ஞாயிறு, 1 டிசம்பர், 2019

நல்ல தமிழ், அழகிய மேற்கோள்கள், அடிக்கடி திருவள்ளுவரின் துணைவேறு. இளங்கோ சுப்பிரமணியன், இன்றும் எழுத்திலும், பேச்சிலும் இளமையோடிருக்கிறார். மகிழ்ச்சியாயிருக்கிறது.
ஆனால், அவர் தேடித் தேர்ந்தெடுத்து, திக்கெட்டும் கொட்டி முழக்கிய கொள்கையெங்கேபோனதென்றுதான் வியக்கிறேன்.
BSNL புத்தாக்கம் பெறவேண்டுமென்பதில் எனக்கு அவருடன் மாற்றுக் கருத்தில்லை. தொழிற்சங்கங்களின் கையறு நிலை குறித்த அவரின் கருத்தும் சரிதான்.

ஆனால் ஊழியரை விருப்ப ஓய்வில் அனுப்பினால் மட்டும்தான் புத்தாக்கம் சாத்தியம் எனும் அரசின், அதுவும் மோடி அரசின் நிலைபாட்டை ஆதரிப்பதுபோல எழுதுவதை எண்ணித்தான் வியக்கிறேன்.
மோடி அரசு பதவியேற்ற நாளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7. சென்ற காலாண்டோடு நிறைவடைந்த நான்கரை ஆண்டுகளில் அது 4.5 ஆக குறைந்திருக்கிறது. வங்கிகளின் வாராக் கடன் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த ஆட்சியில் மட்டும், 92 லட்சம் வேலையிழப்பு ஏற்பட்டிருக்கிறது. புதிய வேலை வாய்ப்பிற்கான வழிகள் அடைபட்டுப் போயிருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பெரு நிறுவனங்களில், உற்பத்திக் குறைப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், நமது ஊழியரின் விருப்ப ஓய்வுத்திட்டத்தை, முன்னெடுத்திருக்கிறது இந்த அரசு. ஆரம்ப நிலை நலிவுற்ற நிறுவனங்களை மீட்டெடுக்க, விருப்ப ஓய்வுத் திட்டம்தான் ஒரே தேர்வென்பதுபோல இளங்கோ எழுதுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஊழியர் எண்ணிக்கை மிகக் குறைவாகவுள்ள தனியார் தொலைபேசி நிறுவனங்களும், நம்மைவிட அதிக நட்டத்திலிருப்பது, தோழருக்குத் தெரியாதா.

ஆக நட்டத்திற்கும், நிறுவனம் நலிவுற்றதற்கும் ஊழியர் எண்ணிக்கையைக் காரணமாக்கும் அரசைக் கண்டிப்பதற்கு பதில், அரசின் அந்த வாதத்தை ஆதரித்து எழுதுவது மிகமோசம். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை, நட்டத்திலிருந்து மீட்க ரூ 42000 கோடியளவிற்கு சலுகையளித்த நிதியமைச்சர்தான், BSNL புத்தாக்கத் திட்டதிற்கு நிதி தர மறுத்து, நிறுவனத்தையே மூடிவிடலாமென்று கோப்பில் எழுதுகிறார். இதை எப்படி புரிந்துகொள்வது.

அரசு திட்டமிட்டு பொதுத் துறை நிறுவனங்களை நட்டத்தில் முடக்கி, தள்ளுபடி விலையில் தனியாருக்கு விற்க சதி செய்வதை, ஆதரிப்பதுபோலிருக்கிறது, இளங்கோவின் வாதம். ஏர் இந்தியாவின் நட்டம் ₹77000 கோடியில், அந்நிறுவனத்தை வாங்க முன்வரும் தனியார் ₹30000 கோடிக்கு மட்டும் பொறுப்பேற்றுக்கொண்டால் போதும், மீதமுள்ள ₹47000 கோடியை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று விலைகூவும் இந்த அரசு, பெரு முதளாளிகள் வங்கியில் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றிய வாராக்கடனுக்கு லட்சம் கோடிகளுக்குமேல், ரிசர்வ் வங்கியின் வைப்பு நிதியை வாரிவிட்ட இந்த அரசுதான் கேந்திரமான தொலைத் தொடர்பு துறையின் அரசு நிறுவனமான BSNL ன் 4 ஜி அலைக்கற்றைக்கு சந்தை விலைகேட்கிறது,.

ஊழியர்மேல் கருனை கொண்டு விருப்ப ஓய்வு திட்டத்தை அரசு அறிவித்ததுபோலவும், வாராது வந்த மாமணியை வாரி மார்போடணைத்துக் கொள்வதே வர்க்கக் கடமையென்பதுபோலவும் எழுதுகிறார் தோழர் இளங்கோ. அவர் பயின்று, பழகி, போற்றிப் பேசிய மார்க்சியம் கடைசியாக ஒரு மிக மோசமான வலதுசாரி, மத அடிப்படைவாத அரசின் தொழிலாளர் விரோத நிலைபாட்டை ஆதரித்து எழுதுவதில், விதந்தோதுவதில் முடிந்ததை எண்ணி வருந்துகிறேன்.

அடுத்த மாத ஊதியம் உத்தரவாதமில்லாத சூழலில், நம்பிய தொழிற்சங்கங்கள் நட்டாற்றில் விட்டபின், கையறு நிலையில், வேறு வழியறியாமல், அரசின் விருப்ப ஓய்வெனும் வஞ்சக வலையில் வீழ்ந்த சாமானியத் தொழிலாளிக்கு, என்ன அழகாக ஆறுதல் கூறுகிறார் தோழர் இளங்கோ.

சொந்த மண்ணில் வாழ்விழந்த அகதிகளையொத்தது, விருப்ப ஓய்வில் செல்லும் ஒவ்வொரு ஊழியனின் நிலையும் என்பதை இளங்கோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. தான் செய்யாத தவறிற்கு, தண்டனையனுபவிப்பத்தையொத்தது அவனின் நிலை.

ஊழியர்கள் கேட்டனரா, விருப்ப ஓய்வை. இன்று விருப்ப ஓய்வில் செல்லும் ஒவ்வொரு ஊழியனின் தியாகத்திலும், வியர்வையிலும் எழுந்து நிற்கிறது இந்த நிறுவனம். அடிப்படைக் கட்டமைப்பிற்காக அவன் சிந்திய வியற்வையை அறியாமல், மதிக்காமல், பணியை நிறைவு செய்ய விடாமல் வெளியேற்ற அரசு செய்யும் முயற்சியை ஆதரித்து எழுத இளங்கோவுக்கு எப்படி மனம் வந்தது. அவரின் இடதுசாரிச் சிந்தனை ஏன் இப்படி நீர்த்துப் போனது.

ஆனால் இதுவும் மோடி அரசின் சாதனைதான், தொழிலாளி வர்க்கத்தை வேரறுக்க, அவர்களிடையேயிருந்தே ஆதரவுக் குரல் கொடுக்க வைத்துள்ளதே ! வாழ்த்துக்கள் இளங்கோ, தொடரட்டும் உம் வர்க்கப் பணி. வாழ்த்துக்களுடன்
சீனிவாச கோபாலன்.
----------------------------------------------------------------------------------------------------

கருவின் குற்றம் முகிலனுக்குப் பதில்!

தகப்பன் குடித்து விட்ட வந்து பிள்ளைகள் கண் முன்னே தாய
நிர்வாணப் படுத்தி வெறி தீர்ப்பதும் தாயும் அதற்கு
இணங்குவதுமான குடுமத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள்
இப்படித்தான் பேசுவார்கள்.

உழைக்கும் வர்க்கக் குடுமத்தில் பண்பாடு உண்டு.
இது லும்பன் கூடுமாம். குடும்பம். இப்படித்தான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக