வியாழன், 7 ஜூலை, 2016

இது மாம்பழப் பருவம்!
எனவே பருவத்துக்கேற்ற கணக்கு!
பாரம்பரியமான தமிழ் மணம் வீசும் கணக்கு!
கணக்கைச் செய்து தமிழ்ப்பற்றை நிரூபியுங்கள்!
---------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
ஒரு விவசாயி தன் நிலத்தை தன் நான்கு மகன்கள் வசம்
ஒப்படைத்துவிட்டு அதில் வரும் மகசூலை நால்வரும்
சம்மாக பிரித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு ஒவ்வொரு
மகன் வீட்டிலும் சிறிதுகாலம் என தன் வாழ்வை கழிக்கிறார். நிலத்தில் உள்ள மாந்தோப்பில் மூத்த மகன் பணியாட்களை
வைத்து மாம்பழங்களை பறித்து அதற்கான கூலியை
சில மாம்பழங்களாகவே தந்து மீதியுள்ள மாம்பழங்களை
எண்ணிக்கையில் 4 பங்காக பிரிக்க மீதமின்றி சமமாக
பிரிகிறது ! அவர் தன் பாகத்தை எடுத்துக்கொண்டு
சென்றுவிடுகிறார். இரண்டாம் மகன் பிறகு தோப்புக்கு வந்துபார்க்க அங்கு
இருப்பது மொத்த மகசூல் என எண்ணி 4 ஆக பிரித்தால்
மீதமின்றி சமமாக பிரிகிறது ! அவரும் தன் பாகத்தை
எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். மூன்றாம் மகன் பிறகு தோப்புக்கு வந்துபார்க்க வரும் அங்கு
இருப்பது மொத்த மகசூல் என எண்ணி 4 ஆக பிரித்தால்
மீதமின்றி சமமாக பிரிகிறது ! அவரும் தன் பாகத்தை
எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். நான்காவது மகனும் பிறகு தோப்புக்கு வந்துபார்க்க அங்கு
இருப்பது மொத்த மகசூல் என எண்ணி வரும் 4 ஆக
பிரித்தால் மீதமின்றி சமமாக பிரிகிறது ! அவரும் தன்
பாகத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். அதன்பின் தந்தை தோப்புக்கு வந்துபார்க்க அவரும் அங்கு
இருப்பது மொத்த மகசூல் என எண்ணி 4 ஆக பிரித்தால்
கடைசியாக ஒரு மாம்பழம் மீதியாகிறது ! அவர் நான்கு பாகங்களையும் தனித்தனியாக வைத்துவிட்டு
மீதமிருந்த ஒரு பழத்தை தான் சாப்பிட்டு விட்டுச்
சென்றுவிடுகிறார். அப்படியானால், பணியாட்களுக்கு கூலியாக வழங்கியது
போக கிடைத்த மொத்த மாம்பழங்களின்
எண்ணிக்கை என்ன ?
----------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கணக்கிற்கு விடை காண முயலுங்கள்.
விடை சரியா தவறா என்பது பொருட்டல்ல.
முயற்சி செய்யாதவர்கள் தமிழுக்கு எதிரானவர்கள்
என்று கருத இடமுண்டு.
**************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக