செவ்வாய், 12 ஜூலை, 2016

எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையாகவும்
திறந்த மனதுடனும் ஆராய்ந்து, அதன் பின்
ஒரு முடிவுக்கு வருவது என்பது தமிழ்ச் சூழலில்
இல்லை. எதை எடுத்தாலும் வில்லன், ஹீரோ
என்ற இரண்டு நிலைகளுக்கு கொண்டு வந்து,
ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலை
மட்டுமே தமிழில் உள்ளது. இந்தப் போக்கு நீண்ட
காலமாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
இது அறிவியலுக்கு முற்றிலும் எதிரானது.
**
பெருமாள் முருகன் மீது அனுதாபப் படலாம்.
நன்கு படித்த ஒரு பேராசிரியர், உலகத்து
இயற்கை அறியாமல் இப்படிப்போய் மாட்டிக்
கொண்டாரே என்று பரிவு காட்டலாம். அந்தப்
பரிவை அவரின் சொந்த சாதியினர் அவரிடம்
காட்டினார்கள். அதனால்தான் அவர் எவ்வித
சிராய்ப்பும் சேதாரமும் இல்லாமல், தலைக்கு
வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பது
போல், சென்னையில் வந்து வாழ முடிகிறது.
**
பெருமாள் முருகன் வேறு சாதியாக இருந்தால்
என்ன ஆகி இருக்கும்? சிந்தித்துப் பார்க்கவும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக