வெள்ளி, 13 டிசம்பர், 2019

தேசியக் குடியுரிமை மசோதா நிறைவேறியது!
வந்தேறிகளுக்கு குடியுரிமை கூடாது என்று
அசாமில் மண்ணின் மைந்தர்களின் போராட்டம்!
இதில் சரியான நிலைபாடு என்ன?
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத்
திருத்த மசோதா (CAB Constitutional Amendment Bill) நிறைவேறி
விட்டது. குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டு விட்டார்.
இந்த மசோதா சட்டம் ஆகிவிட்ட்து. அதாவது ஏற்கனவே
இருக்கிற Citizenship Act 1955 என்னும் சட்டம் திருத்தப் பட்டு
விட்டது. Citizenship (Amendment) Act 2019 என்று இச்சட்டம்
அரசிதழில் வெளியாகி விட்டது..

எல்லையோர நாடுகளில் இருந்து பல்வேறு காலக்கட்டத்தில்
இந்தியாவுக்குள் வந்து குடியேறியுள்ள அகதிகளுக்கு
குடியுரிமை வழங்குவது பற்றியது இப்பிரச்சினை.

யார் யாருக்கு குடியுரிமை வழங்க வேண்டும்,, யார் யாருக்கு
வழங்கக்கூடாது என்பதை நிறைவேறியுள்ள சட்டத்
திருத்தம் தீர்மானித்து விட்டது. இத்துடன் எல்லாமும்
முடிந்து விட்டது. This has become a fait accompli.

எல்லையோர மூன்று நாடுகளைச் சேர்ந்த
(பாக், ஆப்கன், வங்கதேசம்) அகதிகளில்
இந்து, கிறிஸ்துவ, சீக்கிய, பார்சி, புத்த, சமண
ஆகிய ஆறு மதங்களைச் சேர்ந்தவர்களில் டிசம்பர் 31, 2014
தேதிக்கு முன்னர் (on or before) இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு
மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்குகிறது இந்தச் சட்டம்.

இந்தச் சட்டத்தால் குடியுரிமை பெறுகிறவர்கள் எத்தனை
பேர்? குடியுரிமை பெறாதவர்கள் எத்தனை பேர்?
இந்தக் கேள்விக்கு முதலில் விடை தெரிய வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அசாமில் தேசிய குடிமக்கள்
பதிவேடு (NRC National Register of Citizens) புதுப்பிக்கப்
பட்டது. அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல்
19 லட்சம் பேர் இருந்தனர். இந்த 19 லட்சம் பேரில்
பெரும்பான்மையினர் இந்துக்கள். ஆவணங்கள் இல்லாத
இவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் பொருட்டே இந்தச்
சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவின் இன்றைய மக்கள்தொகை
(as on date, ie 12 டிசம்பர் 2019) 137 கோடி. மக்கள் தொகையில்
உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா, 137 கோடி
மக்கள்தொகை கொண்ட இந்தியா சில லட்சம் பேருக்கு
குடியுரிமை வழங்க முன்வந்துள்ளது. இதுதான் விஷயம்.

எனவே இந்த விஷயம் இந்திய மக்களின் வாழ்வில்
பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய
விஷயம் அல்ல. விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது
போலத்தான் இந்த விஷயம் முக்கியத்துவம் பெற
வேண்டும். ஆனால் தேவைக்கு மிகவும் அதிகமாக
இந்த விஷயம் ஊதிப் பெருக்கப் படுகிறது. இது
முட்டாள்தனம் ஆகும். இந்தியாவில் இத்தகைய
முட்டாள்தனம் தவிர்க்க இயலாதது.

இந்தியா இறையாண்மை உள்ள நாடு. யாருக்கும்
குடியுரிமை வழங்கவோ அல்லது மறுக்கவோ
இந்தியாவுக்கு பரிபூரண உரிமை உண்டு. அதை வேறு
எந்த நாடும் கேள்வி கேட்க முடியாது.

இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு இந்தியாவில்  
இரண்டு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வெளிப்படுகிறது.
ஒன்று: ஒரு சில எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு.
இரண்டு: அசாம் மக்களின் எதிர்ப்பு. இந்த இரண்டு
எதிர்ப்புகளும் வேறுபட்டவை; ஒன்றுக்கொன்று
முரண்பட்டவை.

ஒன்று: காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திமுக போன்ற
கடசிகளின் எதிர்ப்பு. இந்த எதிர்ப்பு சந்தர்ப்பவாதமான
எதிர்ப்பு. முன்னுக்குப் பின் முரணான எதிர்ப்பு.
இந்த எதிர்ப்பானது, மசோதா சட்டமானதுமே
பொருளற்றுப் போய்விடுகிறது. இது மேற்கூறிய
கட்சிகளின் வாக்குவங்கி அரசியலுக்கு மட்டுமே
பயன்படும். எனவே இதை விட்டு விடுவோம்.

இன்னொரு தரப்பின் எதிர்ப்பு பெரும் முக்கியத்துவம்
உடையது. அது மக்களின் எதிர்ப்பு. அசாம் உள்ளிட்ட
வடகிழக்கு மாநில மக்களின் எதிர்ப்பு. இது
பொருட்படுத்த வேண்டிய எதிர்ப்பு. இதில் மட்டுமே
நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அகதிகள் என்று கெளரவமாக நாம் கூறலாம்.
சட்டம் அவர்களை illegal immigrants என்கிறது. சட்ட
விரோதமாகக் குடியேறியவர்கள் என்பது இதன் பொருள்.
அசாம் மற்றும் வடகிழக்கு மக்கள் இவர்களை
வந்தேறிகள் என்றுதான் அழைக்கிறார்கள். ஆக
வந்தேறிகளுக்கும் மண்ணின் மைந்தர்களுக்குமான
போராட்டம் அசாமிலும் வடகிழக்கிலும் நடக்கிறது.

அசாமில் நடக்கும் போராட்டத்தில் மதத்திற்கு
இடமில்லை. இந்து என்றாலும் சரி, முஸ்லீம் என்றாலும்
சரி, வந்தேறி வந்தேறியே! எந்த வந்தேறியும் இங்கு
வேண்டாம் என்பதே அசாமிய, வடகிழக்கு மாநில
மக்களின் உறுதியான நிலைபாடு.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களுக்குப்
பாதுகாப்பு அளிக்கும்  பொருட்டு குடியுரிமைச் சட்டம்
பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
புதிதாகக் குடியுரிமை பெறுவோர் அசாமில் எங்கு
வேண்டுமானாலும் குடியேறி விட முடியாது.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குடியேற
இயலும். இருப்பினும் அசாமிய மற்றும் வடகிழக்கு
மக்கள் இந்தப் பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில்
கொள்ளவில்லை.

முன்னர்க்கூறிய 19 லட்சம் பேரில், எத்தனை லட்சம்
பேர் குடியுரிமை பெறுகிறார்கள் என்றும் எத்தனை
லட்சம் பேர் குடியுரிமை பெறவில்லை என்பதும்
முக்கியமானது. இதைத் தெரிந்து கொள்ளாமல்
ஒரு முடிவுக்கு வர இயலாது.

இந்த 19 லட்சம் பேரும் எல்லையில் காத்துக்
கொண்டிருபோர் அல்ல. இவர்கள் எல்லாம்
ஏற்கனவே அசாமில் குடியேறி இருப்பவர்களே.
இவர்களே வெளியேற்றச் சொல்லியே அசாமிய
மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

இப்போராட்டம் நீண்ட வரலாற்றை உடையது.
இதன் விளைவாக அசாம் ஒப்பந்தம் (Assam accord)
ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி வந்தேறிகள்
வெளியேற்றப் படவில்லை. குறிப்பாக 1987க்குப்
பின் வந்த மத்திய அரசின் இந்தப் பிரதமரும் வந்தேறிகளை
வெளியேறவில்லை. எனவே பிரச்சினை தீவிரம்
அடைந்துள்ளது.

இந்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப் பட்டு விட்ட
போதிலும், இதை உடனடியாக அமல்படுத்தி விட
இயலாது. இச்சட்டப்படி நடவடிக்கை எடுத்து குடியுரிமை
வழங்கவும், குடியுரிமை பெறாதவர்களை நீக்குவதும்
உடனடியாக நடக்கக்கூடிய விஷயம் அல்ல. இச்சட்டம்
சில தீவிரமான செயல்முறைகளை (process) கொண்டது.
இன்று ஆரம்பித்தாலும் இன்னும் ஐந்து அல்லது ஆறு
ஆண்டுகள் ஆகும். ஏதோ நாளையே இச்சட்டம்
அமல்படுத்தப் பட்டு விடும் என்று கருதுவது தவறு. 

தமிழீழ அகதிகளுக்கு இச்சட்டம் குடியுரிமை
வழங்கவில்லையே என்று குட்டி முதலாளித்துவம் கவலைப்
படுகிறது. இந்தச் சட்டத்தில் தமிழ் ஈழ அகதிகளைச்
சேர்க்கக் கூடாது. இது நூறு ஆண்டுகளாக நீடித்து வரும்
சிக்கல் மிகுந்த (highly complex) பிரச்சினை. இதில் தமிழ் ஈழப்
பிரச்சினையைச் சேர்த்து அதை மேலும் சிக்கலாக்குவது
மடமை.

தமிழ் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதை
மிக எளிதாகச் செய்ய இயலும். மத்திய அரசின் ஒரு
நிர்வாக உத்தரவின் (executive order) மூலம் குடியுரிமை
வழங்க இயலும். இதற்கு சட்டத் திருத்தம் கொண்டு
வந்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய
தேவை எதுவும் இல்லை.

சுருங்கக் கூறின், குடியுரிமைச் சட்டம் என்பது இரும்பைப்
பிழியும் இடம். ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை
வழங்குதல் என்பது எலுமிச்சைப் பழத்தைப் பிழிவது
போன்றது. அதை இரும்பைப் பிழியும் இயந்திரத்தில்
கொடுத்துப் பிழிய வேண்டியதில்லை.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் அத்தனை பேருக்கும்
இந்தியக் குடியுரிமை வழங்கி விடலாம். இதில் யாருக்கும்
ஆட்சேபம் இருக்காது. ஆனால் தமிழ் ஈழ அகதிகளுக்கு
வரலாற்றுக் கடமை ஒன்றுள்ளது. அவர்கள் இந்தியக்
குடியுரிமை பெறுவதை விட, தங்களின் சொந்தத்
தாயகத்திற்குத் திரும்பிச் சென்று, அங்கே ஈழ விடுதலைப்
போராட்டத்தை முன்னெடுப்பதே அவர்களின் தோள்களில்
கனக்கும் கடமையாகும். தமிழ் ஈழ மக்களும் அதைத்தான்
விரும்புகிறார்கள்.

இழந்த காணியை மீட்கவும், சிங்களக் குடியேற்றத்தைத்
தடுக்கவும், ஈழ விடுதலைப் போரைத் தொடர்ந்து
முன்னெடுக்கவும், தமிழ் ஈழத்தில் குறைந்து கொண்டே
வரும் தமிழரின் மக்கள் தொகை மேலும் குறைந்து
விடாமல் தடுக்கவும் இங்குள்ள ஈழ அகதிகள் சொந்த
மண்ணுக்குச் செல்வதே நியாயம் ஆகும். அது இன்றைய
தமிழ் ஈழத்தின் வரலாற்றுத் தேவை ஆகும்.

மேலே இதுவரை கூறியவை அனைத்தும் இந்தப்
பிரச்சினையைப் புரிந்து கொள்ள உதவும் செய்திகள்.
சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் இடமின்மை
காரணமாக் கூறவில்லை.

சரி, இப்போது தீர்வுக்கு வருவோம்.
குடியுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லும்
மத்திய அரசுக்கும், யாருக்கும் குடியுரிமை வழங்கக்
கூடாது என்று சொல்லும் அசாமிய மற்றும் வடகிழக்கு
மக்களுக்கும் உள்ள முரண்பாட்டை எப்படித் தீர்ப்பது?
இதுதான் கேள்வி.இதில் சரியான நிலைபாடு என்ன?

இந்திய ஆளும் வர்க்கக் கடசிகளும், சமூகத்தின்
குட்டி முதலாளித்துவக் கசடுகளும், லிபரல் மற்றும்
பின்நவீனத்துவக் கபோதிகளும் இதற்கொரு சரியான
தீர்வை ஒருபோதும் கூறப் போவதில்லை. சிந்தனைக்
குள்ளர்களான அவர்களின் குறுகிய அறிவின்
எல்லைக்குள் இதற்குத் தீர்வு எதுவும் தோன்றாது.
எனவே யாம் இந்தத் தீர்வை முன்வைக்கிறோம்.

1) ராணுவத்தின் மூலம் மக்கள் எழுச்சியை அடக்க
மத்திய பாஜக அரசு முனையக் கூடாது.அங்குள்ள
ராணுவத்தைச் செயலற்றதாக்க வேண்டும்.

2) அசாமில் தற்போது வசித்து வரும் வந்தேறிகளை
(குடியுரிமைத் தகுதி பெற்றவர்கள், பெறாதவர்கள்)
அசாமில் இருந்து மொத்தமாக வெளியேற்ற வேண்டும்.

3) அவர்கள் அனைவரையும் மேற்கு வங்க மாநிலத்தில்
குடியேற்ற வேண்டும். குடியுரிமை வழங்கும்
நடைமுறைச் செயல்பாட்டை (process)  சிறப்புக் குழுக்கள்
அமைத்து (special task force) நியமித்து விரைவு படுத்த
வேண்டும். வெளியேற்ற வேண்டியவர்களை வெளியேற்றி
விட்டு மீதமுள்ள குடியுரிமை பெற்ற அனைவரையும்
மேற்கு வங்க மாநிலத்தில் நிரந்தரமாகக் குடியேற்றி விட
வேண்டும். ஏனெனில் அகதிகளில் பலர் வங்க மொழி பேசுவோர்.

4) அகதிகளை மேற்கு வங்கத்தில் குடியேற்றுவது ஒன்றே
சரியான தீர்வு. அசாமிலோ வடகிழக்கு மாநிலங்களிலோ
அவர்களில் ஒருவர் கூட இருக்கக் கூடாது. ஏனெனில்
அதை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை.

5) பெருந்தன்மை மிக்க மமதா பானர்ஜியும்
மார்க்சிஸ்டுகளும் சில லட்சம் அகதிகளை
(அவர்களில் பெரும்பாலோர் வங்க மொழி பேசுவோர்)
மனமுவந்து ஏற்பார்கள். இது மட்டுமே சரியான ஒரு தீர்வு!
******************************************************
இரண்டில் ஒன்று! பதில் சொல்!
-----------------------------------------------
அசாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. போராடும்
மக்களை ஒடுக்க ராணுவம் அசாமுக்குச் சென்று
கொண்டு இருக்கிறது. வந்தேறிகளில் ஒருவரைக்கூட
ஏற்க மாட்டோம் என்று அசாமிய மக்கள் உறுதியுடன்
நிற்கிறார்கள். இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில்
இறந்தும் விட்டார்கள்.

இந்த நிலையில் போராடும் அசாம் மக்களுக்கான
தீர்வு என்ன?
1) அமித்ஷா சொல்வது போல வந்தேறிகளை அசாம்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? அல்லது
2) இக்கட்டுரை கூறுவது போல, அனைத்து
வந்தேறிகளையும் அசாமை விட்டு வெளியேற்றி
மேற்கு வங்க மாநிலத்தில் குடியேற்ற வேண்டுமா?
இதுதான் கேள்வி.

இதற்குப் பதில் சொல்லாமல், வேறு விஷயங்களைப்
பற்றிப் பேசுவது பிரச்சினைக்குத் தீர்வு ஆகாத.
*****************************
இப்படித் தெளிவாகக் கூறிய பின்னும், இது எப்படித்
தாங்கிப் பிடிப்பதாக அமையும்?

எல்லா வந்தேறிகளையும் அசாமை விட்டு வெளியேற்று 
என்று கூறுவது எவ்வாறு அமித்ஷாவை  தாங்கிப்
பிடிப்பதாக அமையும்? பிறழ் புரிதல்!



வந்தேறிகளை அசாமும் வடகிழக்கும் ஏற்கவில்லை.
எனவே அவர்களை அம்மாநிலங்களில் இருந்து
உடனடியாக வெளியேற்றுங்கள்.

அவர்களை ஏற்கத் தயாராக இருக்கும் மேற்கு வங்க
மாநிலத்துக்கு அனுப்புங்கள்.

இன்னும் ஒரு வார காலத்துக்குள்
வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும்!
------------------------------------------------------------
மமதா பானர்ஜி வந்தேறிகளை ஏற்கத் தயாராக
யிருக்கிறார். எனவே எல்லா வந்தேறிகளையும்
முதலில் மேற்கு வங்கத்தில் குடியேற்றுங்கள்.
வங்க மொழி பேசும் வந்தேறிகளை அவர் ஏற்றுத்தான்
ஆக வேண்டும். அவரும் மனமுவந்து ஏற்கிறார்.

எனவே வந்தேறிகளை இன்னும் ஒரு வார காலத்துக்குள்
அசாமில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதற்கு
அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.


செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
இற்கு வங்கத்தை மத்திய அரசு தத்தெடுக்க
வேண்டும்.

அதை யாராலும் இப்போது சொல்ல இயலாது.
இச்சட்டம் அமலுக்கு வர குறைந்தது ஏழெட்டு
ஆண்டுகள் ஆகும். சட்டம் அமலுக்கு வரும்போது
மட்டுமே யார் யார் வெளியேற்றப் படுகிறார்கள்
என்பது தெரிய வரும்.
------------------------------------------------------------------------

இந்தியாவின் தலைசிறந்த
இருதய அறுவை சிகிச்சை நிபுணர்
டாக்டர் மதுசங்கர் அவர்களின் 5 நிமிட நேர்காணல்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
இருதயம் என்றால் pumping திறன் இருக்க வேண்டும்.
ஆனால் pumping திறனை பெரிதும் இழந்த
இதய நோயாளிகளுக்கு உயிரையும் வாழ்வையும்
நீட்டித்துத் தருகிறார் டாக்டர் மதுசங்கர்!

இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை
மருத்துவராக (Cardiac surgeon) திகழ்பவர் டாக்டர் மதுசங்கர்.
பச்சைத் தமிழரான இவர் நெல்லை மாவட்டம்
வீரவநல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

pumping திறன் குறைந்த இதய நோயாளிகளுக்கு
அதாவது இதயத்தின் திறன் 10 சதம், 20 சதம் என்ற
அளவில் குறைந்து விட்ட நோயாளிகள் இயல்பு
வாழ்க்கையை இழக்கிறார்கள்; படுக்கையுடன்
முடங்கி விடுகிறார்கள். இவர்களின் எஞ்சிய வாழ்வுக்கு
ஓராண்டு அல்லது இரண்டாண்டு என்று கெடு
விதிக்கப் படுகிறது.

இத்தகைய நோயாளிகளுக்கு புனர் ஜென்மம் அளிப்பவர்
டாக்டர் மதுசங்கர். இதற்காக இவர் நவீன சிகிச்சை
முறையைக் கையாள்கிறார் அது ஸ்டெம் செல் சிகிச்சை
ஆகும்.

ஸ்டெம் செல் என்றால் குழந்தை பிறக்கும்போதே
எடுத்துப் பாதுகாத்து வைப்பது என்றுதான் நமக்குத்
தெரியும். ஆனால் நோயாளியின் உடலில் உள்ள
எலும்பு மஜ்ஜையில் (bone morrow) இருந்து ஸ்டெம் செல்
சார்ந்த அடிப்படை அணுக்களை எடுத்து, உரிய விதத்தில்
இதயத்துள் ஊசி மூலம் செலுத்தி, இதயத்தின் pumping
திறனை அதிகரிக்கும் சிகிச்சையை டாக்டர் மதுசங்கர்
மேற்கொள்கிறார். இது இதய நோய் மருத்துவத்தில்
முற்றிலும் புதிய முறை ஆகும்.

டாக்டர் மதுசங்கர் இதய மாற்று அறுவை
சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்தவர், தமிழகத்தில்
இதய மாற்று சிகிச்சையில் இவரே முன்னோடி.

அப்போதே இந்திய அரசு டாக்டர் மதுசங்கருக்கு
பத்மஸ்ரீ விருது வழங்கி இருக்க வேண்டும். தற்போது
பத்மபூஷண் வழங்க வேண்டிய நேரம்.

செயற்கரிய செய்வார் பெரியர் என்ற வள்ளுவரின்
மொழிக்கிணங்க செயற்கரிய செய்து வரும்
டாக்டர் மதுசங்கருக்கு பத்ம விருதுகளை வழங்கி,
இந்திய அரசு தனது கெளரவத்தை நிலைநாட்டிக்
கொள்ள வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் கோருகிறது.
*************************************************
வுக்கு கீழிறங்கி விட்ட       .

சரியாகச் சொன்னீர்கள்.அசாம் ஒப்பந்தம்
வந்தேறிகளை வெளியேற்றச் சொல்கிறது.
அமித்ஷாவின்CAB வெளியேற்றப்பட
வேண்டியவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது.


ஆம் சார், வீரவநல்லூர் எங்கள் ஊர்தான்.
particle acceleratorஐ பார்த்து விட்டு வந்து எங்களுக்குச்
சொல்லுங்கள். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

கிராமப் புறத்தில், அரசு உதவி பெறும் பள்ளியில்,
தமிழ் மீடியத்தில் படித்த டாக்டர் மதுசங்கர்
மருத்துவத்தில் சாதனை புரிந்த தமிழர்.

   



   



  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக