அசாம் மக்களுக்கு பதில் சொல்லுங்கள்!
நீங்கள் மண்ணின் மைந்தர்கள் பக்கமா?
அல்லது வந்தேறிகள் பக்கமா? உங்கள் பதில் என்ன?
19 லட்சம் என்று இறுதி செய்யப்பட்டு விட்டது.
அசாமில் 3.11 கோடி மக்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.
19,06,657 பேர் வங்கதேசத்தில் இருந்து வந்த சட்டவிரோத
ஊடுருவல்காரர்கள் என்று அசாம் மாநிலத் தீர்ப்பாயம்
(Assam foreigners tribunal) இறுதி செய்து இறுதிப் பட்டியலை
வெளியிட்டு உள்ளது.
இந்தச் செயல்பாடுகள் முழுவதும் உச்சநீதிமன்றத்தின்
உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டன.
எனவே 19 லட்சம் வந்தேறிகளை வெளியேற்றுவதில்
உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.
இந்த 19 லட்சம் வந்தேறிகளும் தற்போது அசாம்
மாநிலத்தில் வசித்து வருகிறார்கள். இவர்கள்
அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று
அசாம் மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.
மூலர் மாத கால அவகாசம் கொடுத்து, இந்த 19 லட்சம்
வந்தேறிகளையும் அசாமை விட்டு வெளியேற்ற வேண்டும்.
இதை மத்திய மோடி அரசு செய்ய வேண்டும்.
இந்த 19 லட்சம் வந்தேறிகளுக்கும் குடியுரிமை
வழங்க வேண்டும் என்று சொல்பவர்கள் மூடர்கள்.
அவர்கள் இந்த 19 லட்சம் வந்தேறிகளையும் அசாம்
மாநிலத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று
சொல்கிறார்கள். இதை ஒருபோதும் அசாம் மக்கள்
ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
அசாம் மக்கள் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக
வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். மண்ணின்
மைந்தர்களான அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை
வந்தேறிகளிடம் இழந்து நிற்கிறார்கள். அவர்களும்
1979 முதல் உக்கிரமாகப் போராடி வருகிறார்கள்.
டாக்டர் மன்மோகன்சிங்கை நாம் அறிவோம். இரண்டு
முறை இந்தியப் பிரதமராக இருந்தவர் அவர். அவர்
மக்களவைக்கு ஒருபோதும் தேர்ந்தெடுக்கப் பட்டதில்லை.
அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
அவர் அசாமில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று
சிலருக்கேனும் தெரியும். அசாமில் இருந்து இரண்டு முறை
மாநிலங்களவை உறுப்பினராக அதாவது 12 ஆண்டுகள்
எம்பியாக இருந்தார். டாக்டர் மன்மோகன்சிங்கிற்கும்
அசாமுக்கும் என்ன சம்பந்தம்?
அசாமில் மண்ணின் மைந்தர் ஒருவருக்குக் கிடைக்க
வேண்டிய எம்பி பதவியை 12 ஆண்டுகள் இவர்
அபகரித்துக் கொண்டார். இது நியாயமா?
அடுத்து நிருபன் சக்கரவர்த்தி! இவர் திரிபுரா முதல்வராக
பத்தாண்டுகள் (1978-1988) இருந்தார். இவருக்கும்
திரிபுராவுக்கும் என்ன சம்பந்தம்? திரிபுரா என்பது
முற்றிலும் பழங்குடிகளைக் கொண்ட ஒரு மாநிலம்.
நிருபன் சக்கரவர்த்தி ஒரு வங்காளி. திரிபுராவின்
மண்ணின் மைந்தர்களை முதல்வராக வர விடாமல்
தடுத்து, இந்த வங்காளியை மார்க்சிஸ்ட் கட்சி
பத்தாண்டு காலம் முதல்வராக வைத்திருந்தது.
சரி, நிருபன் சக்கரவர்த்திக்கு அடுத்து முதல்வராக
வந்தவர் யார் தெரியுமா? அவராவது திரிபுராவின்
மண்ணின் மைந்தரா? இல்லை! அவரும் ஒரு வங்காளியே!
அவர்தான் சுதிர் ரஞ்சன் மஜூம்தார். இவர் திரிபுராவின்
காங்கிரஸ் முதல்வர். பட்டியல் நீள்கிறது. அசாம், திரிபுரா
மாநிலங்களின் வரலாற்றைப் படியுங்கள்!
ஆக, மண்ணின் மைந்தர்களை ஆள விடாமல், அரசியல்
அதிகாரம் முழுவதையும் அபகரித்துக் கொண்டு
ஆட்டம் போட்ட கட்சிகள் காங்கிரசும் மார்க்சிஸ்ட்
கட்சியும். இக்கட்சிகள் மண்ணின் மைந்தர்களுக்கு
எதிரானவை. இக்கட்சிகளே இன்று அசாமின்
மண்ணின் மைந்தர்களுக்கு எதிராகப் போராட்டம்
நடத்துகின்றன. நியாய உணர்வுள்ள எவர் ஒருவரும்
வந்தேறிகளுக்கு ஆதரவான இவர்களின் போராட்டத்தை
ஆதரிக்க முடியாது.
எனவே நாம் உரத்த குரலில் கூறுகிறோம்! அடித்துக்
கூறுகிறோம்! அசாமில் வசித்து வரும் 19 லட்சம்
வந்தேறிகளையும் உடனடியாக மோடி அரசு
வெளியேற்ற வேண்டும். அவர்களை மேற்கு வங்க
மாநிலத்தில் முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
அவர்களை அசாமில் இருந்து வெளியேற்றாமல், அங்கேயே
தங்க வைக்கலாம் என்று யாரும் மனப்பால் குடிக்க
வேண்டாம். அது நடக்காது.
அசாம் மக்களுக்குப் பதில் சொல்லாமல் யாரும் தப்ப
முடியாது. உங்கள் பதில் என்ன? நீங்கள் மூன்று கோடி
அசாம் மக்கள் பக்கம் நிற்கிறீர்களா?
அல்லது 19 லட்சம் வந்தேறிகள் பக்கம் நிற்கிறீர்களா?
பதில் சொல்லுங்கள்!
********************************************************
வந்தேறிகளை அடையாளம் கண்டு வெளியேற்றும்
இந்த நடவடிக்கைகள் பிரதமர் ராஜிவ் காந்தி
முன்னிலையில் 1985 ஆகஸ்டு 15 அன்று கையெழுத்தான
அசாம் ஒப்பந்தப்படி மேற்கொள்ளப்பட்டன. அசாம்
ஒப்பந்தத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது.
19 லட்சம் வந்தேறிகளுக்கும் குடியுரிமை வழங்க
வேண்டும் என்று நடைபெறும் போராட்டங்கள்
அனைத்தும் அநீதியானவை; நியாயமற்றவை.
தேசியஇனத்தின் உரிமைகளுக்கு எதிரானவை.
அசாம் ஒப்பந்தம் இன்றும் உயிருடன் இருக்கிறது.
அதை எவராலும் ஒதுக்கித் தள்ள முடியாது.
பாவல் சங்கர்
இந்தப்பொருளில் ஏற்கனவே எழுதப்பட்ட
இரண்டு கட்டுரைகளையும் வாசகர்கள்
படித்து விடுவது நல்லது.
திராவிடக் கட்சியான திமுக இந்தியப்
பெருமுதலாளிகளின் பரிவாரத்தில் இணைந்து
கொண்டது. அக்கட்சியின் நலன் என்பது
இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களுடன்
பின்னிப் பிணைந்து விட்டது.
எனவே தமிழ் தேசிய இனத்தின் அபிலாஷைகளை
நிறைவு செய்யும் வரலாற்றுப் பாத்திரத்தை திமுக
என்றோ இழந்து விட்டது. தமிழ் தேசிய இன ஆர்வலர்களாக
அவர்கள் போடும் வேடம் கலைந்து விட்டது.
தனித்தமிழ் ஈழம் என்பதெல்லாம் திமுகவினரால்
மூர்க்கத் தனமாக எதிர்க்கப்படும். இலங்கையில்
ராஜபக்சேயின் சகோதரர் ஆட்சியில் அவர்கள்
பல தொழில்களில் பல்லாயிரம் கோடி முதலீடு
செய்துள்ளனர். அந்த மூலதனத்தைப் பாதுகாக்க
அவர்கள் ராஜபக்சேயை ஆதரிப்பார்கள்.
வாக்களிக்கும் மக்களை ஏமாற்றும் பொருட்டு
அவர்கள் ஈழ ஆதரவு வேடம் தரிப்பார்கள்.
அதில் ஏமாந்து போகக் கூடாது.
அசாமில் மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக நிற்கும்
திமுக போன்ற கட்சிகள், தமிழ்நாட்டில் மட்டும்
எப்படி மண்ணின் மைந்தர்களுக்கு ஆதரவாக நிற்கும்?
இக்கேள்விக்கான பதில் கீழே உள்ள பின்னூட்டப்
பகுதியில் தரப் பட்டுள்ளது.
தாராளமாக!
1) எவர் ஒருவரும் தங்களின் விருப்பத்தைத் தங்களின்
நிலைபாடாக அறிவிக்கலாம். அதற்கான உரிமை
அவரவர்க்கு உள்ளது.
2) எது சரியான நிலைபாடு? எது மக்களின் நலன்களைப்
பிரதிபலிக்கிறது? எந்த நிலைப்பாடு மக்களுக்கானது?
மேற்கூறிய மூன்று மட்டுமே முக்கியமானவை.
3) அசாம் பிரச்சினைக்குத் தீர்வாகச் சொல்லப்படும் எமது
நிலைபாடு அசாம் பிரச்சினைக்கு மட்டுமே பொருந்தும்.
அது பாலஸ்தீனச் சிக்கலுக்குப் பொருந்தாது. ஏனெனில்
ஒவ்வொரு பிரச்சினையும் தனித்தன்மை (unique) வாய்ந்தது.
எனவே ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்
என்று முடிவு செய்ய இயலாது.
4) 1979 முதல் நடந்த வன்முறையான அசாம் போராட்டம்,
1985ல் ஏற்பட்ட அசாம் ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து
பிறக்கிறது எமது நிலைபாடு. மிகத் தெளிவான
புறவய ஆய்வின் பின்னர், புறவய மதிப்பீட்டின் பின்னர்
இந்த நிலைபாடு உருவாக்கப் பட்டுள்ளது. இது ஆயிரம்
சதம் சரியானது: நியாயமானது.
5) அசாம் மக்களுக்கு உங்களின் பதில் என்ன? 19 லட்சம்
வந்தேறிகளையும் உங்கள் மாநிலத்திலேயே வைத்துக்
கொள்ளுங்கள் என்று சொல்லப் போகிறீர்களா?
அதை அசாம் மக்கள் ஏற்பார்களா? இதற்குப் பதில்
சொல்லுங்கள்.
மருதுபாண்டியன் திருப்பூர் குணா சிலம்பரசன் சே
இளஞ்சென்னியன் அமுதக்கனி
நீங்கள் மண்ணின் மைந்தர்கள் பக்கமா?
அல்லது வந்தேறிகள் பக்கமா? உங்கள் பதில் என்ன?
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
அசாமில் உள்ள வந்தேறிகளின் எண்ணிக்கை19 லட்சம் என்று இறுதி செய்யப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக