செவ்வாய், 3 டிசம்பர், 2019

பென்சன் ஜோக்ஸ்
எந்தரோ மஹானுபாவுலு = There are many great men
அந்தரிகி = to all of them
vanthanamu = vanakkam salutations. 

தோழர் குப்தா பற்றிய மார்க்சிய லெனினிய மதிப்பீடு!
------------------------------------------------------------------------------------
தோழர் குப்தா நம் கண் முன்பு வாழ்ந்து, செயல்பட்டு,
அண்மையில் மறைந்த ஒரு தொழிற்சங்கத் தலைவர்.
ஒவ்வொரு நிகழ்வையும் அவர் எவ்வாறு எதிர்கொண்டார்
என்பதும் எப்படியெல்லாம் ஊழியர் நலனைப்
பாதுகாத்தார் என்பதும் நாம் அனைவரும் நம் சொந்த
அனுபவத்தின் மூலம் அறிந்த ஒன்று. இதை சரித்திரப்
பாடப் புத்தகங்களில் இருந்து படிக்க வேண்டிய
தேவை இல்லை.

கட்டுரையில் உள்ள தோழர் குப்தாவைப் பற்றிய மதிப்பீடு
மிகை மதிப்பீடோ குறைமதிப்பீடோ அல்ல. மார்க்சிய
லெனினிய வெளிச்சத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு.

மக்கள்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று
தெளிவுடன் இருக்கிறது மார்க்சியம். அதே நேரத்தில்,
வரலாற்றைப் படைப்பதில் தனி நபருக்கு உரிய
பங்கையும் மார்க்சியம் மறுக்கவில்லை. ஏனெனில்
மார்க்சியம் ஓர் அறிவியல் வழிப்பட்ட தத்துவம்.

வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்ன
என்பதைத் தெளிவாக விளக்கி தோழர் பிளக்கானாவ்
ஒரு நூல் எழுதி உள்ளார். பிளக்கானவ் லெனினுக்கே
மார்க்சியம் கற்றுக் கொடுத்தவர்.

 மார்க்சியத்தையோ பிளக்கானவ் நூல்களையோ
ஒருபோதும் கற்றிராத ஒருவர் குப்தாவைப் பற்றிய
மார்க்சிய மதிப்பீட்டில் குறைகாண்பது அவரின்
பெருத்த அறியாமையைக் காட்டுகிறது.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள்.
அது போல பிளக்கானவின் அருமையோ குப்தாவின்
அருமையோ எல்லோருக்கும் தெரிந்து விடாது.

அரசின் அங்கமாக இருந்த தொலைதொடர்புத் துறை
(DOT) Companies Act 1956ன் படி ஒரு கம்பெனியாகப்
பதிவு செய்யப் பட்டது. இந்தக் கம்பெனியின்
ஊழியர்களான நமக்கெல்லாம் அரசின் பணத்தில்
இருந்து (from Govt Exchequer) பென்சன் பெற்றுத் தந்தார்
குப்தா. இதற்காக 37A ஷரத்தை உருவாக்கினார்.

அரசு சட்ட திட்டங்களை தனியொருவராக நின்று
தனது சொந்த மூளையின் பலத்தில், தமது சொந்த
அறிவின் பலத்தில் சிந்தித்து உருவாக்கினார் குப்தா.
இந்த சாதனையின் மகத்துவத்தைப் புரிந்து
கொள்ளக் கூட சராசரிக்கும் அதிகமான அறிவு
வேண்டும். Below average ஆசாமிகளால் புரிந்து
கொள்ள இயலாது. இன்னும் நிறையச் சொல்லலாம்.

நேற்று சில NFTE தோழர்கள் (ஓய்வூதியர்கள்) வந்தனர்.
அப்போது ஒரு தோழர் கூறினார்: " ரூ 25,000 பென்சன்
வாங்குறேன் சார்; குப்தாவின் உப்பைத் திங்கிறேன்
சார்" என்றார். இதுதான் குப்தா பற்றிய பாட்டாளி
வர்க்கத்தின் மதிப்பீடு. குட்டி முதலாளிய ஆசாமிகளால்
இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது. 
-------------------------------------------------------------------------------------
உலகத்து இயற்கை அறிந்து செயல் என்று
வள்ளுவர் கூறியதற்கு ஏறக்குறைய நிகராக
மார்க்சியத்தில் லெனினின் கூற்று ஒன்று உண்டு.

Concrete analysis of the concrete situation என்பது கட்டாயம்
என்பார் லெனின். களநிலைமைகள் எப்படி
இருக்கின்றன என்பதைப் பற்றிப் பலர் கவலைப்
படுவதில்லை. தங்களின் சொந்த உட்டோப்பியாவில்
இருந்து அவர்கள் வெளியேறுவதில்லை. அவர்களை
வரலாறு குப்பையில் வீசி எறியும்.

NFTE அகில இந்தியத் துணைத் தலைவர் பொறுப்பில்
இருக்கும் ஒருவர் குப்தா பற்றிய மதிப்பீட்டில்
குறை கண்டது பற்றி திருச்சி தோழர் காமராஜ்
----------------------------------------------------------------------------


BSNL, MTNL நிறுவனங்களில் VRS விண்ணப்பம்!
03.12.2019  1700 hoursக்கு முடிவுற்ற நிலையில்
விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?
------------------------------------------------------------------------
BSNLல் விண்ணப்பித்தோர் விவரம் பற்றிய
முதல் கட்டத் தகவல் !
இறுதிக்கட்டத் தகவலை நாளை அதிகாரபூர்வமாக
BSNL Corporate  Office வெளியிடும்.

BSNLல் மொத்தம் (ஊழியர்கள் +அதிகாரிகள்) = 1.6 லட்சம்
VRSக்கு தகுதி உள்ளோர் ( வயது > 50) = 1,04,471
விண்ணப்பித்தோர் = 78,569
விண்ணப்பம் செய்யாதவர்கள் = 25,902.

Break up figures:
----------------------  
Group A = 4295
Group B = 9010
Group C = 54,994
Group D = 9936
Industrial workers = 334.

MTNL குறித்த தகவல்கள் கிடைத்த பிறகு வெளியிடப்படும்.
************************************************** 
 
1.6 லட்சம் பேர் உள்ள BSNLல்
80,000 பேர் விருப்ப ஓய்வு!
6 அடி உயர BSNL 3 அடியாகக் குறைகிறது!
Nemerical strength அடிப்படையில்.  


அரசு என்பது வேலைவாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட
சமூகப் பொறுப்பை உடையது. எனவே தனியார்
நிறுவனங்களைப் போல அரசு நடந்து கொள்ள
இயலாது; கூடாது. எனவே அரசு நிறுவனங்களில்
நிரந்தர பணியாளர்கள் அதிகம் இருப்பது இயல்பே.

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஒப்பந்த
அடிப்படையில் 6 மாதம் 9 மாதம் என்ற வகையில்
ஆள் எடுப்பார்கள். அந்த எண்ணிக்கையையும்
சேர்த்தே பார்க்க வேண்டும்.
 =============================================

entharo

எந்தரோ மஹானுபாவுலு!
VRSல் செல்லும் BSNL தோழர்களுக்கு வாழ்த்து!
----------------------------------------------------------------------
இது டிசம்பர் மாதம். இசைக்குரிய மாதம்!
இசை மாதமான தமிழ் மார்கழியும் இதே டிசம்பரில்தான்
வருகிறது. எனவே BSNL VRS 2019ஐ ஏற்று, VRSக்கு
விண்ணப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அவர்கள் அனைவருக்கும் அதாவது சுமார் 80,000 பேருக்கும்
வாழ்த்துக்கள். இசை வடிவிலான வாழ்த்தும் வணக்கமும்!

தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான
எந்தரோ மஹானுபாவுலு என்ற கீர்த்தனையை
இத்தோழர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இன்றிரவு மன அமைதியும் சாந்தமும் நிறைவும் மகிழ்ச்சியும்
பெற்றிட இப்பாட்டு உதவட்டும்!

பாட்டின் பல்லவிக்கு மட்டும் பொருள் தருகிறேன்.
எந்தரோ மஹானுபாவுலு = எப்பேர்ப்பட்ட மாமனிதர்கள்.
அந்தரிகி = அவர்கள் அனைவருக்கும்
வந்தனமு = வணக்கம் உரித்தாகட்டும்!    

எந்தரோ மஹானுபாவுலு கீர்த்தனையை ஆயிரம் பேர்
ஆயிரம் விதமாகப் பாடி இருக்கிறார்கள். எனக்கு
மிகவும் பிடித்த சிலரின் பாட்டுக்களை நமது
தோழர்களுக்கு ஆளுக்கு ஒன்றாகச் சமர்ப்பிக்கிறேன்.
------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இந்தப் பதிவு அனைவருக்குமானது அல்ல.
VRSல் செல்லும் மூவருக்கும் அதே தேதியில் Superannuationல்
செல்லும் தோழருக்கும் மட்டுமானது.
*******************************************************  
பென்ஷன் ஜோக்ஸ்!
-------------------------------
முகநூலில் ஒரு பெண்.
இந்தப் பெண்ணின் பதிவுகளுக்கு
மானவாரியாக லைக்கும்
பாராட்டிப் பாராட்டி கமென்டும் போட்டுக் கொண்டு
இருந்தான் ஒரு இளைஞன்
கடந்த மூன்று வருஷமாக!

நேற்று அந்தப் பெண் ஒரு பதிவு போட்டிருந்தாள்
"இந்த மாத பென்ஷன் இன்னும் வரவில்லை" என்று.

மூன்று வருஷமாக லைக்கும் கமென்ட்டும்
போட்டவனைக் காணோம்!
---------------------------------------------------------------------------
 



 



         
 













சரித்திர கால சாகச வீரர்கள் கதை போல குப்தாவை சித்தரிப்பது, கற்ற தொழிற்சங்க கல்வியின் போதாமையின் வெளிப்பாடு. கால நிலை நோயைப் போல் இன்று சிலருக்கு தொற்றியிருக்கும் நோய் இது. அன்று இருந்த துறையின் நிலை, தொழிற்சங்த்திற்கு இருந்த கூட்டு பேர சக்தி, தொழிலாளியின் சங்க பிடிப்பு ஆகியவற்றை பார்க்காமல் இன்று குப்தா, குப்தா என பிதற்றுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவா? அல்லது ஏமாற்றவா?





===================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக