சனி, 21 டிசம்பர், 2019

கணித மேதை இராமானுஜன் பிறந்த நாள்!
பை கணிதக் கழகத்தில் சிறப்புக் கூட்டம்!
நியூட்டன் அறிவியல் மன்றம் சிறப்புரை! 
-------------------------------------------------------------
டிசம்பர் 22, 1887ல் இராமானுஜன் பிறந்தார்.
இராமானுஜனின் 133ஆவது பிறந்த நாளன்று (22.12.2019)
விழா எடுக்கிறது பை கணிதக் கழகம்!

இவ்விழாவில்
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர்   
பங்கேற்றுச் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
டாக்டர் சிவராமன் எழுதிய
இயற்கையில் கணிதம்
என்ற நூலையும் திறனாய்வு செய்கிறார்.

இடம்: டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24.
நாள்: ஞாயிறு 22 .12.2019 காலை 10 மணி.
அனைவரும் வருக!
*************************************** 

பி இளங்கோ சுப்பிரமணியன்
 கட்டுரையாளர் பற்றிய விவரக் குறிப்பு!
-----------------------------------------------------------
மத்திய அரசின் தொலைதொடர்புத் துறையிலும்
BSNL நிறுவனத்திலும் பல்லாண்டுகள் பணியாற்றி
ஒய்வு பெற்றவர்.

இயற்பியலில் முதுநிலை பயின்ற இவர் கடந்த
20 ஆண்டுகளாக நன்கறியப்பட்ட அறிவியல் பரப்புநராக
(Science communicator) தீவிரமாகச் செயல்பட்டு வருபவர்.
இவர் ஓர் அறிவியல் எழுத்தாளரும் ஆவார்.

நியூட்டன் அறிவியல் மன்றம் என்ற அமைப்பை நிறுவி
அதன் மூலம் அறிவியல் பரப்பும் பணியைத் திறம்படச்
செய்து வருபவர். அச்சு ஊடகம், மின்னணு ஊடகம்,
சமூக ஊடகம் ஆகிய மூன்றிலும் இவரின் அறிவியல்
பரப்பும் பணிகள் நிகழ்ந்து வருகின்றன.

சமூகத் தாக்கம் உடைய அறிவியல் விஷயங்களில்
சரியான அறிவியல் நிலைபாட்டை எடுத்துரைப்பது
இவரின் பணி. அகில இந்திய வானொலிமற்றும் பல்வேறு
தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக
அறிவியல் விளக்கம் அளித்து வருகிறார்.

சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும்போது
இரண்டு தொலைக்காட்சி சேனல்களில் (நியூஸ் 7, கலைஞர்)
பங்கேற்று ரன்னிங் கமென்டரி அளித்ததை  
வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) வரையறுத்துள்ள
இந்தியக் குடிமக்களின் கடமையான
"சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை ஏற்படுத்துதல்"
 (to develop the scientific temper) என்ற கடமையை தமது
நியூட்டன் அறிவியல் மன்றம் மூலமாகச் செயல்படுத்தி
வருபவர் இவர்.
**************************************************






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக