வெள்ளி, 20 டிசம்பர், 2019

வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலையாக அசாம்!
வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை உடைக்கும்
அருந்ததி ராய் போன்ற என்ஜிஓ கைக்கூலிகள்!
வந்தேறிகளை விரட்டி அடிக்க முடிவு செய்த அசாமியர்கள்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
1) வங்கதேசத்தில் இருந்து வந்த வந்தேறிகளில், மத ரீதியான சித்திரவதைக்கு (religious persecution) இலக்கான இந்து மத
வந்தேறிகளுக்கு CAA சட்டம் குடியுரிமை வழங்குகிறது.
இஸ்லாமிய வந்தேறிகளுக்கு குடியுரிமை வழங்கப் படவில்லை.

2) இது பாரபட்சமா என்றால் நிச்சயம் பாரபட்சம்தான்.
இந்தப் பாரபட்சம் பற்றி 3.13 கோடி அசாம் மக்களும்
என்ன கருதுகிறார்கள்? அவர்கள் இதுபற்றி துளியும்
அக்கறை கொள்ளவில்லை அசாமியர்கள் புத்திசாலிகள்.
அவர்கள் மதம் என்னும் நச்சுச் சுழலுக்குள் சிக்கிக்
கொள்ளாதவர்கள்.

3) இந்து வந்தேறியோ இஸ்லாமிய வந்தேறியோ எந்த
வந்தேறியும் அசாமில் இருக்கக் கூடாது! எந்த வந்தேறிக்கும்
குடியுரிமை கொடுக்கக் கூடாது! எனவே 19 லட்சம்
வந்தேறிகளையும் உடனடியாக அசாமை விட்டு
வெளியேற்றுங்கள் என்பதே அசாமியர்களின் ஒரே
கோரிக்கை. இந்த ONE POINT AGENDAஐ அனைத்து
அசாமியர்களும் உறுதியாகப் பற்றி நிற்கிறார்கள்.

4) அசாமியர்களின் இந்த ONE POINT AGENDAஐ ஏனைய
இந்தியா (rest of India)  புறக்கணிக்கிறது. நாற்பதாண்டு காலம்
நீடித்து வரும் அசாம் போராட்டத்தை, 860 உயிர்களை
அரச பயங்கர வாதத்திற்குப் பலிகொடுத்த அசாம்
போராட்டத்தைப் புறக்கணிப்பது பெருந் தற்குறித்தனம்
மட்டுமல்ல பெருங் கயமையும் ஆகும்.

5) தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களை
அரச பயங்கர வாதத்திற்கு அண்மையில் நாம் பலி
கொடுத்தோம். அது குறித்து எவ்வளவு வேதனை
அடைகிறோம்! சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
போராளிகளைச் சுட்டுக் கொன்ற அரசின்
பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

6) ஆனால் அசாம் மக்கள் 860 பேரைப் பலி கொடுத்தவர்கள்.
எதற்காக? மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தைப்
பறிக்கும் வந்தேறிகளை வெளியேற்றக் கோரி.
வந்தேறிகள் வெளியேறி விட்டார்களா? இன்னும் இல்லை.

7) மோடி அரசும் அமித்ஷாவும் மூன்று மாத அவகாசம்
கொடுத்து, அசாமில் தங்கி இருக்கும் 19 லட்சம்
வந்தேறிகளையம் உடனடியாக அசாம் மண்ணை விட்டு
வெளியேற்ற வேண்டும்.

8) மோடி அமித்ஷாவுக்கு அசாமிய மக்கள் கடுமையான
எச்சரிக்கை விடுக்கிறார்கள். 19 லட்சம் வந்தேறிகளையும்
நீங்கள் வெளியேற்றப் போகிறீர்களா? அல்லது நாங்கள்
வெளியேற்றவா என்று கேட்கிறார்கள்.

9) வந்தேறிகளை வெளியேற்றும் வேலையை அசாமியர்களே
மேற்கொண்டால் என்ன நடக்கும்? மீண்டும் அசாமில்
ரத்த ஆறு ஓடும். நூற்றுக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும்
உயிர்ப் பலிகள் நிகழும். தினசரி 10 பிணம் விழும்!

10) எந்த நேரமும் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலை
போல அசாம் உள்ளது. 19 லட்சம் வந்தேறிகளையும்
வெளியேற்றாமல் அசாமிய மக்கள் ஓய மாட்டார்கள்.

11) எனவே இந்த நேரத்தில் 137 கோடி மக்களும் ஒன்று
திரண்டு. ஒரே குரலில் அசாமில் உள்ள 19 லட்சம்
வந்தேறிகளையும் வெளியேற்றுமாறு குரல் கொடுக்க
வேண்டும். வெளியேற்றப்பட்ட அவர்களை மேற்கு வங்க
மாநிலத்தில் முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

12) ஆனால், இந்தியாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல்
கட்சிகளும், குட்டி முதலாளித்துவத் தற்குறிகளும்,
பின்நவீனத்துவக் கயவர்களும் அசாம் பிரச்சினையின்
தீவிரத்தை உணரவில்லை. அவர்கள் அசாமிய தேசிய
இனத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்கள்.
அவர்கள் ஏகாதிபத்தியத்தின் வேலைத்திட்டத்தைச்
செயலாக்கும் கைக்கூலிகள்!

13) கிடக்கிற வேலை கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி
மணையில் வை என்ற கதையாக, இந்தியாவின் குட்டி
முதலாளித்துவத் தற்குறிகள், வந்தேறிகளுக்கான
குடியுரிமைப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து
அசாமியர்களின் போராட்டத்தைச் சீர்குலைக்கிறார்கள்.

14) வங்கதேச இஸ்லாமிய வந்தேறிகளுக்குக் குடியுரிமை
இல்லை என்பது நிச்சயம் பாரபட்சமே. அது தலை போகிற
விஷயமல்ல. முன்னுரிமை வாய்ந்த விஷயமும் அல்ல.
முதலில் வந்தேறிகளை அசாமில் இருந்து வெளியேற்ற
வேண்டும்; அது போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும்.

15) வந்தேறிகளை வெளியேற்றச் சொல்லி அசாம் மக்கள்
போராடுகிறார்கள். இது முற்போக்கான போராட்டம்;
தேசிய இன உரிமைக்கான போராட்டம்.

16) வந்தேறிகளை வெளியேற்றக் கூடாது; அவர்களுக்குக்
குடியுரிமை வழங்கி அசாமிலேயே தங்க வைக்க வேண்டும்
என்று இந்தியாவின் பிற மாநிலங்களில் போராடுகிறார்கள்.
இது பிற்போக்கான போராட்டம். தேசிய இனங்களுக்கு
எதிரான போராட்டம். இது ஈழத்தமிழ் தேசிய இனத்தை
அழித்த ராஜபக்சேவின் போராட்டம்!

17) அசாம் போராட்டம் முடிவுக்கு வருவதை அமெரிக்க
ஏகாதிபத்தியம் விரும்பவில்லை. அது அருந்ததி ராய் போன்ற
என்ஜிஓ கைக்கூலிகளை ஏவி விட்டு, அசாம் மக்களுக்கு
எதிராக வெகுஜனக் கருத்தை உருவாக்கும் வேலையைச்
செய்து வருகிறது.

18) அசாமிலும் அசாமுக்கு வெளியிலும் நடக்கும்
போராட்டங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்
கொண்ட எவர் ஒருவரும் அசாமிய மக்களின்
போராட்டத்தையே ஆதரிக்க முடியும். அசாம் மக்களுக்கு
எதிர் முகாமில் இருப்பவன் தேசிய இன எதிரியே!
அவன் ஏகாதிபத்தியக் கைக்கூலியே!
**************************************************** 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக