வியாழன், 19 டிசம்பர், 2019

860 உயிர்களைப் பலிகொடுத்த அசாம் போராட்டம்!
19 லட்சம் வந்தேறிகளை அசாம் மக்கள் ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்று போராடும் தேசிய இன எதிரிகளான
ராமச்சந்திர குஹா, மு க ஸ்டாலின், கமலஹாசன்!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
"இந்திய நாய்களே வெளியேறுங்கள்!
Indian Dogs Get Out!"

1979-1985 காலத்தில் அசாமில் உள்ள ஒவ்வொரு சுவரிலும்
எழுதப்பட்ட வாசகத்தையே நீங்கள் மேலே காண்கிறீர்கள்.
அந்தக் காலக் கட்டத்தில் அரசு டிவி மட்டும்தான். மேலும்
எல்லார் வீட்டிலும் டிவி கிடையாது. இணைய தளமோ
மொபைலோ அப்போது கிடையாது.

சண்டே, அவுட்லுக் போன்ற ஆங்கில ஏடுகளில்
வெளியாகும் கட்டுரைகள் மட்டுமே நமக்கு விஷயதானம்
(அறிவுக்கொடை) அளிப்பவை. மேலே உள்ள வாசகத்தை
1980களில் அவுட்லுக் ஏட்டில் படித்தேன்.

அசாம் போராட்டம் பெரும் வன்முறையுடன் நடந்த
போராட்டம்.  860 உயிர்களைப் பலி கொடுத்தனர்
அசாம் மக்கள். போராட்டத்தின் உச்சக் கட்டமாக
1980 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்தனர் அசாம்
மக்கள். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மூர்ச்சை
அடைந்தார்.  இந்தத் தேர்தல் புறக்கணிப்பில் அசாமில்
95 சதம் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

உலக வரலாற்றில் எந்த ஒரு தேசிய இனமும்
அசாமியர்களைப் போல் வீரஞ் செறிந்த போராட்டத்தை
நடத்தவில்லை. இந்திரா அரசின் அடக்குமுறைக்கு
860 உயிர்களைப் பலி கொடுத்த ஒரே தேசிய இனம்
அசாமிய தேசிய இனம்.

இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் ஒரே கோரிக்கை
அசாமில் உள்ள வந்தேறிகளை வெளியேற்று என்பதுதான்.
அந்தக் கோரிக்கைக்கு நியாயம் செய்ய வேண்டும் அல்லவா?

இன்று புழுவினும் இழிந்த ராமச்சந்திர குஹா கைது
செய்யப்பட்டதற்கு கண்ணீர் வடிக்கும் குட்டி
முதலாளித்துவமே, 860 உயிர்களைப் பலி கொடுத்த
அசாமிய மக்களுக்கு உங்களின் பதில் என்ன?

ராமச்சந்திர குஹா என்ன சொல்கிறார்? 19 லட்சம்
வந்தேறிகளையும் அசாமிய மக்கள் ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்றுதானே சொல்கிறார்? இதை அசாமில்
சென்று அவரால் சொல்ல முடியுமா?

சில லட்சம் வந்தேறிகளுக்காக மூன்று கோடி
அசாமிய மக்களுக்கு எதிராக நிற்பவர்தானே
ராமச்சந்திர குஹா! தேசிய இன விரோதிதானே இவர்!

வந்தேறிகளை வெளியேற்றும் அசாம் போராட்டம்
1979 முதல் 2019 வரை 40 ஆண்டு காலமாக நடைபெற்று
வரும் போராட்டம். வெண்ணெய் திரளும்போது
தாழியை  உடைக்க முயலும் போராட்டமே காங்கிரஸ்,
மார்க்சிஸ்ட், மமதா கட்சி, திமுக ஆகிய கட்சிகள்
நடத்தும் போராட்டம். 40 ஆண்டு கால அசாம் மக்களின்
போராட்டத்தை நாசம் செய்ய முயலும் இக்கட்சிகள்
தேசிய இனங்களின் நிரந்தர எதிரிகள்.

19 லட்சம் வந்தேறிகளையும் அசாம் மண்ணில் இருந்து
உடனடியாக வெளியேற்று! அவர்களை மேற்கு வங்க
மாநிலத்தில் முகாம்களில் தங்க வை என்று குரல்
கொடுக்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம். இது
மட்டுமே சரியான ஒரே தீர்வு!

இந்தத் தீர்வை ஏற்றுக் கொள்ளாத யார் எவரும்
அசாம் மக்களின் எதிரிகளே! தேசிய இன சுயநிர்ணய
உரிமையின் எதிரிகளே! இவர்கள் அனைவரும்
ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளே!

அண்மைக் காலமாகத்தான் அசாமில் அமைதி திரும்பி
வருகிறது. உல்பா (ULFA) தீவிரவாதிகளின் ஆயுதம் தாங்கிய
கொரில்லாத் தாக்குதல்களில் இருந்து இப்போதுதான்
அசாம் விடுபட்டு இருக்கிறது. நாற்பதாண்டு கால
வந்தேறிப் பிரச்சினைக்கு இப்போதுதான் தீர்வு
காணப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில், வந்தேறிகளுக்கு குடியுரிமை கொடுத்து
அசாமிலேயே தங்க வைக்க வேண்டும் என்று
போராட்டம் நடத்துபவர்கள் எப்பேர்ப்பட்ட கயவர்களாக
இருக்க வேண்டும்?

நாற்பதாண்டு ஆகியும் இந்தப் பிரச்சினை தீராமல்
வந்தேறிகளின் ஆதிக்கம் நீடிக்குமானால், அசாமில்
மீண்டும் ஆயுதப் போராட்டங்கள் நடக்கும். அரசியல்
தீர்வு கிடைக்காத நிலையில், அசாமியர்கள் ஆயுதப்
பாதையைத் தேர்ந்து எடுப்பார்கள். இது மெல்ல மெல்ல
ஏனைய வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவும்.

19 லட்சம் பேரில் சில லட்சம் பேருக்கு குடியுரிமை
இல்லையே என்று கண்ணீர் சிந்துபவர்களுக்கு ஒரு
உண்மை தெரியாது. அது என்ன? வந்தேறிகளின்
எண்ணிக்கை உண்மையிலேயே வெறும் 19 லட்சம் தானா?

இல்லை; .வந்தேறிகளின் எண்ணிக்கை சுமார் 80 லட்சம்.
80 லட்சம் பேரை வெளியேற்றுவது நடைமுறை
சாத்தியமற்றது என்பதை நன்குணர்ந்த அமித்ஷா
இவர்களில் பலருக்கு குடியுரிமையை ஏற்கனவே
வழங்கி விட்டார். எப்படி என்பதைப் பார்ப்போம்.
இதைப் புரிந்து கொள்ள அசாம் ஒப்பந்தத்தின் 5ஆவது
ஷரத்து பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

5ஆவது ஷரத்தில் இரண்டு CUT OFF DATES உள்ளன.
(இந்தத் தேதிகளுக்குப் பின்னால் வந்தவர்கள்
சட்ட விரோதக் குடியேறிகள் என்று பொருள்).

அசாம் ஒப்பந்தம் கூறும் இரண்டு cutoff dates:
1) 1.1.1966 (கவனிக்கவும் 1966)
2) 24..5.1971 (கவனிக்கவும் 1971)

இந்த இரண்டு cutoff datesஐயும் அடிப்படையாகக் கொண்டு
வெளிநாட்டு வந்தேறிகளைக் கணக்கெடுத்தால் அது
80 லட்சம், 90 லட்சம் என்று போகிறது.

எனவே அமித்ஷா மூன்றாவதாக ஒரு cutoff dateஐ உள்ளே நுழைக்கிறார்.
இது அசாம் ஒப்பந்தத்தில் இல்லாதது.அமித்ஷாவின்
CUT OFF DATE: டிசம்பர் 31, 2014 ஆகும். 1971ல் இருந்து
43 ஆண்டுகள் வெகுவாகத் தள்ளி வந்து விடுகிறார்.
இதன் பொருள்: 2014 டிசம்பர் வரை சட்ட விரோதமாக
அசாமுக்குள் குடியேறிய வந்தேறிகளுக்கு குடியுரிமை
உண்டு என்பதாகும்.

ஆக மொத்த வந்தேறிகளில் முக்கால் பாகத்தினருக்கு
அமித்ஷா ஏற்கனவே ஞானஸ்நானம் வழங்கி விட்டார்.
இறுதியாகக் கணக்கெடுத்ததில் 40 லட்சம் பேர்
வந்தேறிகள் என்று தெரிய வந்தது. பல்வேறு PARAMETERSஐ
நுழைத்தும் சிலவற்றைத் தளர்த்தியும் அமித்ஷா
இந்த 40 லட்சத்தையும் 19 லட்சமாகக் குறைத்து
விட்டார். இந்த 19 லட்சம் பேரில் பலர் 2014க்குப்
பின்னர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள்.

ஆக இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில் வந்தேறிகள்
வெறும் 19 லட்சமாகச் சுருங்கி விட்டனர். இவர்களுக்கு
குடியுரிமை இல்லை என்பது மொத்த இந்தியாவும்
முக்காடு போட்டுக்கொண்டு அழுகிற அளவுக்குப்
பெரும் பிரச்சினை இல்லை. இதை விட, நாற்பதாண்டு
காலம் போராடி, 860 உயிர்களைப் பலி கொடுத்த
அசாம் போராட்டம் லட்சம் மடங்கு பெரியது.

இந்த ஒட்டு மொத்த விஷயத்தையும் ஒரு தேசிய
இனத்தின் பிரச்சினையாகக் கருத வேண்டும்.
அந்தப் பார்வையே கைவரப் பெறாதவர்கள் ஏகாதிபத்தியக்
கைக்கூலிகளே.

குட்டி முதலாளித்துவத்தின் இந்த மனப்போக்கு பெரிதும்
ஆபத்தானது. லிபரல் பூர்ஷ்வாக்கள் முன்வைக்கும்
இழிந்த பின்நவீனத்துவக் கருத்தியலின் செல்வாக்கிற்கு
இரையாகிப் போன மூடர்களே அசாமிய மக்களுக்கு
எதிராகக் களத்தில் நிற்கிறார்கள். ராமச்சந்திர குஹா,
கமலஹாசன் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தின்
செல்வாக்கிற்கு இரையானவர்கள்.

ஒரு தேசிய இனத்தின் நலன்களுக்கு எதிராக, அந்நிய
நாட்டு வந்தேறிகளுக்கு ஆதரவாக இவர்களால் களமாட
முடிகிறது என்பது இந்தியாவைப் பீடித்துள்ள ஒரு
பெருவியாதி!

இன்று அசாமியர்கள் சந்திக்கும் இந்த எதிர்ப்பை நாளை
தமிழ் தேசியத்துக்காக நிற்கும் தமிழர்களும் சந்திப்பார்கள்.
அவர்களில் பலர் சிறைப்படலாம்; அல்லது சுட்டுக் கொல்லப்
படலாம்.

எனவே நண்பர்களே,  குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பது
என்ற சாக்கில், அசாமிய தேசிய இனத்துக்கு எதிராகப்
போராட்டங்களை நடத்துவோர் தங்களின் வாக்கு வங்கி
அரசியலுக்காகவே  இவ்வாறு செய்கிறார்கள். இவர்களின்
போராட்டம் என்பது அசாமிய தேசிய இன மக்கள் மீதான
அடக்குமுறை ஆகும். இதற்கு சர்வதேச ஏகாதிபத்தியத்தின்
ஆசி உண்டு. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை
ஆதரிக்கும் யார் எவரும் ராமச்சந்திர குஹா, மு க ஸ்டாலின்
வகையறாக்களை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

மிக்க உறுதியுடன் அசாமியர்களை ஆதரிப்போம்.
வந்தேறிகளை அசாமை விட்டு வெளியேற்றியே தீருவோம்!
தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த 860 தோழர்களின்
பெயரால் சபதம் ஏற்போம்!
*********************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக