புதன், 27 ஜூலை, 2016

எல்லாம் கலைக்கப் படுகின்றன!
இனி இன்ஸ்பெக்சன் என்பதே கிடையாது!
மன்மோகன்- நரேந்திர மோடி கூட்டுத் தயாரிப்பான
புதிய கல்விக் கொள்கையின் முன்னேற்பாடுகள்!
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------------
1) கபாலி எனப்படும் குஷ்ட ரோகமும் அடையாள அரசியல்
எனப்படும் க்ஷய ரோகமும்  எட்டுக்கோடித் தமிழ்
மக்களைப் பீடித்திருக்கும் இந்த நேரத்திலும்
ஊதுகின்ற சங்கை ஊதி வைக்க வேண்டிய கடமை
நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு இருப்பதால்
இந்தக் குறும் பதிவை வெளியிடுகிறோம்.

2) UGC எனப்படும் பல்கலை மானியக் குழு கலைக்கப்
படுகிது. AICTE எனப்படும் அகில இந்திய டெக்னிக்கல்
கவுன்சில் கலைக்கப் படுகிறது. MCI எனப்படும்
மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா கலைக்கப்
படுகிறது.

3) இந்த அமைப்புகள் ஏன் கலைக்கப் படுகின்றன?
இவை இன்ஸ்பெக்சன் ராஜ்யத்தை (Inspection Raj)
நடத்துபவை. அதாவது மருத்துவக் கல்லூரிகள்,
பொறியியல் கல்லூரிகளை அடிக்கடி ஆய்வு செய்து,
போதிய ஆய்வக வசதி உள்ளதா, ஆசிரியர்கள்
உள்ளனரா என்றெல்லாம் ஆய்வு  நடத்துபவை.

4) வெளிநாட்டுப் பல்கலைகள் இங்கு வந்து தொழில்
நடத்தும்போது, இத்தகைய ஆய்வுகள் நடத்தப்
படுவதை வெளிநாடுகள் விரும்புவதில்லை.
எனவே இவ்வாறு ஆய்வு நடத்தும் அமைப்புகளை
எல்லாம் பலிபீடத்தில் பலி கொடுக்க வேண்டும்
என்பது மன்மோகன் அவர்களின் கனவாகும்.
அதை மோடி அவர்கள் நனவாக்குகிறார்.

5) இந்த அமைப்புகளைக் கலைத்து விட்டு, அவற்றின்
இடத்தில் இன்ஸ்பெக்சன் அதிகாரம் இல்லாத,
ஒழுங்குபடுத்தும் அதிகாரம் இல்லாத, பல் பிடுங்கப்
பட்ட புதிய அமைப்புகள் உருவாக்கப் படும்.

6) ஆங்கில செய்தி சானல்கள் ( NDTV, CNN-IBN, NEWS X,
 HEADLINES TODAY, TIMES NOW) பார்க்கிற வழக்கம்
உண்டா? கிடையாது. ஆங்கிலச் செய்திகளில்
இவற்றைச் சொல்கிறார்கள்.

7) இன்றைய இந்து ஆங்கில ஏடு ( 27 ஜூலை 2016, பக்-14)
இச்செய்தியை வெளியிட்டுள்ளது. தலைப்பு:High level
panel to recast UGC, AICTE. படியுங்கள்.
**************************************************************
    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக