ஞாயிறு, 31 ஜூலை, 2016

கருத்துக் கேட்கவே இல்லை! இல்லை!!இல்லை!!!
புதிய கல்விக் கொள்கை குறித்து இந்தியாவில்
எல்லா மாநிலங்களிலும் மக்களிடம் கருத்துக்
கேட்கப் பட்டது, தமிழ்நாட்டைத் தவிர, ஏன்?
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
புதிய கல்விக் கொள்கை குறித்து நாடு தழுவிய
அளவில், எல்லா மாநிலங்களிலும் கருத்துக்
கேட்புக் கூட்டங்கள் நடந்தன. தொடர்புடைய
அனைவரிடமும் (all stakeholders) கருத்துக் கேட்கப்
பட்டது.

ஸ்மிர்தி இரானி அம்மையார் அமைச்சராக இருந்தபோது
மார்ச் 2015இல் கருத்துக் கேட்கும் செயல்பாடுகளுக்கு
உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அந்த உத்தரவின்படி,

1) 36 மாநிலங்களில் கருத்துக் கேட்க வேண்டும்.
2) 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கருத்துக்
கேட்க வேண்டும்.
3) 6600 ஒன்றியங்களில் (blocks or mandals) கருத்துக்
கேட்க வேண்டும்.
4) இரண்டரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில்
கருத்து கேட்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாட்டில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள்
நடைபெறவே இல்லை. இதற்கு காரணம் ஜெயலலிதா
நடத்தும் செயலற்ற அதிமுக அரசுதான்.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அந்தந்த
மாநில அரசுகள் மக்களிடமும், கல்வியாளர்களிடமும்,
ஆசிரியர்-மாணவர்களிடமும் கருத்துக் கேட்டன.
ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதா அரசு எருமை
மாட்டின் மீது மழை பெய்தது போல சோம்பிக்
கிடந்தது.

கருத்துக் கேட்பு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன
என்பதை அறிய, அமைச்சர் ஸ்மிர்தி இரானி, பிராந்திய
வாரியாக காணொளி மாநாடு (vedio conference)
நடத்தினார். தென் பிராந்தியத்தைப் பொறுத்த மட்டில்,
இந்தக் காணொளி மாநாடு செப்டம்பர் 16, 2015 அன்று
நடந்தது.

அதில் பங்கேற்ற தமிழ அரசின் உயர் அதிகாரியிடம்
கருத்துக் கேட்பு நடவடிக்கைகளின்   நிலவரம் எப்படி
இருக்கிறது என்று அமைச்சர் கேட்டார். அதற்கு
தமிழக  அரசின் உயர் அதிகாரி அளித்த பதில் இதோ:

"In Tamilnadu we have not been able to conduct consultation meetings
with the Local bodies because The Tamilnadu Panchayat Act does not provide
for it and this point was conveyed during the last video conference
which was held specifically to detail the consultations at the Local
body level"

"கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த தமிழகப்
பஞ்சாயத்துச் சட்டத்தில் இடமில்லை" என்கிறார்
அரசு அதிகாரி.

உங்கள் கருத்துக்களை அனுப்புவதற்கான, தேசிய
அளவிலான கடைசித் தேதி (National deadline) 2015
அக்டோபர் இறுதி என்று கூறிய அமைச்சர் அதற்குள்
கூட்டங்களை நடத்தி, கருத்துக்களைக் கேளுங்கள்
என்கிறார்.

ஆனால் இறுதி வரை ஜெயலலிதா அரசு மக்களிடம்
கருத்துக் கேட்கவே இல்லை.

இருந்தாலும் ஜெயலலிதா அரசின் செயலற்ற
தன்மையைத் தட்டிக் கேட்க தமிழ்நாட்டில்
எந்த ஊடகமும் தயாராக இல்லை. எந்தக் கட்சியும்
தயாராக இல்லை.

மேலே கூறிய செய்திக்கான ஆதாரம் யூடியூப்
வீடியோவில் உள்ளது. இணைப்பு (link) இதோ.
**************************************************************
   .  


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக