செவ்வாய், 19 ஜூலை, 2016

புதிய மொந்தையில் பழைய கள்!
தேசிய கல்விக் கொள்கை 2016
ஆவணங்களைப்  படியுங்கள்!

---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
1) 1986இல் ராஜிவ் காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட
கல்விக் கொள்கை மற்றும் 1992இல் நரசிம்மராவ் காலத்தில் திருத்தப்பட்ட கொள்கை ஆகிய இரண்டின்
இழையறாத தொடர்ச்சியே மோடி அரசின் கல்விக்
கொள்கை 2016.
2) முந்தைய கொள்கைகளின் உள்ளடக்கத்தையும்
சாரத்தையும் மாற்றாமல் அப்படியே வைத்துக்
கொண்டு. காலத்திற்கேற்ப மேல்பூச்சு வேலை
(tinkering work) செய்யப்பட்டதே மோடி அரசின்
இந்தக் கல்விக் கொள்கை.
3) இது எந்த விதத்திலும் முந்திய கல்விக்
கொள்கைகளில் (1986/1992) இருந்து மாறுபட்டதல்ல.
இது முற்றிலும் புதிய கொள்கையும் அல்ல.
Old wine in a new bottle அவ்வளவே!
4) வரைவு அறிக்கைக்கான உள்ளீடுகள் என்ற
43 பக்க ஆங்கில ஆவணத்தைப் படியுங்கள்.
5) இதுபோக, 217 பக்க மூல ஆவணமும் நியூட்டன்
அறிவியல் மன்றத்திடம் உள்ளது. இது அறிக்கையைத்
தயாரித்த ஐவர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.
சுப்பிரமணியன் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை
ஆகும். இது அரசால் இன்னும் அதிகாரபூர்வமாக
வெளியிடப் படவில்லை.
6) என்றாலும் இதுவும் எளிதில் கிடைக்கிறது.
இது  பென்டகன் ராணுவ ரகசியமா என்ன?
7) 43 பக்க அறிக்கை மற்றும் 217 பக்க மூல அறிக்கை
ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆவணங்கள்
பலவற்றையும்  கசடறக் கற்று அறிந்த பின்னரே
நியூட்டன் அறிவியல் மன்றம் கருத்துக்
கூறுகிறது.
8) ஆங்கிலத்தில் நல்ல புலமை உடைய வாசகர்கள்
தொடர்புடைய இரு ஆவணங்களையும்
(43 பக்கம் மற்றும் 217 பக்கம்) படித்துப் புரிந்து
கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.
9) இந்த ஆவணங்கள் எவையும் தமிழில் இல்லை,
இந்தியிலும் இல்லை என்பதோடு ஆங்கிலத்தில்
மட்டுமே உள்ளன என்பதையும் சுட்டிக்
காட்டுகிறோம்.
10) ஆவணங்களை அவரவர்கள் சுயமாகப்
படித்தால்தான், படித்துப் புரிந்து கொண்டால்தான்
இது குறித்துக் கூறப்படும் கருத்துக்கள்
சரியா தவறா என்று இனம் காண முடியும்.
11) ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்ற
நிலையில் உள்ளவர்களால் ஆவணங்களைப்
படிப்பதும் புரிவதும் இயலாத ஒன்று என்பதையும்
கூறக் கடமைப் பட்டுள்ளோம்.
--------------------------------------------------------------------------------------------
தொடரும்
***************************************************************         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக