தேசிய கல்விக் கொள்கை 2016!
"வரைவு அறிக்கை மீதான சில முன்வைப்புகள்"
என்ற ஆவணத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
வரவேற்கக் கூடிய அம்சமும்
எதிர்க்க வேண்டிய அம்சமும்!
---------------------------------------------------------
கணிதம், அறிவியல் பாடங்களுக்கு இந்தியா
முழுவதற்குமான பொதுப் பாடத்திட்டம்
உருவாக்கப் படும். (வரைவு அறிக்கைக்கான
முன்வைப்பு: அத்தியாயம்-4, கொள்கைச் சட்டகம்).
நமது கருத்து:
--------------------------
இது வரவேற்கத் தக்கது. கணிதமும் அறிவியலும்
உலகம் முழுவதும் பொதுவானவை. இங்கிலாந்தின்
கணிதப் பாடத்திலும் இந்தியாவின் கணிதப்
பாடத்திலும் ஒரே பாடம்தான் இருக்கிறது. எனவே
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது
வரவேற்கத் தக்கது; தேவையானது.
பத்தாம் வகுப்பில் பிரிவினை
----------------------------------------------------
பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடையும்
மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில்தான்
தோல்வி அடைகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.
இதற்காக, பத்தாம் வகுப்பு கணிதம், அறிவியல்
பாடத்திட்டம் இரண்டாகப் பிரிக்கப் படும்.
அ) உயர் மட்டப்பாடம்; (Higher Level)
ஆ) கீழ்மட்டப் பாடம் (Low Level)
கணக்கு வராதவர்கள், அறிவியல் பாடங்களைப்
புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆகிய மாணவர்கள்
கீழ்மட்டப் பாடத்தைத் தேர்வு செய்யலாம்.
(வரைவு அறிக்கை முன்வைப்பு: அத்தியாயம்-4)
உயர்மட்டப் பாடத்தில், அல்ஜீப்ரா, டிரிகனாமெட்ரி,
ஜியோமெட்ரி ஆகிய பாடங்கள் இருக்கும்.
கீழ்மட்டப் பாடத்தில் அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி
எல்லாம் கிடையாது. தனி வட்டி, கூட்டு வட்டி,
கூட்டு வியாபாரம் ஆகிய எளிய அரித்மெட்டிக்
பாடங்கள் மட்டுமே இருக்கும்.
இதனால், கீழ்மட்டப் பாடங்களைத் தேர்வு செய்யும்
மாணவர்கள் எளிதில் தேர்வு பெற முடியும்.
நமது கருத்து:
-----------------------------
இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. யாராக
இருந்தாலும், கணிதம் அறிவியலில் ஒரே
பாடங்களையே படிக்க வேண்டும். மாணவர்களை
கணக்கு நன்றாகச் செய்யக் கூடியவர்கள், கணக்கு
வராத மந்த புத்திக்காரர்கள் என்று இரண்டு
பிரிவுகளாகப் பிரிக்கக் கூடாது. இந்த ஆலோசனையை
முற்றிலுமாக நியூட்டன் அறிவியல் மன்றம்
நிராகரிக்கிறது.
கணக்கு அறிவியல் பாடங்களில், தேர்வில் தோல்வி
அடையும் மாணவர்கள், அடுத்தடுத்த முயற்சிகளில்
தேறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அரசு இதற்காக
தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.
இதுதான் தீர்வு. பாடங்களைக் குறைப்பது அல்ல.
--------------------------------------------------------------------------------------------------
தலையங்க விமர்சனக் கூட்டத்தில் (17.07.2016)
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர்
தோழர் பி இளங்கோ அவர்கள் பேசியது.....தொடரும்....
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக