சனி, 21 டிசம்பர், 2019

அசாம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முக்கியமா?
வந்தேறிக்கு லெக் பீஸ் கேட்டுப் போராடுவது முக்கியமா?
---------------------------------------------------------------------------------------
நாடே இரண்டுபட்டுக் கிடக்கிறது.
இரண்டு முகாம்களாகப் பிரிந்து கிடக்கிறது.

வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும் என்று ஒரு முகாம்.
வெளியேற்றக் கூடாது என்று ஒரு முகாம்.

இந்த இரண்டில் நீ எந்த முகாமில் இருக்கிறாய்?
சொல் குட்டி முதலாளித்துவமே!

குடியுரிமை கேட்கும் குட்டி முதலாளித்துவமே,
நீ அசாம் மக்களுக்கு எதிராக நிற்கிறாய் என்று
உன் மண்டையில் உறைக்கவில்லையா? 

19 லட்சம் வந்தேறிகளையும் வெளியேற்றாமல்
அசாம் மக்கள் ஓய மாட்டார்கள் என்று உனக்குத்
தெரியாதா?  அசாம் மக்களுக்கு என்ன பதில்
வைத்திருக்கிறாய்? சொல் குட்டி முதலாளித்துவமே!

யாரை வெளியேற்ற வேண்டும் என்று அசாமியன்
சொல்கிறானோ, அவனுக்குக் குடியுரிமை கேட்கிறாயே
குட்டி முதலாளித்துவமே,
உனக்கு மனச்சாட்சியே  கிடையாதா?

CAB, CAA, குடியுரிமைச் சட்டம் இதற்கெல்லாம் மூல காரணம்
அசாம் பிரச்சினைதான் என்பதை ஏன் திட்டமிட்டு
மறைக்கிறாய், குட்டி முதலாளித்துவமே?

அசாம் பிரச்சினையைப் பேசாமல், அசாம் ஒப்பந்தத்தை
அமல் படுத்துவது பற்றிப் பேசாமல், வெறுமனே
வந்தேறிக்குக் குடியுரிமை இல்லை என்று பேசுவது
நேர்மையா? சொல் குட்டி முதலாளித்துவமே!

அசாம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முக்கியமா?
வந்தேறிகளில் சிலருக்குக் குடியுரிமை வழங்குவது
முக்கியமா? எதற்கு முன்னுரிமை?
சொல் லிபரல் பூர்ஷ்வாவே!

நீ அசாமியர்களின் தேசிய இன உரிமையை
மதிப்பதானால், குடியுரிமைப் போராட்டம் நடத்தி
அசாம் போராட்டத்தைச் சீர்குலைக்காதே! 

நான் அசாம் போராட்டத்தையும் ஆதரிக்கிறேன்;
குடியுரிமைப் போராட்டத்தையும் ஆதரிக்கிறேன்
என்று நீ சொல்வாய் என்றால், பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழன் என்ற இரண்டக நிலையை
நீ எடுக்கிறாய் என்றே பொருள்!

அசாமே பற்றி எரியும்போது, சில வந்தேறிகளுக்கு
லெக் பீஸ் இல்லை என்று போராடுகிறாயே,
நீ மனிதன் தானா?

860 அசாமியர்கள் செத்தது போதாதா?
இன்னும் எத்தனை அசாமியனின் உயிரைப்
பலி கேட்கிறாய், ரத்த வெறி பிடித்த மிருகமே?
***************************************************
NRC என்பதில் National என்ற சொல் இருந்தாலும்,
அது அசாமுக்கு மட்டும்தான். இது அசாம் மக்களுக்கு
நன்கு தெரியும். உச்சநீதி மன்றம் கிடுக்கிப்பிடி
போட்ட பின்னரே வந்தேறிகளை அடையாளம்
காணும் பணி வேகம் எடுத்தது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் நடைபெறும்
போராட்டம் அசாம் போராட்டத்தைச் சீர்குலைக்கும்
தீய உள்நோக்கம் கொண்டது. என்ஜிஓக்கள்
தலையிட்டு நடத்தும் போராட்டம் இது.
ஏகாதிபத்தியத்தின் வேலைத்திட்டப்படி நடக்கும்
போராட்டம் இது. இது அசாம் மக்களுக்கு எதிரானது.


அது சரி.

தங்கள் மாநிலத்தில் போராட்டம் வெடிக்காமல்
இருப்பதற்காக, மாநில முதல்வர்கள் சில
வாக்குறுதிகளை அளித்து போராட்டக்காரர்களை
சமாதானப் படுத்தும் உத்தியைக் கையாள்வார்கள்.
அப்படிப்பட்ட விஷயம்தான் இது. இதையெல்லாம்
பெரிது படுத்துவது தேவையற்றது.

மாநில முதல்வர்கள் சட்டம் ஒழுங்கைக் காக்கும்
பெரிய பொறுப்பை உடையவர்கள். அதற்காக
அவர்கள் CAAயை அமல்படுத்த மாட்டேன்
என்றெல்லாம் பேசுவார்கள். இதனால் அரசு
தமக்கு சாதகமாக இருக்கிறது என்ற பிரமையை
போராட்டக்காரர்கள் அடைவார்கள். இதெல்லாம்
பூர்ஷ்வா அரசியலின் உத்தி. அதே நேரத்தில் CAAஐ
சந்தடி இல்லாமல் அமல் படுத்தி விடுவார்கள்.


ரகுபதி

இதுதான் சரி. ஆனால் அன்றைய காங்கிரஸ்
அரசும் அதைச் செய்யவில்லை. இன்றைய
மோடி அரசும் இதைச் செய்யவில்லை.
இந்திய-பாக் எல்லை கட்டுக்காவல் மிக்கது.
ஆனால் இந்திய-வங்கதேச எல்லை திறந்து கிடப்பது.
Barbed wire fence அமைக்க வேண்டும்.
  

 




 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக