சனி, 30 ஜூலை, 2016

இட ஒதுக்கீடு முடிவுக்கு வருகிறது!
புதிய கல்விக் கொள்கை இட ஒதுக்கீட்டுக்கு
சமாதி கட்டுகிறது!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
வெளிநாட்டுப் பல்கலைகள் இந்தியாவில் கல்வி
வழங்க புதிய கல்விக் கொள்கை வழி வகுக்கிறது.
ஆனால் மாணவர் சேர்க்கையின்போது இடஒதுக்கீடு
முறை பின்பற்றப் படாது.

SC, ST, BC, MBC மற்றும் முஸ்லீம் உள் ஒதுக்கீடு,
அருந்ததியர் உள் ஒதுக்கீடு ஆகிய எல்லா
விதமான சாதிய இடஒதுக்கீடும் வெளிநாட்டுப்
பல்கலைகளைப் பொறுத்த மட்டில் கிடையாது.

69 சதம் இடஒதுக்கீடு என்று யாராவது பேசினால்,
அப்படிப் பேசுகிறவர்களின் வாயில் சூடு போடப்படும்.

GATS ஒப்பந்தம் என்ற சர்வதேச அளவிலான ஒரு
ஒப்பந்தம் இருக்கிறது. General Agreement on Trade in Services
என்பதையே  GATS என்கிறோம்.

இந்த ஒப்பந்தத்தில் கடந்த 19 டிசம்பர் 2015 அன்று
இந்தியா கையெழுத்து இட்டது. கையெழுத்திட்ட
இடம் கென்யாவின் தலைநகர் நைரோபி. அங்கு நடந்த
WTO மாநாட்டில் இந்திய வணிகத்துறை அமைச்சர்
நிர்மலா சீதாராமன் அம்மையார் இந்த ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டார்.

ஏற்கனவே மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோதே,
வெளிநாட்டுப்  பல்கலைகள் இடஒதுக்கீடு வழங்கத்
தேவையில்ல என்று எழுத்து மூலம் சம்மதம்
தெரிவித்து இருந்தார் மன்மோகன் சிங்.

இப்போது எல்லாம் முடிந்து விட்டது. தந்தை
பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்காருக்கும்
மன்மோகன் அரசும் மோடி அரசும் உரிய
மரியாதையைச் செலுத்தி விட்டன.

ஒரு நடைமுறை உதாரணத்தைப் பார்ப்போம்.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பல்கலைக்
கழகம் இந்தியாவில் தமிழ்நாட்டில் கல்வி
வழங்க அனுமதிக்கப் பட்டுள்ளது என்று வைத்துக்
கொள்ளுவோம்.

இந்தப் பல்கலையானது B.Sc Maths பட்டப் படிப்பில்
100 மாணவர்களை சேர்க்கிறது என்று வைத்துக்
கொள்வோம். இந்த 100 மாணவர்களும் தகுதி
அடைப்படையில் மட்டுமே (based on pure merit)
சேர்க்கப் படுவார்கள்.

ஆக, இடஒதுக்கீடு முடிவுக்கு வருகிறது.
**************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக