புதன், 18 டிசம்பர், 2019

டிசம்பர் 26ல் உலகில் வளையல் வடிவ (ring type)
சூரிய கிரகணம் தெரியும். நம் நாட்டில்
தென்னிந்தியாவில் தெரியும். சென்னையில்
இது பகுதி அளவில் (partial) தெரியும்.

எல்லோரும் பார்க்கலாம். உரிய கண்ணாடி அணிந்து
கொண்டு மட்டுமே பார்க்க வேண்டும். எக்காரணம்
கொண்டும் வெறுங் கண்ணால் பார்க்கக் கூடாது.
கர்ப்பிணிகள் கூடப் பார்க்கலாம் உரிய கண்ணாடி
அணிந்து கொண்டு. 



சூரிய கிரகணம் தெரியும் இடங்கள்! 
அந்த இரண்டு சிவப்புக் கோடுகளுக்கு
இடைப்பட்ட பகுதிகளில் கிரகணம் தெரியும்.


வளையல் வடிவ (annular) கிரகணம் தெரியும் இடங்கள் அடர்ந்த
வண்ணத்திலும், குறைவான அளவு (partial) கிரகணம் 
தெரியும் இடங்கள் அடர்த்தி குறைந்த வண்ணத்திலும்
காட்டப்பட்டுள்ளன. பெரிய அளவிலான படத்தில் மட்டுமே
இது தெளிவாகத் தெரியும்.

உதாரணமாக கோயம்புத்தூர், ஈரோடு
பாலக்காடு ஆகிய ஊர்களில் annular eclipse தெரியும்.
சென்னையில் partial eclipse மட்டுமே தெரியும்.

ஒவ்வொரு இடத்தில் எந்த அளவு (magnitude) தெரியும்
என்பதற்கு அட்டவணை உள்ளது. விரிவான விளக்கக்
கட்டுரை பின்னர்.

ECLIPSE MAP இந்த லிங்கில்(அடுத்த கமென்டில்)  உள்ளது.
விரும்புவோர் பார்க்கலாம்.


உங்கள் ஊரில் கிரகணம் தெரியுமா?
விடை இந்த மேப்பில் உள்ளது!
----------------------------------------------------
டிசம்பர் 26, 2019 annular solar eclipse!
--------------------------------------------------- 
டிசம்பர் 26 சூரிய கிரகணம் தெரியும் இடங்களைப்
பற்றிய வரைபடம் (Map)!
ஒரு ஊரில் 100 சதவீதம் அளவு கிரகணம் தெரியும்.
இன்னொரு இடத்தில் 80 சதவீதம் தெரியும்.
பிறிதொரு இடத்தில் 30 சதவீதம் தெரியும்.

உங்கள் ஊரில் எவ்வளவு தெரியும் என்பதைக்
காட்டும் வரைபடம் இது.

வாசக அன்பர்கள் தங்கள் தங்கள் ஊரில் எவ்வளவு
தெரியும் என்பதைக் கண்டறியவும்.
இந்தப் பதிவில் கோக்கப்பட்ட நண்பர்கள்
பிற வாசகர்களுக்கு விளக்கிச் செல்லும்படி
கேட்டுக் கொள்கிறேன்.சொ
------------------------------------------------------------------

திருச்சிக்காரர்களுக்கு ஓர் அறிவிப்பு!
---------------------------------------------------------------
உங்கள் ஊரில் கிரகணம் தெரியும். எந்த அளவு
தெரியும் என்பதை இந்த மேப்பின் உதவியால் கண்டறிக.
இந்த மேப் ஒரு வரப்பிரசாதம். இதை ஒவ்வொருவரும் நன்கு
பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்.

நான் மாணவனாக இருந்த காலத்தில் இந்த
வசதியெல்லாம் கிடையாது. இன்றுள்ள பிள்ளைகளுக்கு
இது அரிய வாய்ப்பு. இதன் மகத்துவத்தை உணருங்கள்.
புறக்கணித்து விட்டுச் செல்லாதீர்கள்.

புறக்கணிக்கும் எவரும் தன் வாழ்நாள் முழுவதும்
அடிமுட்டாளாக இருப்பார்கள் என்பது திண்ணம்!

வாசக அன்பர்களே,
மதுரையில் எவ்வளவு தெரியும்?
திருநெல்வேலியில் எவ்வளவு தெரியும்?
மேலே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள்.
கோவை, திருப்பூர், உதகை, நீலகிரி, திண்டுக்கல்,
சிவகங்கை ஆகிய இடங்களில் எவ்வளவு தெரியும்
என்பதைக் கண்டு களியுங்கள்.

 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக