சனி, 28 டிசம்பர், 2019

தமிழை அகற்றி விடும் ஆங்கிலம்!
-------------------------------------------------------
அன்றாட வாழ்வில் OTP எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டை
நாம் எதிர்கொள்கிறோம். கால் டாக்சியில் ஏறும்போது
OTP  நம்பரை நினைவில் இருத்துகிறோம். இணைய வழிப்
பரிமாற்றங்களில் OTP இடம் பிடிக்கிறது.

OTP என்பதற்கான தமிழ்ச்சொல்லாக ஒரு முறை மட்டுமே
பயன்படுத்தும் கடவுச் சொல் என்று நீட்டி முழக்குகிறோம்.
அல்லது ஒரு நேரக் கடவுச்சொல் என்றும் சொல்லலாம்.

ஆனால் எவர் ஒருவரும் OTP என்ற ஆங்கிலச் சொல்லையே
பயன்படுத்துகிறார்கள். ஏன்? எவருக்குமே தமிழ்ப்பற்று
இல்லையா? அப்படி அல்ல.

உபியில் உள்ள இந்தி வெறியனும் கொல்கத்தாவில்
உள்ள வாங்க மொழி பேசுபவனும் கூட OTP என்ற
சொல்லையே பயன்படுத்துகின்றனர். OTP க்கு
இணையான இதைச் சொல்லோ வங்கமொழிச்
சொல்லோ கிடையாது.

ஏன் இப்படி நிகழ வேண்டும்? OTP என்ற சொல்
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் உள்ள சொல்.
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் ஆங்கிலம்தான்
உள்ளது. எனவேதான் OTP என்ற சொல் கோலோச்சுகிறது.

OTP என்பது ஒரு உதாரணம் மட்டுமே. OTP போன்று
ஆயிரம் சொற்கள் அன்றாட வாழ்வில் இடம் பெற்று
மாநில மொழிகளை அகற்றி விடுகின்றன.

இது பற்றி எந்த ஓர்மையும் இல்லாமல், வெறுமனே
தமிழ்ப்பற்று என்று பேசிக்கொண்டு இருப்பதால்
தமிழுக்கு எப்பயனும் இல்லை!
****************************************************       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக