செவ்வாய், 10 டிசம்பர், 2019

திராவிடக் கயமை என்பது ராஜாஜி பள்ளிகளை மூடினார் என்று சொல்வது. ராஜாஜி எந்தப் பள்ளியும் மூடவில்லை. உண்மை என்பதற்கும் திராவிடக் கும்பலுக்கும் வெகு தூரம் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.
1953ல் EPW பத்திரிகையில் வந்த கட்டுரை இது. இவர்கள் திராவிட நாசிகள் அல்லர். அதனால் உண்மையைப் பேசுகிறார்கள்.
(a) reduction in the number of
study hours in elementary schools in
the panchayat villages of the State,
where it has already been introduced,
from five to three per session;
(b) introduction of two threehour
shifts in schools, one in the
morning and the other in the afternoon;
and
(c) enabling children to learn a
craft or trade at home or in a workshop
in the village during leisure
hours.
இதனால் என்ன நடக்கும் என்பதை பருலேகர் கமிட்டி தெளிவாகச் சொல்கிறது:
A shift of three hours, and two
shifts in a day are best calculated to
promote universal literacy within a
few years by doubling the number of pupils attending schools in the present conditions.
ராஜாஜியின் திட்டம் ஏழை எளியவர்களுக்கு கல்வியை மறுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது என்பது படுகேவலமான பொய்.
ராஜாஜியின் திட்டம் பள்ளியில் மாணவர்கள் படிக்கும் நேரத்தை பாதியாகக் குறைத்து மீதி பாதி நேரத்தில் அதே பள்ளியில் மற்றைய மாணவர்களைச் சேர்ப்பது. 'இப்போது 50 சதவீதப் பிள்ளைகள் படிக்கிறார்கள். மற்றொரு 50 சதவீதமும் கல்வி கற்க இது ஒரு வாய்ப்பு என்று திரு சுப்ரமணியம் தமிழகச் சட்டமன்றத்தில் சொன்னார். தமிழகத்தின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை ஷிப்ட் முறையில் நடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் அது.
அதில் குறைகள் இருக்கலாம்.
ராஜாஜி திட்டத்தை அமல்படுத்திய முறை தவறு என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர் பேசியவிதமும் சரியில்லை. ஆனால் அந்தத் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று சொல்வது திராவிட நாசிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பரப்புரை. பெரியாரியக் கோட்டைப் புளுகுகளில் இதுவும் ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக