்கம் தான் அவர்களின் ஓய்வூதியத்திற்கு பொறுப்பு. ஆனால் DOP& PW மற்றும் DOT ஆகிய இரு அரசுத் துறைகளும் இதுகுறித்து நாம் விளக்கம் கேட்டப் பிறகும் பதில் எதுவும் கூறாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பதன் மர்மம் நமது நலன்களுக்கு ஆபத்து இருப்பதை ஐயமின்றி நிரூபிக்கிறது. 27/09/2000 அன்றைய மத்திய அமைச்சரவை முடிவின்படி பணிபாதுகாப்பு நமது ஊழியர்களுக்கு உறுதிசெய்யப்பட வேண்டும்.எனவே மாதந்தோறும் ஊதியம் உரிய தேதியில் வழங்காவிட்டால் நமது ஊழியர்களை அரசே ( DOT) ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது தான் முறை. அதைவிடுத்து எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக உள்ளது - மாத ஊதியம் தாமதமாகிறது என்ற காரணத்தால் வெளியேறி தப்பித்துக் கொள்ள நினைப்பது மிகவும் தவறான அணுகுமுறை. அரசுக்கு நம்மை பாதுகாக்க வேண்டிய கடமை தார்மீகப்படி- சட்டப்படி உள்ளது. இந்த பொறுப்பில் இருந்து அது நழுவிஓட விடக்கூடாது. சிந்திப்பீர்! செயல்படுவீர் ! தோழமை அன்புடன் சி.கே.எம். மாநிலச் செயலாளர் NFTE-BSNL செ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக