வியாழன், 12 டிசம்பர், 2019

நிலவுடைமைச் சமூகத்தின் கூறுகள் உபியில்
மிக அதிகம். feudal medieval mentality. கணிசமான
இளைஞர்களுக்கு அது தப்பு என்றே மூளையில்
பதிவதில்லை. தீவிரமான ஆணாதிக்க மனநிலை
அங்கே செல்வாக்குச் செலுத்துகிறது. அடுத்து
தப்பி செய்தாலும் பிடிபட மாட்டோம் என்ற
மனநிலையும் உள்ளது.   இளம்

சித்தார்த்த சங்கர் ரே! இவரைப் பற்றி அறிந்து
கொள்ளுங்கள். இவர் செய்த என்கவுன்டர்களின்
எண்ணிக்கையைச் சொல்ல முடியுமா?
மார்க்சிஸ்ட் ஆசாமிகளைக் கேளுங்கள்.
அவர்கள் சொல்லுவார்கள். ஏனெனில் சித்தார்த்த
சங்கர் ரே படுகொலை செய்த பலரில்
மார்க்சிஸ்டுகள் நிறைய உண்டு. அவ்வளவும்
பச்சைப் படுகொலைகள். 


உபியில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இந்த
என்கவுன்டர்களை தேசிய மனித உரிமை
ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று
புகார் கொடுத்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்திலும்
வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் மக்களின் ஆதரவு என்கவுன்டர்களுக்கு
இருப்பதால், சமூகத்தின் பொதுவெளியில் அவர்களால்
எத்தகைய எதிர்ப்பு இயக்கமும் நடத்த இயலவில்லை.
Legal solutionsஐ மட்டும் நம்பி இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே மனித உரிமைச் செயல்பாடுகள்
மிகவும் அதிகமாக இருப்பது தமிழ்நாட்டில்தான்.
உபியில் அந்த அளவு இல்லை.

மாயாவதியால் யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
இயலாது. எடுத்தால் வாக்கு வங்கியில் பலத்த
சேதாரம் ஏற்பட்டு விடும்.
இரண்டு லட்சம் பேர் கைது!

இந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர்
(அனைவரும் வழக்கு உள்ள அக்யூஸ்ட்டுகள்)
கைது செய்யப் பட்டுள்ளனர். சிறை நிரம்பி
வழிகிறது.

உபியில் இரண்டு லட்சம் பேர் கைது!
--------------------------------------------------------
யோகி ஆதித்யநாத் மார்ச் 2001ல் முதல்வராகப் பதவி
ஏற்கிறார். ஜூன் 2017க்கும் மே 2019க்கும் இடைப்பட்ட
காலத்தில்,  இரண்டேகால் லட்சம் அக்யூஸ்ட்டுகளை
கைது செய்து சிறையில் அடைகிறார். துல்லியமான
எண்ணிக்கை 2,32,404 ஆகும்.

நன்கு கவனிக்கவும். இரண்டே ஆண்டுகளில்
இரண்டு லட்சம் பேர் கைது. இந்த இரண்டு லட்சம்
பெரும் அக்யூஸ்ட்டுகள். அதாவது இவர்கள் மீது
வழக்கு இருக்கிறது. ஆனால் கைது செய்யப்படவில்லை.
முந்திய அகிலேஷ் யாதவ்வின் அரசு யாரையும்
கைது செய்யாது.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக