செவ்வாய், 12 ஜூலை, 2016

பெருமாள் முருகன் அமைப்பு சார்ந்து இயங்கியவர்
அல்லர். அமைப்பே கூடாது என்ற பின்நவீனத்துவக்
கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர் எவ்வாறு ஏதேனும்
ஒரு அமைப்பில் சேர்ந்து இயக்குவார்? என்றாலும்
தமுஎகச அவரின் உதவிக்கு வந்தது.
**
மன்னிப்புக் கேட்பதே சரி என்ற முடிவை
எடுத்தவர் தமுஎகச தலைவரான தமிழ்ச்செல்வனே.
வாக்கு வங்கி அரசியலில் உள்ள தமிழ்ச் செல்வன்
இதுபோன்ற நிலைமைகளில் என்ன முடிவு எடுக்க
வேண்டும் என்பதை அறியாதவரா என்ன?
எனவே எந்த விதமான வன்முறைக்கும்
இடம் தராமல் சுமுகமாக முடித்தவர் தமுஎகச
தலைவரே. அவர் மக்களைப் பகைக்கும் மூடர் அல்லர்.

விவரங்களில் இருந்து முடிவுக்குச் செல்ல வேண்டும்.
(from facts one should process to truth). இதுதான் அறிவியல்.
இதுதான் மார்க்சியம். மாறாக, ஒரு முடிவை எடுத்து
விட்டு, அதற்குச் சாதகமாக தரவுகளைத் தேடவோ
திரிக்கவோ கூடாது. இந்த top down approach தவறானது.
**
எந்தத் தரவுகளையும் பரிசீலிக்காமல், in a blind manner,
பெருமாள் முருகனை ஆதரிப்பது என்று முடிவு
எடுத்து விட்டு, அதன் பிறகு அதற்கேற்ப தரவுகளைத்
திரிப்பதும் வாதம் செய்வதும் குட்டி
முதலாளித்துவ அணுகுமுறை. இந்த விவகாரத்தில்
பல்வேறு கருத்துக்கள் இந்த முறையில்தான்
வெளியிடப் படுகின்றன. மார்க்சியம் இதை
ஏற்பதில்லை. 

தங்கள் கூறுவது மார்க்சிய அணுகுமுறை பற்றி.
ஆனால் அண்ணன் பெருமாள் முருகன் பின்நவீனத்துவ
அணுகுமுறையை அல்லவா மேற்கொண்டார்!
தாம் சொல்வதில் ஒரு அதிர்ச்சி மதிப்பு (shock value)
இருக்க வேண்டும் என்பதற்கே அவர் முக்கியத்துவம்
கொடுத்தார். சமூகவியல் ஆய்வு எதையும் அவர்
மேற்கொள்ளவே இல்லையே. மேற்கொண்டிருந்தால்
அதைச் சமர்ப்பிக்க ஏன் தயக்கம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக