வெள்ளி, 6 டிசம்பர், 2019

BSNLன் மொபைல் சேவை: ஒரு சுருக்கமான வரலாறு!
வயர்லெஸ் தொழில்நுட்பம் ஊழியர்களிடம்
ஏற்படுத்திய தாக்கம்!
---------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
1995 வரை தொலைதொடர்பு என்பது அரசின் ஏகபோகமாக
இருந்தது. 1995ல்தான் அன்றைய பிரதமர் நரசிம்மராவ்,
அன்றைய தொலைதொடர்பு அமைச்சர் சுக்ராம் ஆகிய
இருவரும் சேர்ந்து NTP எனப்படும் புதிய தொலைத்தொடர்புக்
கொள்கையை உருவாக்கினர் (New Telecom Policy).

இக்கொள்கையே தொலைதொடர்பில் அரசின் ஏகபோகத்தைத்
தகர்த்து, தனியார் நுழைவை (private entry) அனுமதித்தது.
Private entry is different from privatisation என்பதை வாசகர்கள்
உணர வேண்டும்.

NTP கொள்கை தொலைதொடர்பு சேவையை இரண்டு
பகுதிகளாகப் பிரித்தது.
1. அடிப்படை சேவை (Basic Service)
2. மதிப்பு கூட்டிய சேவை (Value Added Service).

அடிப்படை சேவை என்பது தரைவழி தொலைபேசி சேவை.
அதாவது Landline telephone service.
மதிப்பு கூட்டிய சேவை என்பது புதிதாக அறிமுகமாகும்
மொபைல் சேவை.
     
அடிப்படை சேவையில் அரசின் தொலைத்தொடர்புத்
துறையும், மொபைல் சேவையில் தனியாரும் என்று
முடிவானது. அதன்படி இந்தியாவின் நான்கு மெட்ரோ
நகரங்களில் மட்டும் ( மும்பை, டில்லி, சென்னை,
கொல்கொத்தா) மொபைல் சேவையானது அறிமுகம் ஆனது.

இந்தியாவின் முதன் முதல் மொபைல் தொலைபேசிப்
பேச்சு தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராம் மேற்கு
வங்க  முதல்வர் ஜோதிபாசுஆகிய இருவருக்கும் இடையில்
(டில்லியில் இருந்து கொல்கொத்தாவுக்கு) நிகழ்ந்தது.
நிகழ்ந்த நாள்: 31 ஜூலை 1995.

இந்த நாள் இந்தியத் தொலைதொடர்பு வரலாற்றில் ஒரு
மகத்தான நாள். இந்த நாளில் இருந்துதான் இந்தியாவில்
வயர்லெஸ் யுகம் (wireless era) தொடங்குகிறது. இதற்கு
முன்பிருந்த வயர்லெஸ் என்பது ராணுவம் மற்றும் போலீசின்
பயன்பாட்டுக்கான முதல் தலைமுறை ( 1G) வயர்லெஸ்
மட்டுமே. மக்களுக்கான வயர்லெஸ் 2G அலைக்கற்றையுடன்
மொபைல் தொலைபேசியுடன் தொடங்கியது.

நான்கு மெட்ரோ நகரங்களில் மட்டும் தொடங்கப்பட்ட
மொபைல் சேவையில் ஆரம்பத்தில் பெருமுதலாளிகள்
யாரும் ஆர்வம் காட்டவில்லை. டாட்டா, பிர்லா, அம்பானி
என்று எவருமே இதில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
இத்துறையில் அரசின் கட்டுப்பாடு அதிகமாய் இருக்கும்
என்பதால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது என்று
அவர்கள் கருதினர்.

எனவே தொடக்க காலத்தில் இடைத்தட்டு முதலாளிகளே
(middle level) மொபைல் சேவையில் ஈடுபட முன்வந்தனர்.
BPL நிறுவனத்தின் சந்திரசேகர், ஏர்செல்லின் சிவசங்கரன்
ஆகியோரே மொபைல் சேவை  வழங்க முன்வந்தனர்.
பின்னர்தான் டாட்டா, பிர்லா, அம்பானி ஆகியோர்
மொபைல் சேவையில் ஈடுபட்டனர்.

2G அலைக்கற்றையுடன் தொடங்கிய மொபைல் சேவையில்
BSNL தாமதமாகத்தான் ஈடுபட்டது. இந்த மில்லேனியத்தின்
முதல் புத்தாண்டின் பிற்பகுதியில்தான் மொபைல் சேவையில்
BSNL  ஈடுபட்டது. அப்போது GSM, CDMA ஆகிய இருவகைத்
தொழில்நுட்பம் மொபைல் சேவையில் இருந்தது. GSM தான்
80 சதத்திற்கும் மேற்பட்டு மேலோங்கி இருந்தது.

இக்காலக் கட்டத்தில், 2005ஆம் ஆண்டை ஒட்டி, BSNLல் இந்தியா
முழுவதும் சேர்த்து ஊழியர்களும் அதிகாரிகளுமாக நாலு லட்சம் பேர்
இருந்தனர். இவர்களில் பெரும் பகுதியினர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில்
பணிபுரியும் கல்வித் தகுதி பெற்றவர்கள் அல்லர்.
இக்காலக்கட்டத்தில் ANALOGUE தொழில்நுட்பம் முற்றிலுமாக
மாற்றம் அடைந்து DIGITALக்கு வந்தாகி விட்டது. 90களிலேயே
செமி ஆட்டமாடிக் எக்சேஞ்சுகள் அகற்றப்பட்டு fully automated exchanges
வந்து விட்டன.

எனவே புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்வதற்காக
Communication engineering படித்த BE, BTech பட்டதாரிகளை
BSNL நிறுவனம் வேலைக்கு எடுத்தது. இவர்களே BSNLஐ
தாங்கி நின்றனர். புதிய தொழில்நுட்பத்திலும் உயர்
தொழில்நுட்பத்திலும் இவர்களே வேலை செய்தனர்.
இவர்களால் மட்டுமே அதில் வேலை செய்யவும் முடிந்தது.

இக்காலக் கட்டத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை சுமார்
60,000 ஆகும். இவர்களில் கீழ்மட்ட ஊழியர்களாக இருந்து
பதவி உயர்வுகளின் மூலமாக அதிகாரிகளாக வந்தவர்களே
அதிகம். JTO (Junior Technical Officer), SDE (Sub Divisional Engineer),
DE (Divisional Engineer), DGM (Deputy General Manager) ஆகிய
பதவிகளில் பெரும்பகுதியினர் கீழ்நிலை ஊழியர்களாக
இருந்து பதவி உயர்வுகள் மூலமாக அதிகாரிகளாக
வந்தவர்களே. இவர்கள் யாருக்கும் உரிய கல்வித் தகுதியோ
அல்லது தொழில்நுட்ப அறிவோ இல்லை. எனவே நிறுவனமானது
நேரடி நியமனம் மூலமாக வந்த பொறியாளர்களையே சார்ந்து இருந்தது.

Marketing, Accounts பகுதியிலும் இதே நிலைதான். எங்கும்
promotee officersன் ஆதிக்கம். இச்சூழலில் BSNLக்குள் நுழைந்த
பொறியியல் பட்டதாரிகள் Promotee officerகளால் நிறைந்த
SNEA, AIBSNLEA ஆகிய சங்கங்களில் சேர மறுத்தனர்.,

தங்களுக்கென்று புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கிக்
கொண்டனர். அதுதான் AIGETOA (All India Graduate Engineer
Telecom Officers Association). அதே போல டிப்ளமா படித்தது விட்டு
டெக்னிக்கல் அசிஸ்டன்டாக வேலைக்குச் சேர்ந்த
டிப்ளமாதாரர்களும் தங்களுக்கென்று SNATTA என்ற
(Sanchar Nigam Association of Telecom Technical Assistants)
சங்கத்தை உருவாக்கிக் கொண்டனர்.

ஆக Wired technology என்பதில் இருந்து, Wireless technologyக்கு
இந்தியா மாறியது. ஆனால் BSNL மிக மெதுவாகவே மாறியது.
புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்ய
இயலாத, ஆனால் அதிக எண்ணிக்கையில் உள்ள
sluggish work force ஒருபுறம் .குறைந்த எண்ணிக்கையில் உள்ள
புதிய தொழில்நுட்பப் பகுதியில் பணியாற்றுகின்ற.
BSNLஐ தாங்கி நிற்கிற நேரடி நியமனப் பணியாளர்கள்.         
மறுபுறம்.  காலப்போக்கில், பதவி உயர்வில் வந்த
ஊழியர்கள்-அதிகாரிகளுக்கும் நேரடி நியமனத்தில் வந்த
பொறியாளர்கள்-டிப்ளமாதாரர்களுக்கும் இடையில்
ஒரு சுவர் செங்கல் செங்கலாக எழும்பியது. இன்று அது
ஒரு பெர்லின் சுவராக நிலைபெற்று விட்டது.

VRSஐ பற்றியோ பென்ஷன் பற்றியோ மேற்கூறிய
நேரடி நியமன ஊழியர்கள் (பொறியியல் பட்டதாரிகள்)
மற்றும் அதிகாரிகளுக்கு எத்தகைய அக்கறையோ கவலையோ
கிடையாது.ஏனெனில் அவர்களின் சங்கங்களில் இருந்து
VRSக்கு விண்ணப்பிக்க ஒருவருக்குக் கூட eligibility இல்லை.
ஏனெனில் அவர்களில் யாருக்கும் 50 வயது ஆகவில்லை.                    
மேலும் அவர்களின் பென்ஷன் என்பது அரசின் பணத்தில்
இருந்து தரப் படுவதில்லை. அவர்களின் சொந்த
contributionல் இருந்து (மாதந்தோறும் பிடிக்கப்பட்டு)
இறுதியில் வழங்கப்படும் பணம்.

எனினும் நேரடி நியமன ஊழியர்களும் அதிகாரிகளும்
இந்த VRSஐ வரவேற்கின்றனர். வேண்டாத சுமையாக
இருந்து கொண்டு தங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும்
Promoteeகளின் ஆதிக்கம் BSNLல் முடிவுக்கு வருகிறது
என்பதால் அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

தற்போது தொழிற்சங்க அரங்கில் Promoteeகளின்
சங்கங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக
இடமாற்றல் (postings and transfers)  போன்ற விஷயங்களில்
Promotee Officerகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இதற்குக் காரணம் அவர்களின் numerical strength மற்றும்
அதன் விளைவான வலிமையான கூட்டு பேர சக்தி.
இது இப்போது முடிவுக்கு வருகிறது. இதுகாறும்
பின்கட்டில் இருந்த இவர்களின் சங்கங்கள் இனி
முதன்மை பெறும். இவர்களை நம்பித்தான் BSNL
செயல்பட வேண்டும் என்பதால், உயர் அதிகாரிகளும் இனி
இவர்களின் சங்கங்களுக்கு (SNATTA, AIGETOA)  
முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்க இயலாதது.
***********************************************************   


.   




   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக