வெள்ளி, 29 ஜூலை, 2016

அண்ணாவும் கலைஞரும் செயல்படுத்தியவை
அவர்களின் (திமுக) கொள்கைகளையே தவிர
பெரியாரின் கொள்கைகளை அல்ல. பெரியாரின்
கொள்கைகளுடன் கடுமையாக முரண்பட்டனர்
அண்ணாவும் கலைஞரும் பிற கழகத்தினரும்.
1) 1947 ஆகஸ்டு 15 சுதந்திர நாளை துக்க நாளாக
அனுசரிக்கச் சொன்னார் பெரியார். அண்ணா
ஏற்கவில்லை.
**
2) தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதை அண்ணாவும் கலைஞரும் ஏற்கவில்லை.
3) இளம்வயது மணியம்மையைத் திருமணம் செய்தது
அண்ணாவுக்கும் கலைஞருக்கும் ஏற்புடைத்தல்ல.
இன்னும் நிறைய உள்ளன.
---------------------------------------------------------------------------------------------------
தோழரே, மகாத்மா காந்தி குறித்த உங்களின் பதிவு
அடிப்படை ஆதாரமற்றது. காந்தி பெரியார் உரையாடலுக்கு
குடியரசு ஏட்டின் ஆதாரம் உள்ளது. காந்தி குறித்து
பெரியாருக்கு நல்லெண்ணம் இருந்தமையால்தான்,
இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் வைக்கச் சொன்னார்பெரியார்.
தரவுகளைச்  சரிபார்த்த பின்னர் எழுதவும்.
சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக