வெள்ளி, 8 ஜூலை, 2016

நயன்தாரா திரிஷா உறவில் விரிசலா?
நயன்தாராவின் காரைப் பழுதாக்கியதில் 
வெளிநாட்டுச் சதி உள்ளதா?
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க திரிஷா, நயன்தாரா
ஆகிய இரு நடிகைகளும் செல்ல வேண்டும். குறித்த
நேரத்தில் அந்நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பிய இருவரும்
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இருந்து தங்கள் காரில்
ஏறுகின்றனர். இன்ன நேரத்தில் அங்கு இருக்க
வேண்டும் என்றால் இன்ன வேகத்தில்  செல்ல
வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி
ஒரே இடத்தில் இருந்து ஒரே நேரத்தில் இருவரும்
காரை எடுத்தனர். திரிஷாவின் கார் புறப்பட்டு
விட்டது. ஆனால் நயன்தாராவின் கார் கிளம்ப
மறுத்தது. மெக்கானிக் வந்து பழுது நீக்கிய
பின்னரே நயன்தாராவால் காரை ஓட்ட முடிந்தது.

இதற்குள் அரைமணி நேரம் ஓடி விட்டது. நிகழ்ச்சி
நடைபெறும் இடமோ 150 கி.மீ தொலைவில் உள்ளது.
எனவே காரின் வேகத்தை முன்பு திட்டமிட்டதை விட
மணிக்கு 25 கி.மீ அதிகரித்த நயன்தாரா சரியான
நேரத்திற்கு நிகழ்ச்சிக்குச் சென்றார்.

இப்போது கேள்வி இதுதான்! திட்டமிட்ட வேகத்தை விட
அதிகமான வேகத்தில் சென்றாரே நயன்தாரா,
அவரின்  திட்டமிட்ட வேகம் என்ன?

(பத்தாம் வகுப்பு (தமிழக வாரியம்) எளிய கணக்கு.
வாசகங்கள் சற்றே மாற்றப் பட்டுள்ளன)
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக