புதன், 13 ஜூலை, 2016

"இன்றைய புத்த மதம்" என்ற வாசகத்தைக் கருதவும்.
"இன்றைய" புத்த மதம் கடவுளை ஏற்கிறது. மேலும் அது
இந்து மதத்தின் ஒரு அங்கமாகவும் இந்தியாவின்
அரசமைப்புச் சட்டத்தால் கருதப் படுகிறது.


இது நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கொள்கைப்
பிரகடனம். இது குறித்த விளக்கங்கள் தேவைப்
படும்போதெல்லாம் அளிக்கப் படும். எமது பிரகடனத்தை
வலியுறுத்தி, தகுதி வாய்ந்த இறை நம்பிக்கையாளர்களுடன்
காத்திரமான விவாதங்களிலும் பங்கேற்றுள்ளோம்;
இனியும்  பங்கேற்போம்.


கடவுள் இருக்கிறார் என்று மிகவும் சுலபமாக
முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அதற்கான காரணங்கள்
பற்றி கடவுள் நம்பிக்கையாளர்கள் கவலை கொள்வதில்லை.
ஏனெனில் அது வெறும் faith system. உச்சந்தலையில்
இருந்து உள்ளங்கால் வரை அது வெறும் faith system.
**
ஆனால் கடவுள் மறுப்பு என்பது அப்படி அல்ல.
இது கடவுள் மீது வெறும் அவநம்பிக்கை கொள்வதல்ல.
(not a mere disbelief). பிரபஞ்சம் குறித்த இயற்பியல்
விதிகள், உயிரின் தோற்றம் குறித்த டார்வின் கொள்கை
உள்ளிட்ட எல்லா விதமான அறிவியல் கோட்பாடுகள்
ஆகியவற்றை ஆராய்ந்து, விவாதித்து, அதன் பிறகு
எடுக்கப்பட்ட முடிவு கடவுள் இல்லை என்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக