ஞாயிறு, 29 டிசம்பர், 2019

(மீள் பதிவு)!   மருதுபாண்டியன்

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  சரி.
"இலக்கங்களின்" கூட்டுத்தொகை என்பதில்
உள்ள பன்மை (இலக்கங்கள்) சுழியைத் தவிர்த்து
 விடுகையில் சுழி எங்ஙனம் விடையாகும்?
சகுந்தலாதேவி அம்மையார் சுழியும் ஒரு
விடையே என்று கூறவில்லையே!

வேட்டுவச் சமூகம் இடம் பெயரும் தன்மை
கொண்டிருந்தது. அங்கு பறை என்பது வெறும்
கேளிக்கைக் கருவி மட்டுமன்று; அது செய்திப்
பரிமாற்றத்துக்கானது. மேய்ச்சல் சமூகத்தில்
நிலைத்த குடியிருப்பு வந்து விட்டது. Settlement என்பது
மானுட வாழ்வில் பெரும் முக்கியத்துவம் உடையது.

ஆண்டாள் வர்ணிக்கும் காலத்தில், மேய்ச்சல் சமூகம்
வேளாண் சமூகத்தின் கூறுகளைப் பெறத்
தொடங்கி இருந்த காலம். இங்கு இடம் பெயர்தல்
அரிதானது; பெரும் இயற்கைப் பேரிடர்களின்போது
மட்டுமே இடம் பெயர்தல் நிகழும். மதுராவில்
கண்ணன் நிலையான ஆட்சி புரிந்ததாக ஆண்டாள்
கூறுகிறாள். மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
என்று கூறுகையில் நிலையான ஆட்சி நடைபெற்றதை
ஆண்டாள் கூறுகிறாள்.
     

2020இல் கேட்டு விடுவோம்.


ஆ என்பதும் ஆய் என்பதும் மிகவும்
தொன்மையான தமிழ்ச் சொற்கள்.
ஆ என்பது ஓரெழுத்தொரு மொழியாய் நின்று
பசுவைக் குறிக்கும். ஆயர் என்போர் பசுக்களை
உடையோர். ஆயர்பாடி ஆயர்களின் வாழிடம்.
"ஆவிற்கு நீரென்று இரப்பினும்" என்ற குறளிலும்
"ஆபயன் குன்றும்" என்ற தொடரிலும் ஆ என்ற சொல்
பசுக்களைக் குறிக்கிறது. இன்றைய ஆவின் பால் என்ற
சொல் ஆ என்ற சொல்லில் இருந்து பிறந்ததே.

அடுத்து ஆய் என்ற சொல்லை பற்றிப் பார்ப்போம்.
ஆய் அண்டிரன் என்ற மன்னனைத் தமிழ் வரலாறு
அறியும்.
"யாயும் ஞாயும் யாரா கியரோ" ஆய் என்ற சொல்
தாயைக் குறிக்கிறது. கருப்பாயி என்ற சொல்
கருப்பு ஆயி (கருப்புத்தாய்) என்று பொருள்படும்.
செல்லாயி என்ற சொல் செல்லத்தாய் என்று பொருள்படும்.

இந்த ஆய் என்ற சொல்லே இன்று ஆயா என்ற சொல்லாக
திரிந்து நிற்கிறது. அப்பன் ஆயி என்ற பேச்சு வழக்குச்
சொல்லும் ஆய் என்ற சொல் காலப்போக்கில் திரிந்ததன்
அடையாளமே.
    
ஆக, ஆ என்ற சொல்லும் ஆய் என்ற சொல்லும்
வெவ்வேறு பொருள் கொண்டவை என்பது நிறுவப்
படுகிறது.



மதுராவையும் கண்ணனே ஆண்டான் என்கிறார்
கண்ணனின் தாசனான கவிஞர் கண்ணதாசன்.

"குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்"
என்கிறார் கண்ணதாசன். தான் பிறந்த ஊரை
ஆள  இயலாத பலவீனம் உடையவன் கண்ணன் என்ற
தங்களின் கருத்து ஏற்புடையதல்ல.

 கண்ணன்


மெத்தச்சரி; பிதுரார்ஜித மண்ணை கண்ணன்
பகைவரிடம் விட்டு வைத்தான் என்பது தர்க்கப்
பொருத்தமற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக