திங்கள், 23 டிசம்பர், 2019

அசாம் மக்களுக்கு எதிரான திமுகவின் போராட்டம்!
அசாமில் இருந்து வங்கதேச வந்தேறிகளை வெளியேற்றக்
கூடாது என்று நடத்தும் பிற்போக்கான போராட்டம்!
ஏகாதிபத்தியக் கைக்கூலிகளின் போராட்டம்!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையுடன் இணைக்கப்பட்ட படத்தைப் பாருங்கள்.
அதில் 855 என்ற நம்பர் உள்ளது. அந்த நம்பர் தீபங்களால்
ஒளிர்கிறது.

இஸ்லாமிய அன்பர்களிடம் 786 என்ற நம்பர் பிரசித்தம்.
கிறிஸ்துவ அன்பர்களில் சிலர் யோவானுக்கு வெளிப்படுத்தின
விஷேசத்தைப் படித்திருக்கலாம். அதில் ஒரு நம்பர் வரும்.
அந்த நம்பர் 666.

855 என்ற நம்பர் 666ஐ விடவும் 786ஐ விடவும் பெரியது.
இது எதைக் குறிக்கிறது?

1979 முதல் 1985 வரை ஆறு ஆண்டுகளாக நடந்த அசாம்
போராட்டத்தில் இந்திரா காந்தி அரசின் அரச
பயங்கர வாதத்துக்கு உயிர்ப் பலியான அசாமிய
மக்களின் எண்ணிக்கையே இந்த 855.

855 பேர் உயிரிழந்தனர் என்ற இந்த எண்ணிக்கையை
மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அசாம் மாநில
அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அசாம் போராட்டக்குழு
ஏற்றுக் கொண்டுள்ளது.

உயிரிழந்த இந்த 855 பேருக்கும், ஒரு உயிருக்கு ஒரு தீபம்
என்ற அளவில் 855 தீபங்கள் ஏற்றி வைத்து அசாமியர்கள்
அஞ்சலி செய்கின்றனர். அந்தப் புகைப்படத்தைத்தான்
இங்கு நீங்கள் பார்க்கிறீர்கள்!

855 உயிர்கள் பலியானது பற்றி  திமுகவுக்கு கவலை இல்லை.
அவர்களின் ஒரே கவலை புழுவினும் இழிந்த தற்குறிக்
கூத்தாடியை தலைவர் ஆக்குவதுதான். மூன்று பிரபல
ஜோசியர்களிடம் அபிப்பிராயம் கேட்டு அதன் பிறகே
டிசம்பர் 23 பேரணியை திமுக நடத்துகிறது. 23 என்ற
தேதியும் ஜோசியர்களைக் கேட்டுத்தான் முடிவு
செய்யப் பட்டுள்ளது.

திமுகவின் இந்தப் போராட்டம் தேசிய இனங்களின்
சுயநிர்ணய உரிமைக்கு எதிரான போராட்டம்.
அசாமிய தேசிய இனத்தை அழிக்கும் போராட்டம்.
மொத்த அசாமியும் சுடுகாடாக்கத் திட்டமிடும் போராட்டம்.
கடைந்தெடுத்த பிற்போக்கான போராட்டம்.

ஏகாதிபத்திய அஜெண்டாவை நிறைவேற்றும் நோக்கில்
நாற்பதாண்டு கால அசாம் போராட்டம் முடிவுக்கு
வந்து விடக்கூடாது என்ற தீய உள்நோக்கத்துடன்
நடக்கும் போராட்டம்.

சில லட்சம் வந்தேறிகளுக்கு மட்டுமேயான CAA சட்டத்தை
137 கோடி இந்திய மக்களுக்கான சட்டம் என்று
பொய்யும் புனைசுருட்டும் கலந்து நாட்டு மக்களை
ஏமாற்றி, செயற்கையாக உருவாக்கப்பட்ட போராட்டத்தை
திமுக நடத்துகிறது. இதற்கான விலையை திமுக
கொடுக்கும்போது, அது திமுகவுக்கு பெருத்த நஷ்டத்தை
ஏற்படுத்தும்.

40 ஆண்டு கால அசாம் போராட்டத்தையும் அதன் விளைவான
அசாம் ஒப்பந்தத்தையும் நிறைவேறுவது பற்றிப் பேசாமல்
வங்கதேச வந்தேறிகளுக்கு பிரியாணியில் லெக்பீஸ்
வேண்டும் என்று போராடும் திமுக, தன் வரலாற்றிலேயே
இதுவரை இல்லாத பெருந் தற்குறித்தனமான போராட்டத்தை
நடத்தி அழியப் போகிறது.

1) தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை
உயர்த்திப் பிடிப்போம்!
2) வந்தேறிகளை வெளியேற்றும் அசாமிய தேசிய இனத்தின்
போராட்டத்தை உறுதியுடன் ஆதரிப்போம்!
3) 19 லட்சம் வந்தேறிகளையும் மோடி அரசு
வெளியேற்றாவிட்டால் பெரும் வன்முறையுடன் அசாமிய
மக்களே வெளியேற்றும்போது அதை ஆதரிப்போம்!
**************************************************
  மை
உதயநிதி    திருப்பூர் குணா மருதுபாண்டியன்


தாங்கள் தலைகீழாக நின்று கொண்டு
பார்ப்பதால் அப்படித் தெரிகிறது.


இப்பொருளில்  இதுவரை ஐந்து கட்டுரைகளை
எழுதியுள்ளேன். எல்லாக் கேள்விகளுக்கும்
விளக்கம் அவற்றில்  சொல்லப் பட்டுள்ளது.


வாசக அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு!
------------------------------------------------------
அருள்கூர்ந்து இப்பொருளில் இதுவரை எழுதியுள்ள
ஐந்து கட்டுரைகளையும் படியுங்கள் என்று
வேண்டுகிறோம். அப்போதுதான் ஒருங்கிணைந்த
ஒரு புரிதல் கிடைக்கும். அசாம் ஒப்பந்தம் என்றால்
என்னவென்றே தெரியாத அன்பர்களால்,
CAA பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாது.


இதையெல்லாம் நானோ நீங்களோ முடிவு செய்ய
முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி,
மேற்கொள்ளப்பட்ட கணக்கீடு இப்படி முடிவு
செய்துள்ளது.


1) அசாம் ஒப்பந்தம் பற்றியும்
2) 40 ஆண்டு  கால அசாம் போராட்டம் பற்றியும்
3) 855 உயிரிழப்பு பற்றியும் இவர்களுக்கு எதுவும் தெரியாது.
முதல் முறையாக எமது கட்டுரைகள் மூலம்
அறிந்து கொள்கிறார்கள். அது அதிர்ச்சியைத்
தருகிறது. மேலும் படித்து விவரம் அறியும்
பழக்கமே அவர்களிடம் கிடையாது.

இந்தியாவிலேயே அதிகமான நுனிப்புல் கூட்டம்
தமிழ்நாட்டில்தான் உள்ளது. அது திராவிட
இயக்கத்தின் கொடை.

இவர்களின் அறியாமையே சகல தீமைகளுக்கும்
இவர்களை அழைத்துச் செல்கிறது. நாம் தளரக் கூடாது.
தொடர்ச்சியாகவும் இடைவிடாமலும் இவர்களின்
மண்டையில் விஷயத்தை ஏற்றும் பொறுப்பில் இருந்து
விலகி விடக் கூடாது.


செல்ல மறுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
வெளியேற்றப் படுவார்கள். அல்லது சிறை வைக்கப்
படுவார்கள். இதுதான் உலகம் முழுவதும் உள்ள சட்டம்.







   







  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக