சனி, 16 ஜூலை, 2016

கத்தோலிக்கப் பாதிரியாராக மாறினார் துரைமுருகன்!
திமுகவினர் அதிர்ச்சி!
---------------------------------------------------------------------------------------------------
எடுத்த எடுப்பிலேயே கலைஞரைச் சென்று
சந்திக்க முடியாது. எப்போது கேட்டாலும் கலைஞர்
அப்பாயின்ட்மென்ட் தருவார் என்பது உண்மையே.
என்றாலும் கலைஞரைச் சந்திக்கும் முன்னர்
தேவையான முன்தயாரிப்புகள் (ground work) செய்து
இருக்க வேண்டும் அல்லவா!

எனவேதான் பல தலைவர்கள் கலைஞரைச் சந்திக்கும்
முன்பு துரைமுருகனைச் சந்திக்க விரும்புகின்றனர்.
சந்தித்தும் வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பின்னர்
பலரால் கட்சி நடத்த முடியவில்லை. திமுக-அதிமுகவுக்கு
எதிரான மாற்று அரசியல் என்று சொன்னாலே
கட்சிக்காரன் அடிக்க வருகிறான். எனவே உருப்படாத
அந்தப் பேச்சை  இனி பேச முடியாது.

இருக்கிற ஒரே வழி கலைஞரின் காலில் விழுவதுதான்.
அதற்காகவே பல்வேறு புரட்சிகரத் தலைவர்களும்
துரைமுருகனைச் சந்தித்து வருகிறார்கள்.

கலைஞரிடம் மன்னிப்புக் கேட்கிறோம்; எப்படியாவது
எங்கள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்த்துக்
கொள்ளுங்கள் என்று கெஞ்சும் இத்தலைவர்கள்
துரைமுருகனின் பாதங்களை கண்ணீரால்
கழுவுகிறார்கள்.

மன்னிப்புக் கேட்பதால் நெகிழ்ந்து போன
துரைமுருகனும், ஒரு கத்தோலிக்கப் பாதிரியாராக
மாறி, அனைவருக்கும் பாவமன்னிப்பு வழங்கிக்
கொண்டிருக்கிறார்.

இதன் காரணமாக, பிற கட்சித் தலைவர்கள்
துரைமுருகனைக் குறிப்பிடும்போது பாதிரியார்
என்றே குறிப்பிடுகிறார்கள்.

இதுதான் பகுத்தறிவாளர் துரைமுருகன் பாதிரியாராக
மாறிய கதை.
******************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக