ஞாயிறு, 10 ஜூலை, 2016

முஸ்லிம் குழந்தைகள் உயிர்ப் பலி!
இஸ்லாமிய மூடநம்பிக்கைகளே காரணம்!
தடுப்பூசி ஹராம் செய்யப் பட்டதா?
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன், தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
காட்சி-1: இடம்: கோழிக்கோடு அரசு மருத்துவமனை.
-----------------------------------------------------------------------------------------------
முகமது அஃபஸ் என்னும் 14 வயதுச் சிறுவன்
அவசரம் அவசரமாக அறுவை சிகிச்சைக்கு
அழைத்துச் செல்லப் படுகிறான். அவனுக்கு
தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) நோய்.
மூச்சு விடவே மிகவும் சிரமப் படுகிறான்.

அறுவை  சிகிச்சை நடக்கிறது என்றாலும்
அதற்குள் அவனின் உடல் முழுவதும் நஞ்சாகி
விடுகிறது. டிப்தீரியாவை உண்டாக்கும் கொடிய
வைரஸான Corynebacterium diphtheria சிறுவனின்
உடலை நஞ்சாக்கி விடுகிறது. சிறுவன் இறந்து
விடுகிறான்.

அறுவை சிகிச்சை செய்து அவன் உயிரைக்
காப்பாற்றப் போராடிய டாக்டர் பீனா உம்மன்
வருத்தத்துட ன் கூறுகிறார்: ஒரே ஒரு தடுப்பூசியை
முன்பே போட்டிருந்தால், இந்தச் சிறுவன் உயிர்
பிழைத்திருப்பான் என்கிறார். ஆம், சிறுவன்
முகமது அஃபசுக்கு  தடுப்பூசி போடப்படவில்லை.  

காட்சி-2: இடம்: கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள்.
------------------------------------------------------------------------------------------------------
முஸ்லிம்கள் மிக மிக அதிகமாக வசிக்கும்
கேரளத்தின் இரு மாவட்டங்கள் கோழிக்கோடும்
மலப்புரமும். இங்கு ஷரியத் சட்டமே ஆட்சி
செலுத்துகிறது.

முஸ்லிம்  பெருமக்களே, உங்கள் குழந்தைகளுக்குத்
தடுப்பூசி (vaccination) போடாதீர்கள். அது ஷரியத்
சட்டப்படி ஹராம் செய்யப்பட்டது (தடுக்கப்பட்டது)
என்று இஸ்லாமிய மதகுரு ஒருவர் மலப்புரத்தில்
ஆயிரக்கணக்கில் திரண்ட கூட்டத்திடம் பேசுகிறார்.

தடுப்பூசி ஒரு மேற்கத்திய சதி. கர்ப்பத்தில் இருக்கும்
குழந்தைக்கு தேவையான எல்லா சக்தியையும்
அல்லா வழங்கி விடுகிறார். எனவே ஹராம் செய்யப்பட்ட
தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போடாதீர்கள்
என்று முஸ்லிம் மதகுரு ஆவேசமாகப் பேசுகிறார்.

மலப்புரத்தில் மட்டும் 16 வயதுக்கு உட்பட்ட
ஒன்றே முக்கால் லட்சம் குழந்தைகள் தொண்டை
அடைப்பான் (டிப்தீரியா) வராமல் தடுக்கும்
தடுப்பூசியைப் போடாதவர்கள் என்று கேரள
அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்ட
ஒரு சர்வே தெரிவிக்கிறது.

காட்சி-3, இடம்: கோழிக்கோடு மருத்துவமனை
-------------------------------------------------------------------------------------
மருத்துவரும் அறுவை சிகிச்சை நிபுணருமாகிய
டாக்டர் வி உமர் பரூக் (Dr V Ummer Farook) என்பவர்
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்
போது கூறுகிறார்:
ஜமாத் இஸ்லாமி (jamaat e Islami) போன்ற அமைப்புகள்
தடுப்பூசிக்கு எதிராகச் செய்த பிரச்சாரம்
மக்களிடம் பரவியதால், மக்கள் தடுப்பூசி
போட்டுக் கொள்ளாமல் இருந்து, தங்கள்
பிள்ளைகளை பலி கொடுக்கின்றனர் என்று.

மதம் என்றுமே அறிவியலுக்கு எதிரானது!
------------------------------------------------------------------------------
ஆங்கில இந்து ஏட்டில் (The Hindu, Chennai,
july 9, 2016, page-13) நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரை
வெளியாகி உள்ளது. முழுப்பக்கக் கட்டுரை.
அதில் உள்ள செய்தியே மேலே தரப்பட்டுள்ளது.
அக்கட்டுரையை அனைவரும் படிக்குமாறு
வேண்டுகிறோம்.

உலக சுகாதார மன்றம் (WHO) இந்தத் தடுப்பூசியைப்
பரிந்துரைக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு
நாடுகளிலும் இந்தத் தடுப்பூசி போடப் படுகிறது.
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இது
இலவசமாகப் போடப்படுகிறது.  கருவுற்று
இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்திலேயே இந்த
ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.

முஸ்லிம் குழந்தைகளின் உயிரைக் குடிக்கும்
தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரம் தடை செய்யப்
பட வேண்டும். அறிவியலுக்கு எதிரான
மூட நம்பிக்கைளை மக்களிடம் பரப்பும்
மதவெறி அமைப்புகளைத் தடை செய்ய
வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: மூட நம்பிக்கைகள் மதத்தின் பெயரால்
தொடர்கின்றன. குழந்தைக்குத் தாய்ப்பால்
கொடுப்பதைத் தடுத்திருக்கிறான், மதத்தின் பெயரால்
ஒரு இஸ்லாமிய மூடன். இதை பத்திரிக்கை டாட் காம்
இணைய இதழ் உட்பட பல ஏடுகள் வெளியிட்டுள்ளன.

பின்குறிப்பு-2: இது சூலை 2016இல் எழுதிய பதிவு.
*****************************************************************

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக