புதன், 13 ஜூலை, 2016

அஞ்சலகங்களில் விற்கப்படும் கங்கை நீர்
புனித நீரா? வாசகர்களின் கேள்விக்கு பதில்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
மத்திய அரசு விற்கும் கங்கை நீர் உண்மையிலேயே
புனித நீரா என்று பலரும் கேட்கிறார்கள். எனவே
அதற்கு விடை சொல்கிறோம்.

"கங்கையில் புனிதமாகிய காவிரி" என்று தமிழ்
இலக்கியம் கூறுகிறது. கங்கை நீரை விட, காவிரி
நீர் புனிதமானது என்று இதற்குப் பொருள்.

ஆனால் கங்கை நீரோ அல்லது காவிரி நீரோ
எந்த நீரும் அறிவியலைப் பொறுத்தவரை
புனிதமானதல்ல. புனித நீர் என்ற கருத்தாக்கம்
அறிவியலில் இல்லை. அறிவியலில் புனிதநீருக்கென்று
ஒரு வரையறை இல்லை.

கடின நீர், மென்னீர், வெந்நீர், குளிர் நீர் ஆகிய
பெயர்களில் அறியப்படும் நீர் அறிவியலில்
வரையறை செய்யப் பட்டுள்ளது.

கால்சியம் மக்னீஷியம் ஆகிய உப்புக்கள் நீரில்
கரைந்திருந்தால் அது கடினநீர் ஆகும். மேற்கூறிய
உப்புக்கள் மிக மிகக்  குறைவாகக் கலந்துள்ள
நீர் மென்னீர் ஆகும். மழைநீர் மிகச் சிறந்த
மென்னீர் ஆகும். குளிர்ந்த நீர், மென்னீர்
என்பன நீரின் வெப்பநிலையைப் பொறுத்து
தீர்மானிக்கப் படுகின்றன.  

ஆக, புனிதநீர் என்பது அறிவியலில் இல்லை.
*******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக