ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கெளரவ டாக்டர் பட்டம்  என்பது
தமிழ்ப் பண்டிட்களுக்கு மட்டுமா?
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
கவிஞர் வைரமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை
SRM  பல்கலை வழங்க இருக்கிறது. அதற்கு எதிரானதல்ல
இந்தக் கட்டுரை.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஏற்கனவே ஒரு பல்கலை
கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது.SRM பல்கலையும்
வழங்குமானால், அவருக்குக் கிடைக்கும் இரண்டாவது
டாக்டர் பட்டம் இதுவாகும்.

ஏன் ஒருவரிடமே எல்லா டாக்டர் பட்டங்களையும் குவிக்க
வேண்டும்? தமிழ்ப் பண்டிட்டுகளை விட்டால் நாட்டில்
வேறு யாருமே அறிவாளிகள் இல்லையா?

அறிவியலில் வியத்தகு சாதனைகளைச் செய்த எவருமே
பல்கலைகளின் கண்ணில் படவில்லையா?

1967 முதல் புழுத்த அரசியல்வாதிகளுக்கு பல்கலைகள்
டாக்டர் பட்டத்தை வழங்கின. அண்ணாத்துரை,
கருணாநிதி, நெடுஞ்செழியன், மேனன், ஜெயலலிதா
என்று பலருக்கும் மலிவு விலையில் கெளரவ டாக்டர்
பட்டங்கள் வழங்கப் பட்டன. ஆனால் கவிஞர்
கண்ணதாசனுக்கு (நானறிய) வழங்கப் படவில்லை.

தெலுங்கானாவின் விளையாட்டு வீராங்கனை சானியா
மிர்சாவுக்கு ஏ சி சண்முகத்தின் பல்கலை டாக்டர்
பட்டத்தை வழங்கியது. நடிப்பு மற்றும் சினிமாவுக்காக
கமலஹாசன் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சிறந்த
இசை மேதை கே ஜே யேசுதாஸ் டாக்டர் பட்டம்
பெற்றுள்ளார். இவற்றை எவரும் ஆட்சேபிக்க இயலாது.
ஏனெனில் துறை சார்ந்த திறனை இவர்கள் வெளிப்படுத்தி
உள்ளனர்.

ஆனால், மனிதகுல வரலாறு கண்டும் கேட்டும் இராத
மகத்தான சதுரங்க மேதை விஸ்வநாதன் ஆனந்துக்கு
தமிழகப் பல்கலைகள் எதுவும் இதுவரை டாக்டர் பட்டம்
வழங்கவில்லை. இது நாணத்தக்கது. சதுரங்கம்
என்பது விளையாட்டு மட்டுமல்ல; கணிதமும் ஆகும்.
(சதுரங்கம் கணிதமே என்ற அறிவியல் ஒளி ஏட்டில்
வெளியான  என் கட்டுரையை விரும்புவோர் படிக்கலாம்);

ப சிதம்பரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய
அரசியல்வாதிகளிலேயே அதிகமான IQ உள்ளவர்.
பச்சைத் தமிழர். பொருளாதாரம் சட்டம் ஆகிய
துறைகளில் நிபுணர். ஏன் அவருக்கு ஒரு டாக்டர்
பட்டம் வழங்க நம் பல்கலைகள் முன்வரவில்லை?
IQ குன்றிய வைரமுத்துவை விட, சிதம்பரம் எந்த
விதத்தில் குறைந்து விட்டார்?

சிதம்பரம் பெரும் அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்.
அவர் விரும்பி இருந்தால், தமிழகத்தில் உள்ள எல்லாப்
பல்கலைகளிலும் கெளரவ டாக்டர் பட்டத்தைப்
பெற்றிருக்கக் கூடும். துணைவேந்தர்களிடம் வேண்டுகோள்
விடுத்தல்ல, அவர்களைச் செருப்பால் அடித்தே சிதம்பரம்
இதைச் சாதித்து இருப்பார்.

ஆனால் சிதம்பரம் அவ்வாறு செய்யவில்லை. அவர்
கெளரவ டாக்டர் பட்டத்துக்கு ஏங்கவில்லை; இத்தகைய
பட்டங்களை அவர் இகழ்ச்சியுடன் நிராகரித்தார். காரணம்
அவர் IQ அதிகமுள்ளவர்.

IQ  120 உள்ள சிதம்பரம் கெளரவ டாக்டர் பட்டத்தை
வெறுத்து ஒதுக்குவதும், IQ 98.5 உள்ள வைரமுத்து
கெளரவ டாக்டர் பட்டத்துக்கு நாயாய் அலைவதும்.
இயல்பானதே. அது வைரமுத்துவின் குற்றம் அல்ல;
அவரின் IQவின் குற்றம்; அதாவது கருவின் குற்றம்.

சிறந்த மார்க்சிய சிந்தனையாளர் (Marxist theoretician)
என்ற முறையில் IQ அதிகமான சீதாராம் யெச்சூரிக்கு
டாக்டர் பட்டம் வழங்கு என்று கேட்பதற்குத்
துப்பில்லாத புழுவினும் இழிந்த CPM பாலகிருஷ்ணன்,
வைரமுத்துவுக்கு வழங்கு என்று முழங்குகிறார்.
இது வீசியெறிந்த காசுக்கு விலை போன
இழிநிலையையே சுட்டும்.

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் அன்றாடம் ஆயிரம்
சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதன்
காரணமாகவே சராசரி மனிதனின் வாழ்க்கை
அனுதினமும் மேம்பட்டு வருகிறது. எனினும் தமிழ்ச்
சமூகமானது அறிவியல் தற்குறிச் சமூகமாக இருந்து
வருவதால், அறிவியலையும் அறிவியல் அறிஞர்களையும்
புறக்கணிக்கிறது.

தமிழ்ச் சமூகத்திற்குத் தெரிந்ததெல்லாம் கூத்தாடிப்
பயல்களைத்தான். இந்தத் தற்குறிச் சமூகம் போற்றுவதும்
கூத்தாடிப் பயல்களைத்தான். மயில்சாமி
அண்ணாத்துரையின் மகத்துவம் அறியாத
வேசிப்பயல்கள்தான் வைரமுத்துவின் பாடல்களில்
"எழுச்சி"யைக் கண்டடைந்து புளகாங்கிதம் அடைவான்.  

1960களிலும் 1970களிலும் தமிழ்ப் பண்டிட்டுகளே
பல்கலைகளின் துணைவேந்தர்களாக நியமிக்கப்
பட்டனர். தெ பொ மீ, மு வரதராசனார், வ சுப மாணிக்கனார்
என அன்றைய துணைவேந்தர்கள் யாவரும் தமிழ்ப்
பண்டிட்டுகளே. கருணாநிதி ஆட்சியில் இந்த இழிநிலை
தொடர்ந்தது. அறிவியல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே
வந்தது.

1970களில் மதுரைப் பல்கலையில் B.Sc special என்ற பட்டப்
படிப்பு ஆரம்பிக்கப் பட்டது. இதில் மொழிப்பாடம்
கிடையாது. subject portions அதிகம். இதற்கு முந்திய
B.Sc Honours போன்றது இது.

இதைப்படிக்கும் மாணவர்களுக்கு நிறையக் கோரிக்கைகள்
இருந்தன. அவற்றை  VC யிடம் கூறி முறையிட அனைத்துக்
கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
அன்றைய VC மு வரதராசனார் அவர்களைச் சந்தித்தோம்.

எந்த appointmentம் வாங்கவில்லை. வாங்கத் தேவையும்
இல்லாத காலம் அது. நானும் நண்பர்களும்  காலை
7 மணிக்கு நெல்லையில் இருந்து பஸ் ஏறி மதுரை
சென்றோம். காலை 11 மணிக்கெல்லாம் பல்கலை
வளாகம் வந்து VC அறை முன்பு காத்திருந்தோம்.

உடனேயே VC வரச் சொல்லி விட்டார். அவரின் மேசையைச்
சுற்றி வட்டமாக நின்று கொண்டு அவரிடம் எங்கள்
கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். அவர் ஏற்கவில்லை.
அவரால் எங்களின் கோரிக்கைகளையே புரிந்து கொள்ள
முடியவில்லை. "போய்ப் படிச்சுப் பாஸ் பண்ற வழியைப்
பாருங்க" என்று எங்களை அனுப்பி வைத்தார்.

1970களில் நடந்த சம்பவம் இது. இன்று 2020ல் இதைப்
படிக்கும் சிலர், "என்ன, மாணவர்களை உட்காரச்
சொல்லாமல், நிற்க வைத்துப் பேசி அவமதித்து
விட்டாரா VC" என்று போர்க்கோலம் பூணலாம்.

ஆனால் நாங்கள் யாரும் அப்படி நினைக்கவில்லை.
VC என்பவர் வாத்தியாருக்கெல்லாம் வாத்தியார்!
பிரின்சிபாலுக்கெல்லாம் பிரின்சிபால்! அவருக்கு
முன்னால்  நாங்கள் நிற்பதுதான் தர்மம்! VC அவமதித்து
விட்டாரே என்று எங்களில் யாரும் புழுங்கவில்லை.
அப்படி ஒரு நினைப்பே கூட எங்களில் யாருக்கும் இல்லை.
காரணம் VCயைச் சந்தித்த எங்களின் டெலிகேஷனில்
தேவடியாளுக்குப் பிறந்தவர்கள் யாரும் இல்லை!

நாங்கள் படிக்க வந்தவர்கள். பணிவு இல்லாமல் படிப்பு
வராது என்று நாங்கள் உணர்ந்தவர்கள். கோடல் மரபே
கூறுங்காலை என்ற நன்னூல் சூத்திரத்தை நன்கு
அறிந்தவர்கள். வாசகர்கள் இந்தச் சூத்திரத்தை அறிந்து
கொள்ள வேண்டும்..இதை அறியாமல் இந்தக் கட்டுரையைப்
புரிந்து கொள்ள முடியாது.

பின்னர் பல்கலை கேண்டீனில் சாப்பிட்டோம். ஏன்
VC நமது கோரிக்கைளை ஏற்கவில்லை என்று
விவாதித்தோம். அறிவியல் பாடம் மற்றும் PRACTICAL
சார்ந்த எங்களின் கோரிக்கைகளை VCயால் புரிந்து
கொள்ள முடியவில்லை என்று கண்டறிந்தோம். எந்த
ஒரு தமிழ்ப் பண்டிட்டாலும் இது போன்ற அறிவியல்
சார்ந்த கோரிக்கைகளை ஒருபோதும் புரிந்து கொள்ள
முடியாது என்ற ஒரு தியரியையும் வந்தடைந்தோம். நிற்க.

என்னுடைய டிகிரி சர்ட்டிபிகேட்டில் மு வரதராசனார்தான்
கையெழுத்திட்டு உள்ளார். M Varadarajan என்று ஆங்கிலத்தில்
கையெழுத்திட்டு இருப்பார். ஆம், ஆங்கிலத்தில்தான்!
வீட்டில் இருக்கிறது; யார் வேண்டுமானாலும் வந்து
பார்த்துக் கொள்ளலாம்!
***********************************************************


   
      


 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக