வெள்ளி, 6 டிசம்பர், 2019

VRSல் அல்ல, புத்தாக்கத்திலேயே
சங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்!
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், NFTE, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
----------------------------------------------------------------- 
இந்தியாவின் எண்ணெய்த் துறையில் இரண்டாவது
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் BPCL எனப்படும்
பாரத் பெட்ரோலியம் நிறுவனம். அதிகமாக லாபம்
ஈட்டுகிறது இந்நிறுவனம்.  உதாரணமாக 2019 மார்ச்சில்
ரூ 7132 கோடியை Reported PATஆகக் கொண்டுள்ளது.
(PAT =Profit After Tax).

லாபமீட்டும் இந்நிறுவனத்தை தனியாருக்கு, அதுவும்
அந்நிய Global நிறுவனத்துக்கு விற்கும் முயற்சிகளை
மோடி அரசு மேற்கொண்டுள்ளது.

பாரத் பெட்ரோலியத்தின் மதிப்பு ரூ 1.1 லட்சம் கோடி
என்று கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்குகளில்
அரசு 53.3 சதம் பங்குகளை விற்கப் போகிறது. இந்தப்
பங்குகள் ரூ 60,000 கோடி மதிப்புள்ளவை. 

நஷ்டம் வந்தால்தான் விற்பார்கள்; லாபம் ஈட்டும்
நிறுவனத்தை விற்க மாட்டார்கள் என்பதெல்லாம்
எப்பேர்ப்பட்ட மூட நம்பிக்கை!

நவரத்னா அந்தஸ்தைப் பெற்று விட்டால் அல்லது
மகாரத்னா அந்தஸ்தைப் பெற்று விட்டால், விற்க
மாட்டார்கள் என்பதெல்லாம் வெறும் ஐதீகம்!

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் நடப்பு
நிதியாண்டில் ரூ 1.05 டிரில்லியன் கோடி அளவு நிதியைத்
திரட்ட மோடி அரசு இலக்கு வைத்துள்ளது.
(1 டிரில்லியன் = லட்சம் கோடி). பாரத் பெட்ரோலியத்தை
விற்றால்தான் இந்த இலக்கை எட்ட முடியும்.

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் 33 பொதுத்துறை
நிறுவனங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
Pawan Hans என்னும் ஹெலிகாப்டர் நிறுவனம், Scooters India
நிறுவனம், Bharath Pumps and Compressors நிறுவனம் ஆகியவை
சில உதாரணங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே
இவற்றை விற்க முயற்சிகள் நடந்தன. ஆனால் வாங்குவார்
யாருமில்லை.

ஆர் எஸ் எஸ்சின் அழுத்தம் தோல்வியுற்றது ஏன்?
-----------------------------------------------------------------------------
இப்போது ஒரு கேள்வி! நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை
நிறுவனங்களை விற்கும் மோடி அரசு, அதிக நஷ்டத்தில்
இயங்கும் BSNL நிறுவனத்தை ஏன் மூடவில்லை?
அல்லது ஏன் தனியாருக்கு விற்கவில்லை?

மற்ற நிறுவனங்களை எல்லாம் சஹாரா பாலைவனத்துக்கு
அனுப்பும் மோடி அரசு, BSNLஐ மட்டும் ஏன் அனுப்பவில்லை?

BSNLஐ மூட வேண்டும் என்று நிதி அமைச்சகம் அழுத்தம்
திருத்தமாகக் கூறிய பின்னரும், BSNLஐ புத்தாக்கம் செய்ய
மோடி அரசு தீர்மானித்தது ஏன்?

BSNLஐ மூடி விட்டு அதன் சொத்துக்களை விற்றுவிட
வேண்டும் என்று மோடி அரசுக்கு ஆர் எஸ் எஸ்
அழுத்தம் கொடுத்ததே! ஆர் எஸ் எஸ்சின் அதிகாரபூர்வ
ஏடான ஆர்கனைசரில் BSNLஐ மூட வேண்டும் என்று
கட்டுரை வெளியானதே! இருந்தும் BSNLஐ மூடாமல்
ரூ 70,000 கோடி செலவில் புத்தாக்கம் செய்ய வேண்டும்
என்று மோடி அரசு முடிவெடுத்தது ஏன்?

BSNLன் சகோதரியான VSNLஐ (Videsh Sanchar Nigam Limited)
2002ல் வாஜ்பாய், அருண் ஷோரி இருவரும் சேர்ந்து
டாட்டாவுக்கு விற்றனரே! அதுவும் லாபம் ஈட்டும் நிலையில்!
ஆனால் நஷ்டத்தில் உள்ள BSNLஐ ஏன் மோடி விற்கவில்லை?

VSNLன் கதி என்ன? இன்று VSNL உயிருடன் உள்ளதா?
(VSNL என்பது International Long Distance சேவை வழங்கிய
நிறுவனம்). VSNL என்ற பெயரை 2007ல் டாட்டா மாற்றி
விட்டார். அதன் பெயர் தற்போது Tata Communications.

2011ல்  BSNLஐ புத்தாக்கம் செய்ய ஒரு VRS திட்டத்தை
சாம் பித்ரோடா முன்மொழிந்தார். ஆனால் மன்மோகன்சிங்
நிதி ஒதுக்க மறுத்து விட்டார். மன்மோகன்சிங் மறுத்த
புத்தாக்கத் திட்டத்தை மோடி அரசு ரூ 70,000 கோடி
செலவில் மேற்கொள்ளுவது ஏன்?

அம்பானிக்கும் அதானிக்கும் BSNLஐ மோடி விற்று விடுவார்
என்றீர்களே, விற்கவில்லையே ஏன்?

BSNLல் உள்ள எந்த ஒரு சங்கமும் VRSஐ எதிர்க்கவில்லையே
ஏன்?   
கேள்விகள் குரல்வளையை நெரிக்கின்றன


தொழில்நுட்பப் புரட்சியும் வயர்லெஸ் யுகமும்!
-------------------------------------------------------------------------
Annihilation of time and distance என்பதே தொலைதொடர்பின்
நோக்கம். காலத்தையும் தூரத்தையும் வெல்லும் துறையே
தொலைதொடர்பு. இந்தியாவிலேயே முதன் முதலாக
முற்றிலும் நவீன மயம் கணினிமயம் ஆக்கப் பட்டது
தொலைதொடர்பே.

Manuel exchanges, semi automatic exchanges ஆகியவை எல்லாம்
எப்போதோ fully automated exchanges ஆகி விட்டன.
Analogue அனைத்தும் digital ஆகி விட்டது. 1995ல் மாபெரும்
தொழில்நுட்பப் புரட்சி தொலைதொடர்பில் ஏற்படுகிறது.
Wired technology என்பதுடன் Wireless technologyயும்
தொலைதொடர்பில் நுழைகிறது. 1995 ஜூலை 31ல்
ஜோதிபாசுவும் சுக்ராமும் இந்தியாவின் முதன் முதல்
மொபைல் உரையாடலை மேற்கொண்டார்கள்
(From Delhi to Kolkotta). அன்று முதல் (ஜூலை 31, 1995)
இந்தியாவில் வயர்லெஸ் யுகம் பிறந்தது.

நவீன தொழில்நுட்பமும் கணினிமயமும் பாதிக்குப்
பாதி ஊழியர்களை உபரி ஆக்கி விட்டது. எனினும்
உபரி என்ற பெயரில் ஒருவரைக்கூட வெளியே
அனுப்பாமல் சங்கங்கள் பார்த்துக் கொண்டன.
இதில் தலைவர் குப்தாவின் பங்கு மகத்தானது.
அப்போது முதலே தேங்கிப்போன ஊழியர்கள்தான்
இப்போதைய VRSல் வெளியேறுகிறார்கள்.

குப்தாவின் VRS திட்டம்!
------------------------------------
மாறிய சூழலில், உபரி ஊழியர் பிரச்சினையைத் தீர்க்கவும்
புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்யத்தக்க திறன்
மிக்க ஊழியர்களை தொலைதொடர்பில் உள்ளிழுக்கவும்
தலைவர் குப்தா ஒரு VRS திட்டத்தை முன்மொழிந்தார்.

BSNLன் வரலாற்றிலேயே முதன் முதலாக VRS திட்டத்தை
முன்மொழிந்தவர் நமது ஒப்பற்ற தலைவர் ஓ பி குப்தாவே!
குப்தாவின் VRS என்பது Voluntary Replacement என்று
பொருள்படும். (நன்கு கவனிக்கவும்: R = REPLACEMENT).

படிப்பறிவு குறைந்த வயதான தொழிலாளிக்கு ஒய்வு
கொடுத்து விட்டு, அவரின் இடத்தில், பொறியியல் டிப்ளமா
படித்த அவரின் மகனுக்கு வேலை கொடுப்பதே
குப்தாவின் திட்டம். இங்கு இருமல் சத்தத்தை இளைய
ரத்தம் REPLACE செய்கிறது.

VRSஐ விட புத்தாக்கமே (Revival) முக்கியம்!
---------------------------------------------------------------
அனைத்து ஊழியர்களுக்கும் VRS மனநிறைவைத்
தருகிறது. முணுமுணுப்புகள் இல்லை. மின்னல்
வேகத்தில் ஊழியர்கள் VRSக்கு விண்ணப்பித்ததே
இதற்கான நிரூபணம். Hypotheticalஆக சில
கோரிக்கைகளை உருவாக்கும் முயற்சிகளும்
பயன் தரவில்லை. VRS சுமுகமாக முடிந்து விடும்.
எனவே BSNLன் புத்தாக்கத்தில் (Revival) சங்கங்கள்
கவனம் செலுத்த வேண்டும்.    

புத்தாக்கம் என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டது.
VRSஐ தவிர்த்துப் பார்த்தால், அ) 4G service role out
ஆ) asset monetization ஆகிய அம்சங்கள் முக்கியமானவை. 

4G அலைக்கற்றையை அரசு BSNL க்கு வழங்குகிறது. இதைக்
கொண்டு 4G சேவையை உடனடியாக நடத்த நாம்
தயாராக வேண்டும்.

கடந்த காலத்தில் தனியார் நிறுவனங்களை விட
முன்னதாகவே, அதுவும் without any upfront payment BSNLக்கு
3G அலைக்கற்றை வழங்கப் பட்டது. இருப்பினும் நம்மால்
உரிய நேரத்தில் சேவையைத் தொடங்க இயலவில்லை.
தேவையான டவர்களைக் கட்ட இயலவில்லை. அதற்கான
நிதி இல்லை.

2011ல் WIMAX அலைக்கற்றை எந்த முன்பணமும்
செலுத்தாமலும் ஏலத்தில் பங்கேற்காமலும் BSNLக்கு
வழங்கப்பட்டது. ஆனால் service role out செய்ய இயலாமல்
நாம் WIMAX அலைக்கற்றையை அரசிடம்
ஒப்படைத்தோம் (Spectrum was surrendered).

இத்தகைய கசந்த அனுபவங்கள் மீண்டும் நிகழக்
கூடாது. 4G சேவையை விரைவில் தொடங்க என்ன
செய்வது என்பதையே சங்கங்கள் சிந்திக்க வேண்டும். 

BSNLன் மாடமாளிகைகள்!
--------------------------------------
கடன்களை அடைக்கவும் தேவையான நிதி ஆதாரத்தைப்
பெறவும் BSNLன் சொத்துக்கள் சிலவற்றை விற்பதும்
சொத்துக்களின் அதிகபட்சப் பயன்பாட்டை (optimum utility)
உறுதி செய்வதும்   Asset monetization எனப்படும்.

BSNLக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன.
இந்தியாவிலேயே கோடீஸ்வர நிறுவனம் BSNLதான்.
மற்ற தனியார் நிறுவனங்கள் குடிசைவாசிகள் அல்லது
பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள்: ஓட்டாண்டிகள்.

சென்னைக்கு அடுத்த மறைமலை நகரில் BSNLக்கு
33 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஒரு பெரிய கட்டிடம்
உள்ளது. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக்
கட்டிடம் போன்று ஒவ்வொரு ஊரிலும் BSNLக்குச்
சொந்தமான இடங்கள் கட்டிடங்கள் உள்ளன. இந்தக்
கட்டிடங்களை வைத்து ஜியோ, Vodafone, ஏர்டெல்
உள்ளிட்ட எந்த நிறுவனத்தையும் விலைக்கு
வாங்க BSNLஆல் முடியும். ஆனால் BSNLஐ விலைக்கு
வாங்க எந்தக் கொம்பாதி கொம்பனும் இன்னும்
பிறக்கவில்லை.

BSNLன் சொத்துக்கள், இடங்கள், technical Installations,
Network ஆகியவை அனைத்தும் தற்போது under utilityல்
உள்ளன. இவற்றையெல்லாம் optimum utilityக்கு
மாற்றினால் அதுவே புத்தாக்கம்.

புத்தாக்கம் நிச்சயம் வெற்றி பெறும். அது BSNLன்
ஒளிமயமான எதிர்காலத்துக்குக் கட்டியம் கூறும்.
*****************************************************

மேக மறைப்பில் இருந்து விடுபட்ட நிலவு ஒளி
சிந்துவது போல, BSNL மீண்டும் ஒளிசிந்தும்.

நெல்லையில் இருந்து புறப்படும் தென்மேற்குப்
பருவக் காற்று BSNLன் மகரந்தத்தை இந்த பூமியெங்கும்
தூவிச் செல்லும்.

அப்போது நான் ஒரு அப்போஸ்தலனாக மாறி
BSNLன் புகழை புவனம் எங்கும் பரப்புவேன்.
         
***************************************************     
           இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும்- எனை
           வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்       
           விண்ணவனாகப் புரியுமே                                           
           எங்கள் BSNL- இங்கோர்                                                 
           விண்ணவனாகப் புரியுமே! .                                         
  ************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக