இடதுசாரி முதல்வரின் வலதுசாரி ஆலோசகர்!
பினராயி விஜயன்--அச்சுதானந்தன் ரோஷமான
ஆங்கிலக் குத்துச் சண்டைப் போட்டி!
-----------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------------
கேரள மாநிலத்தின் மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி
விஜயன் அவர்கள் (வயது 70) தமக்கு ஒரு பொருளாதார
ஆலோசகரை நியமித்துள்ளார். ஹார்வர்டு பல்கலையில்
பயின்ற மலையாளிப் பெண்மணியான பொருளியல் பேராசிரியர் கீதா கோபிநாத் அவர்களே
கேரள முதல்வரின் பொருளாதார ஆலோசகர்.
(இணைக்கப்பட்ட படத்தில் உள்ளவர் இவரே)
பினராயி விஜயனின் போட்டியாளரும் தற்குறியுமான
வி எஸ் அச்சுதானந்தன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரிக்கு
கண்டனக் கடிதம் எழுதி உள்ளார்.
ஏ.கே.கோபாலன் பவனில் இருந்து நமக்குக் கிடைத்த
தகவல்களின்படி, தற்குறி அச்சுதானந்தனின் கடிதத்தை
யெச்சூரி அவர்கள் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து
விட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்னிலை வகித்தவர்
மதிப்பிற்குரிய பிரகாஷ் காரத் அவர்கள்.
(ஏ.கே.கோபாலன் பவன் என்பது புது டில்லியில் உள்ள
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலகம்
(head quarters) ஆகும்.)
பினராயி விஜயன் அவர்கள் ஒரு பொருளியல் நிபுணரோ
சட்ட நிபுணரோ அல்ல. கல்வியைப் பொறுத்த மட்டில்
அவர் ஒரு சராசரிப் பட்டதாரி. முதல்வர் பொறுப்பை
ஏற்றிருக்கும் நிலையில் அவருக்கு பொருளாதார
விஷயங்களில் ஆலோசனை தேவைப் படும். எனவே
அவர் அதற்காக ஒரு ஆலோசகரை நியமித்துக்
கொள்கிறார். இதில் என்ன தவறு? எனவே முதல்வர்
பதவிக்கு அவருடன் போட்டியிட்டுத் தோற்ற
தற்குறி அச்சுதானந்தன் ஆட்சேபம் தெரிவிப்பதில்
ஒரு ரோமமும் நியாயம் இல்லை.
ஆலோசகரான கீதா கோபிநாத் அம்மையார்
தாராளவாதப் பொருளாதாரத்தை ஆதரிப்பவராம்;
எனவே அவர் எப்படி ஒரு மார்க்சிஸ்ட் முதல்வருக்கு
ஆலோசகராக இருக்க முடியும் என்கிற அறிவுஜீவித்
தனமான கேள்வியைச் சிலர் கேட்கிறார்கள்.
அடுத்து வரும் பத்திகள் (paras) அவர்களுக்கு
விடையளிக்கும்.
இந்தியாவில் நூற்றுக் கணக்கான அரசியல் கட்சிகள்
உள்ளன. இவை தவிர ஆயிரக் கணக்கான சிறு, குறு,
மற்றும் பெயர்ப் பலகை அமைப்புகள் மற்றும்
கட்சிகள் உள்ளன. என்றாலும் இந்தக் கூட்டத்தில்,
பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள்
மூன்றே மூன்றுதான். அவை:
1) காங்கிரஸ் 2) பாஜக 3) மார்க்சிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் கட்சி என்பதில் CPI, CPM கட்சிகள்
இரண்டும் அடங்கும்).
வேறு எந்தக் கட்சிக்கும் பொருளாதாரக் கொள்கைகளே
கிடையாது. உதாரணமாக திமுக, அதிமுக, லல்லு கட்சி,
முலாயம் கட்சி, மாயாவதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ்,
அகாலிதளம், தெலுங்கு தேசம் முதலிய எந்த ஒரு மாநிலக் கட்சிக்கும் தனித்த பொருளாதாரக் கொள்கைகள்
கிடையாது. மத்திய ஆளும் கட்சி அல்லது ஆளும்
வர்க்கக் கட்சிகளின் கொள்கைகளே இக்கட்சிகளின்
கொள்கை ஆகும். இக்கட்சிகள் யாவும் அடையாள
அரசியல் கட்சிகளே.
கொள்கைகளைக் கொண்டிருக்கும் காங்கிரஸ்,
பாஜக கட்சிகளைப் பொறுத்தமட்டில், இரண்டு
கட்சிகளுக்கும் ஒரே பொருளாதாரக் கொள்கைகள்தான்.
கொள்கை வேற்றுமை கிடையாது. இவ்விரு
கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகளை
எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட்
கட்சியானது, இவற்றுக்கு எதிராக வேறு எந்த
மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளையும்
முன்வைக்கவில்லை. மாறாக தாங்கள் ஆளும்
மாநிலங்களில், காங்-பாஜகவின் அதே கொள்கைகளைத்
தீவிரமாகச் செயல்படுத்தினர் என்பது வரலாறு.
இதற்கு உதாரணம் புத்ததேவ் ஆட்சியின்போது,
மேற்கு வங்கத்தில் டாட்டாவுக்கு ஆதரவாக
நந்தி கிராமம், சிங்கூர் போன்ற இடங்களில் மக்கள்
மீது இவர்கள் தொடுத்த வன்முறை.
ஆக, காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும்
ஒரே பொருளாதாரக் கொள்கையைக்
கொண்டிருக்கும்போது, ஹார்வர்டு பேராசிரியரை
தமது ஆலோசகராக பினராயி விஜயன் வைத்துக்
கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?
--------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
முந்திய பத்திகளில் கூறப்பட்ட அரசியல் கட்சிகள்
என்பது நாடாளுமன்றத் பாதையை ஏற்றுக் கொண்ட
அரசியல் காட்சிகளை மட்டுமே குறிக்கும். ஏற்றுக்
கொள்ளாத மாவோயிஸ்ட் மற்றும் மார்க்சிய-லெனினியக்
கட்சிகளைக் குறிக்காது.
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக