வெள்ளி, 29 ஜூலை, 2016

இசைமேதை டி.எம்.கிருஷ்ணா மீது
தோழர் ஜெயமோகன் கடும் தாக்கு!
------------------------------------------------------------------
டி.எம்.கிருஷ்ணா மிக மிகச் சுமாரான பாடகர் என்ற
ஜெயமோகனின் மதிப்பீடு சரியில்லை. இசையின்
உச்சத்தைத் தொட்டவர்களில் அவரும் ஒருவர் என்பதை
ஏற்க மறுப்பது நாணயமற்ற செயல்.

டி.எம்.கிருஷ்ணாவின் அரசியல் புரிதல் நுனிப்புல்
தன்மை வாய்ந்ததாக இருந்து விட்டுப் போகட்டும்.
அதை வைத்துக் கொண்டு அவரின் இசையை
மதிப்பிடுவது என்ன நியாயம்?

தி ஹிண்டு அய்யங்காரியப்  பின்னணிதான்
டி.எம்.கிருஷ்ணாவுக்கு மக்சேசே விருதைப்
பெற்றுத் தந்துள்ளது என்ற ஜெயமோகனின் கணிப்பு
சரியானதே. ஆனால் பிராமணன் என்ற சுய
அடையாளத்தை கிருஷ்ணா மறைக்க முயல்கிறார்
என்று கூறும் ஜெயமோகன் அவர்களே, அதை
மறைக்க வேண்டிய அவசியம் கிருஷ்ணாவுக்கு
என்ன உள்ளது? கிருஷ்ணா அரசியலில் குதிக்கப்
போகிறாரா, இல்லையே.

இசையில் தியாகையர் தொட்ட உச்சங்களில்
சிலவற்றையாவது கிருஷ்ணா தொட்டுள்ளார்
என்பது அசைக்க முடியாத உண்மை. 

ஜெயமோகன் அவர்கள் மனச்சாந்தி அடையும் பொருட்டு
டி.எம்.கிருஷ்ணா பாடியுள்ள தியாகையரின்
"எந்தரோ மஹானு பாவுலு" என்ற கீர்த்தனையை
ஜெயமோகன் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
மற்றப்  பாடகர்களைப் போலன்றி, இக்கீர்த்தனையை
தாழ்ந்த ஸ்தாயியிலும் மெதுவாகவும் கிருஷ்ணா
பாடியுள்ளார். இதைக் கேட்கும் எவராயினும்,
ஜெயமோகன் உட்பட, ஓர் அமைதியை ஸ்தாபித்துக்
கொள்ள முடியும்.
------------------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக