CAB என்னும் இந்திய குடியுரிமை திருத்த மசோதா
CAB இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்த பல நாட்களாக பல்வேறுவிதமான விவாதங்களும் போராட்டங்களும் நாடுதழுவிய அளவில் நடைபெறுவதை காணமுடிகிறது.
இதுசார்ந்த சில தகவல்களை படித்துப் பார்த்தபோது இதனுடைய வரலாற்றுப் பின்னணி என்னவென்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் சிறிதளவு யூகிக்க முடிகிறது.
1971 கிழக்குப் பாகிஸ்தான் என்று இருந்த இன்றைய வங்கதேசத்தில், தங்கள் அரசின் அடக்குமுறைகளை கண்டித்து உள்நாட்டு போராட்டங்கள் நடைபெற்ற காரணத்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளான அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய நம் நாட்டின் அஸ்சாம் மாநிலத்தில் அமைதியை நாடி தற்காத்துக் கொள்வதற்காக குடியேறியுள்ளனர்.
அவ்வாறு குடியேறியவர்கள் பல லட்சம் பேர் என்பதால் அங்கே அஸ்சாம் மாநிலத்தில் அவர்களுடைய வாழ்வாதாரமான விளைநிலங்கள் மற்றும் தேயிலை தோட்டம் போன்ற பலவற்றை அவர்கள் நாளடைவில் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்ற காரணத்தால் அஸ்சாம் மக்கள் 1979 முதல் அவ்வாறு ஊடுருவியவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருவதாக தெரிகிறது.
அஸ்சாம் மக்களின் போராட்டத்தில் மாணவர்கள் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கின்றனர், அதில் அக்காலத்து இளைஞராக இருந்த திரு. பிரப்பல்ல குமார் மகந்தா என்பவரும் தலைமையேற்றுப் போராடியவர்களில் ஒருவர் எனத் தெரிகிறது.
தொடர் போராட்டத்திற்கு பின்னர் 1985 ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் அஸ்சாம் ஒப்பந்தம் என்பது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் அஸ்சாம் மக்கள் பிரதிநிதியாக திரு. பிரபல்ல குமார் மகந்தா கையொப்பமிட்டுள்ளதாகதவும் தெரிகிறது.
அந்த அஸ்சாம் ஒப்பந்தத்தின்படி அஸ்சாம் மாநிலத்திற்குள் அத்துமீறி குடியேறியுள்ள அத்தனை வெளிநாட்டுக்காரர்களையும் அங்கிருந்து நாடு கடத்தி தங்கள் மாநில மக்களின் இழந்த வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பது என்பது ஒரு முக்கியமான அம்சமாகும்
1985இல் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் 35 ஆண்டுகளுக்கு மேலாக நத்தையைவிட மிகவும் மெதுவாக ஊர்ந்து செயல்படுத்தப்பட்டு அதன் பிறகு பல தீர்ப்பாயங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் ஆகியவற்றால், அங்கு அத்துமீறி நுழைந்த பிறநாட்டு மக்களை அடையாளம் கண்டு அவர்களுடைய பட்டியலை எடுத்து அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அங்கே என் ஆர் சி என்கின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இறுதி செய்யப்பட்டு அதில் 19 லட்சத்திற்கும் கூடுதலாக மக்கள் வெளிநாட்டிலிருந்து இங்கே குடியேறியவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது
1985இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஸ்சாம் மாநிலத்தில் இருந்து இந்த NRC என்னும் தேசிய குடியுரிமை பதிவேடு என்பதில் வராத அத்துமீறி ஊடுருவிய இந்த 19 லட்சம் பேரையும் நாடு கடத்த வேண்டும் என்பதுதான் முக்கியமான அம்சமாகும். (இந்த NRC அஸ்சாம் மாநிலத்துக்கு மட்டுமே பொருந்தும். இதை நாடு முழுக்க கொண்டுவரலாமா என்ற கருத்தும் நிலவுவதாக தெரிகிறது.)
அப்படி அனைவரையும் நாடுகடத்தும் செயலை செய்வதற்கு பதிலாக தற்போதைய நடுவண் அரசு அந்த 19 லட்சம் பேரில் இஸ்லாமியர்கள் அல்லாத மற்றவர்களுக்கு குடியுரிமை கொடுக்கலாம் என்றும், இஸ்லாமியர்களை அவர்களுடைய தாய் நாடான இஸ்லாமிய நாடுகளான பங்களாதேஷ், பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றும் பரிந்துரை செய்து இந்த CAB என்னும் மசோதாவை தாக்கல் செய்து அதை நிறைவேற்றியும் உள்ளது.
இதில் அஸ்சாம் மக்கள் இந்த CABயை எதிர்த்துப் போராடுவதற்கு காரணம் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து பேரையுமே அவர்களின் தாய்நாடான வங்கதேசம் மற்றும் பிற நாடுகளுக்கு கடத்த வேண்டும், அதில் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினருக்கு எந்த சிறப்புச் சலுகையும் அளிக்கக்கூடாது என்பது.
இதனை தற்போது மேற்கு வங்கமும் அஸ்சாம் மாநிலத்துடன் இணைந்து எதிர்க்கிறது. மேற்கு வங்கத்தின் எதிர்ப்புக்கு சொல்லப்படுகிற காரணத்தை நோக்கினால் இந்த 19லட்சம் பேருக்கும் தாய்மொழி பெங்காலி ஆக இருப்பதால் (பங்களாதேஷ் மக்களின் மொழி பெங்காலி என்கிறார்கள்) அஸ்சாம் ஒப்பந்தப்படி அவர்களை அஸ்சாமிலிருந்து இடம்பெயர்த்து, மேற்கு வங்க மாநிலத்தில் குடியமர்த்தி விடுவார்களோ என்ற அச்சம் என்பதாம்.
இங்கே நமது நாட்டில் நமது மாநிலத்தில் நடைபெறும் போராட்டம் என்னவென்றால் பிற மதத்தினருக்கு அளிக்கின்ற அதே சலுகையை இஸ்லாமியர்களுக்கும் அளிக்கவேண்டும் என்பது.
இரண்டையும் உற்றுநோக்கினால், அஸ்சாம் மக்களின் போராட்டத்திற்கு நேர் எதிரான முரண்பட்ட ஒரு நிலைப்பாட்டை வலியுறுத்தி நம் மாநிலத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த பிரச்சனை முழுவதுமாக அஸ்சாம் மாநில மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் மற்றவர்களால் சிதைக்கபடுவதை எதிர்த்து அவற்றை களைய வேண்டும் என்பதே.
அதாவது என்னுடைய சட்டைக்குள் பல்லியும் ஓணானும் மற்று ம் சில பூச்சிகளும் உள் நுழைந்து என்னை வதைக்கின்றது, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பது அஸ்சாம் மக்களின் போராட்டம்.
நடுவன் அரசின் முன்வைப்பு என்னவென்றால், உங்களுடைய சட்டைக்குள் மறைந்திருக்கின்றன பலவகையான பூச்சிகளில் பல்லியை மட்டும் வெளியே எடுத்துவிட்டு மீதியை அங்கேயே வைத்துக்கொண்டு வாழவேண்டும் என அவர்களை நிர்பந்திப்பது.
தமிழகத்தில் நடைபெறுகின்ற போராட்டம் என்பது, நடுவண் அரசை, இல்லை இல்லை நீங்கள் எப்படி அந்த பல்லியை வெளியே எடுத்து வீச முடிவெடுக்கலாம், அதையும் அஸ்சாம் மக்களின் சட்டைக்குள் அப்படியே ஊர்ந்து செல்ல அனுமதித்து அனைத்து பூச்சிகளையும் அஸ்சாம் மக்களை சகித்துக்கொள்ள நிர்பந்திக்க வேண்டும் என்பது.
இப்படியாக நான் இதைப் புரிந்து கொள்கிறேன். இதில் என்னுடைய பிறழ் புரிதல் இருந்தால் எந்த இடத்தில் நான் தவறாக புரிந்து கொண்டுள்ளேன் என்பதை அருள் கூர்ந்து ச
-----------------------------------------------------------------------------------------------------
சார், உங்களின் புரிதல் சரியானதே. அதே நேரத்தில் உங்களின்
புரிதலை முழுமையாக்கிக் கொள்ள மேலும் சில தரவுகளை
நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
அசாம் ஒப்பந்தம் இரண்டு cutoff datesஐக் கொண்டது.
1) 1.1.1966 (கவனிக்கவும் 1966)
2) 24..5.1971
இந்த இரண்டு cutoff datesஐயும் அடிப்படையாகக் கொண்டு
வெளிநாட்டு வந்தேறிகளைக் கணக்கெடுத்தால் அது
80 லட்சம், 90 லட்சம் என்று போகிறது.
எனவே அமித்ஷா மூன்றாவதாக ஒரு cutoff dateஐ உள்ளே நுழைக்கிறார்.
இதற்கான காரணம் என்னவெனில், 80 லட்சம் பேர் என்ற
அளவில் வெளியேற்றுவது இயலாத காரியம் என்பதால்.
அமித்ஷாவின் cutoff date டிசம்பர் 31, 2014 ஆகும். இதன்படி
கராறாகக் கணக்கெடுத்தபோது அது 40 லட்சம் என்ற அளவில்
வந்து நின்றது. எனவே பல்வேறு parametersஐத் தளர்த்தி
இறுதியில் 19 லட்சம் என்ற எண்ணிக்கையில் கொண்டு
வந்து முடித்தார்.
இந்த 19 லட்சத்தில் 5 லட்சம் பேர் இந்துக்கள் ஆவர். மீதி
14 லட்சம் பேர் முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர்.
எவ்வளவு குறைத்து மதிப்பிட்டாலும் முஸ்லிம்களின்
எண்ணிக்கை 10 லட்சத்திற்கு அதிகமாகவே இருக்கும்.
இதோடு வெளிநாட்டவர் வருவது நின்றபாடில்லை.
மேற்கு வாங்க மாநிலத்தில் தினமும் ரோஹிங்கியா
முஸ்லிம்களை மமதா அனுமதித்துக் கொண்டுதான்
இருக்கிறார். எல்லாம் ஓட்டுக்காக.
வங்கதேச எல்லையை barbed wire fence மூலம் மூடவில்லை.
நிற்க. 19 லட்சம் பேர்தானே என்று மெத்தனமாக இருக்க
இயலாது. இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்போது
ஐந்தே ஆண்டுகளில் இந்த 19 லட்சமானது அரைக்கோடி
ஆகிவிடும். பத்தே ஆண்டுகளில் இது ஒருகோடி
ஆகிவிடும். இது மிக மோசமாக demographic balanceஐப்
பாதிக்கும். அப்போது மீண்டும் வந்தேறி versus மண்ணின் மைந்தன்
என்ற போராட்டம் எழும்.
Population explosion நடந்து கொண்டிருக்கிறது. குடியுரிமை
வழங்குவதில் population growth vis a vis resources என்ற
நிலையில் இருந்துதான் முடிவெடுக்க வேண்டும்.
இதில் குட்டி முதலாளித்துவ மனிதாபிமானத்தின்
அடிப்படையில் முடிவெடுக்கக் கூடாது.
அசாமில் உள்ள வந்தேறிகளையே வெளியேற்ற இயலாத
மோடி அரசு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள
வந்தேறிகளை (அதாவது வங்கதேச வந்தேறிகளை)
எப்போது வெளியேற்றும்? எப்படி வெளியேற்றும்?
கேரளத்தில், மகாராஷ்டிரத்தில், மேற்கு வங்கத்தில்
கணிசமாக வங்கதேச இஸ்லாமியர்கள் மற்றும்
ரோஹிங்கியா வந்தேறிகள் குடியேறி உள்ளனர்.
இந்த எண்ணிக்கையே தற்போது சில லட்சம் இருக்கும்
என்று கூறப்படுகிறது.
எனவே எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு,
நமது அடுத்த சந்ததிக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை
விட்டுச் செல்ல வேண்டும் என்ற விவேகத்துடன்
இந்த குடிஉரிமைச் சிக்கலில் முடிவெடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக