சனி, 30 ஜூலை, 2016

இன்று உயிருடன் இருக்கும் யாரும் தியாகய்யர்
பாடி, அதை நேரில் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
அதனால் கர்நாடக இசையானது தியாகையரோடு
நின்று விட்டது என்றோ தேங்கிப்போய் விட்டது
என்றோ கருதினால் அது அறியாமையே ஆகும்.
தமக்குப் பின்னும் தொடர்ந்து வளரப்  போகிற
ஒரு உன்னதமான இசையைத்தான் தியாகய்யர்
விட்டுச் சென்றார்.
**
தியாகையருக்குப்பின், இசையில் அவர் அடைந்த
உச்சங்களை எவருமே பிற்காலத்தில் அடைய
முடியாது என்று கருதும் எவரும் சங்கீதத்தை
அவமரியாதை செய்கிறார்கள் என்றே கருத முடியும்.
உயிரோட்டமுள்ள எதுவும் வளரவே செய்யும். எனவே
தியாகையருக்குப் பின்னும் கர்நாடக இசை வளர்ந்து
கொண்டுதான்  இருக்கிறது. இதை  ஏற்காதவர்கள்
கர்நாடக இசை மரித்து விட்டது என்று முடிவு
செய்தவர்களே.
**
எனவே, ராமநாதன், ஜி.என்.பி, பாலமுரளி கிருஷ்ணா,
டி .எம்.கிருஷ்ணா, சஞ்சய் சுப்பிரமணியன் ஆகிய
எல்லோருமே தியாகய்யர் இசையில் தொட்ட
உச்சங்களில் சில பலவற்றைத் தொட்டவர்கள்.
ஒரு ஈடுபாடு இல்லாமல், லயிப்பு இல்லாமல்
தொடர்ந்து கச்சேரி செய்து கொண்டும் சபாக்களில்
பாடிக் கொண்டும் இருக்க முடியாது. தேங்காய் மூடி
பாகவதர்கள் வேண்டுமானால் எந்த உச்சத்தையும்
அடையாமல் காலம் தள்ளலாம். ஆனால் முதல் தரப்
பாடகரான கிருஷ்ணாவை சுமாராகப் பாடுவார்
என்று சான்றிதழ் கொடுக்கும் எவரும் தமது
அருகதையை அறிந்து கொள்வது நல்லது.  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக