ஊழ் என்பது இயற்கை நியதி அன்று. அப்பொருளை
அனைவரும் ஏற்பதற்கில்லை. ஊழையும் உப்பக்கம்
காண்பர் என்கிறார் வள்ளுவர். ஊழ் என்பது இயற்கை
நியதி என்றால், அதனை எங்ஙனம் உப்பக்கம்
காண இயலும்? ஊழ் என்பது தலைவிதி என்றும்
கர்மவினைப்பயன் என்றும் பொருள் கொள்ளப்
படுகிறது. இயற்கை நியதி என்றால் இயற்பியல்
விதிகள் (laws of physics) என்றே பொருள்படும்.
அவர் வேறு; இவர் வேறு. சமஸ்கிருதத்தில் எழுதிய
போதாயனர் கி.மு. காலத்தவர். கி.மு 7 அல்லது 8ஆம்
நூற்றாண்டினர். தமிழில் கணக்கதிகாரம் என்பது
பயிற்சி வினாக்களின் தொகுப்பு (book of exercise). இது
நாலைந்து நூற்ராண்டுகளுக்கு முற்பட்டது. இருவரும்
வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள்.
ஊழ் என்ற சொல்லின் பிறப்பு பற்றிக் கருதுக.
தொடக்க காலத்தில் ஊழ் என்பது "முளைப்பது,
முளை விடுவது" என்ற பொருளில் ஆளப்பட்டது.
"இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர்" என்ற
குறளைக் கருதுக. (இணர் =கொத்து, ஊழ் = பூத்தல்)
**
முற்பிறவியின் கர்ம வினைப்பயன் இப்பிறவியில்
வந்து முளைப்பது (அல்லது பூப்பது) ஊழ் ஆகும்.
எனவே ஊழ் என்றால் கர்மவினைப் பயன் என்றோ
தலைவிதி என்றோதான் பொருள் கொள்ள வேண்டும்.
ஊழ் என்பது இயற்கை நியதி என்று வலிந்து
தற்குறிப்பேற்றம் செய்தல் கூடாது.
**
மற்றப்படி உங்கள் கருத்தில் முரண் படுகிறேன்.
அது விவாதித்துத் தீர்வதன்று. நான் இங்கு ஊழ்
என்ற சொல்லின் பொருத்தமற்ற பொருள்கோள் பற்றி
மட்டுமே குறிப்பிட்டேன்.
அரிஸ்ட்டாட்டில் கூட புவிமையக் கொள்கையைத்
தானே கொண்டிருந்தார். அப்படியிருக்க,
கிரேக்கர்கள் எங்ஙனம் சூரியமையக் கொள்கையை
அறிந்திருந்ததாகக் கூற முடியும்?
தமிழ் போதயானாரின் சூத்திரம் துல்லியமற்றது.
பிழையானது. பிழைகளை பொறுத்தமட்டில்,
விளிம்புநிலைப் பிழைகள் (marginalised) என்று கூறலாம்.
அது ஓர் தேற்றம் என்று கூற இயலாது.
தேற்றம் என்ற சொல்லுக்குத் தெளிவு என்று பொருள்.
(தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்--ஆண்டாள்)
போதாயனர் கூறியது ஒரு தோராயமே: அது தேற்றமன்று.
மேலும் இத்தேற்றம் உலகம் முழுவதும் (பாபிலோனியா,
இந்தியா, சீனா) துல்லியமாக ஏற்கப் பட்டு விட்ட
நிலையில், காலத்தால் பிற்பட்ட போதாயனர்
ஒரு தோராயத்தைத் தருவதில் என்ன சிறப்பு
இருக்க முடியும்? கி.மு காலத்திலேயே தேற்றம்
நிரூபணத்துடன் அறிஞர்களால் வழங்கப் பட்டு
விட்ட நிலையில், கி.பி காலத்தின் பிற்பகுதியில்
தோராயத்தைத் தருதல் சிறப்பு உடைத்தா?
**
துல்லியம் தேவைப்படும் ஓர் எளிய கணிதச்
செயல்பாட்டில் தோராயத்தை வைப்பது
மாண்புடைமை ஆகாது.
அது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. பித்தகோரஸின்
மும்மைகள் என்றால் எளிதில் விளக்க முடியும்
என்று கருதியே அவை மட்டும் சுட்டப் பட்டன.
எல்லா செங்கோண முக்கோணங்களுக்கும்
போதையானரின் சூத்திரம் பொருந்தாது.
பித்தகோரஸின் மும்மைகளுக்கு மட்டுமல்ல,
நிறைய செங்கோண முக்கோணங்களுக்கு
அவரின் சூத்திரத்தைப் பொருத்திப் பார்த்தேன்.
அப்போது அவரின் கணக்கீட்டில் உள்ள பிழைகளில்
ஓர் ஒழுங்கு இருந்ததைக் கண்டேன். எனவே 10 சதம்
என்ற அளவுக்குள் பிழைகள் இருக்கக் கூடும்.
அதை நான் மறுக்கவில்லை. அந்த worksheets ஐத்
தேடுகிறேன். அவை கிடைத்தால், அந்தப்
பிழைகளின் அளவை நிர்ணயிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக