திங்கள், 25 ஜூலை, 2016

சரியான விடை:
---------------------------
1) இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று
உத்தரவு போட்டவர் பிரதமர் வாஜ்பாய்.
(ஆண்டு 2000)
2) வாஜ்பாய் போட்ட உத்தரவை ரத்து செய்து
இடஒதுக்கீடு வேண்டாம் என்று உத்தரவு
போட்டவர் மன்மோகன் சிங் ( ஆண்டு 2005)
3) இதற்கான காரணங்கள்:
---------------------------------------------------
வாஜ்பாய் அரசில் வணிக அமைச்சராக இருந்தவர்
முரசொலி மாறன். அவர் வாஜ்பாயிடம் கூறி
இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று
உத்தரவு போடுவதில் பங்காற்றினார்.
**

இது வரலாறு. நேற்றைய கருத்தரங்கில்
பேசும்போது இதைக் கூறினேன்.   
2004-2009 காலக்கட்டத்தில் கமல்நாத் வணிகத்துறை
அமைச்சராக இருந்தார். பின்னர் ஆனந்த் சர்மா
வணிகத்துறை அமைச்சராக இருந்தார். UPA-1
ஆட்சியின்போது மன்மோகனும் கமல்நாத்தும்
இணைந்து இடஒதுக்கீட்டை ரத்து செய்து
வெளிநாட்டுப் பல்கலைகளுக்கு சலுகை
செய்தனர்.
Can anybody disprove this? Nobody on earth can do.

நான் இங்கு எழுதி இருக்கிற விஷயம் கலைஞருக்கே
கூட, தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. முரசொலி
மாறன் இடஒதுக்கீட்டில் நம்பிக்கை உடையவர்.
அவர் சம்பந்தப்பட்ட துறையின் (வணிகத்துறை)
அமைச்சராக இருந்தார். அவர் வாஜ்பாய் அவர்களின்
இசைவைப்  பெற்று இடஒதுக்கீட்டை இடம் பெறச்
செய்தார். இதில் திமுக வுக்கு இந்தப் பங்கும் இல்லை.
எல்லாப் புகழும் முரசொலி மாறனையே சாரும்.
**
அடுத்து UPA-1, UPA-2 காலக்கட்டத்தில் வணிகத்துறை
அமைச்சராக திமுகவினர் யாரும் இல்லை.
அப்படியே இருந்தாலும் அவர்கள் முரசொலி மாறன்
போன்று பெரிய ஆளுமையாக இருக்கவில்லை.
எனவே வெளிநாட்டுப் பல்கலைகளுக்கு இடஒதுக்கீடு
என்னும் சுமை இல்லாமல் பார்த்துக் கொண்டார்
மன்மோகன்.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக