திங்கள், 4 ஜூலை, 2016

குற்றச் செயலையும் குற்றவாளியையும்
ஆதரிப்பவர்கள் அதற்கான விலை கொடுக்க
நேரிடும் போது வருந்துவார்கள்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
குற்றத்தைக் குற்றமாகவும் குற்றவாளியைக்
குற்றவாளியாகவும் பார்க்கத்  தெரியாத மனநோய்
தமிழகக் குட்டி முதலாளித்துவ அற்பர்களை
ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இது வெறும்
பிறழ் புரிதல் தானே, எங்ஙனம் மனநோயாகும்
என்று கேட்பது நிலைமையின் தீவிரத்தைக் குறைத்து
மதிப்பிடுவதாகும்.

குற்றவாளிகள் ஏதேனும் ஒரு சாதியையோ அல்லது
ஏதேனும் ஒரு மதத்தையோ சார்ந்தவர்களாகத் தான்
இருப்பார்கள். இந்தியாவில் இது இயற்கை. இது
தவிர்க்க இயலாதது.

குற்றவாளி என் சாதிக்காரன், என் மதத்தவன் என்ற
அடிப்படையில்  குற்றவாளியோடு மத ரீதியாகவோ
சாதி ரீதியாகவோ ஐக்கியப்  படுத்திக்  கொள்வது
கொடிய தவறு மட்டுமல்ல அடிமுட்டாள்தனமும் ஆகும்.

குற்றவாளியிடம் போய் சாதி அபிமானத்தைக்
காட்டுவதும் குற்றவாளியின் சாதியில்  நீ உன்னை
அடையாளம் காண்பதும் மலத்தில் வெளிவந்த
கடலைப் பருப்பை உண்ணும் செயலாகும்.

ஆலங்குளத்தில்  இருந்து புறப்பட்டு வந்த ராம்குமார்
மட்டுமே கொலைகாரன் என்று பார்க்க வேண்டாம்.
ஒவ்வொரு ஊரிலும் ராம்குமார் இருக்கிறான்.

போலியாகச் சித்தரித்த ஆபாசப் படத்தை
வெளியிட்டு வினுப்பிரியா என்ற சேலத்து
இளம்பெண்ணைக் கொன்றானே சுரேஷ்,
அவனும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறான்.

ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் இந்த ராம்குமாரும்
சுரேஷும் நாளை உங்கள் வீட்டுப் பெண்கள் மீது
ஆசைப் படலாம். அவர்களுடன் பழக முயற்சி
செய்யலாம். அது நடக்காத போது கொலை
செய்யலாம் அல்லது அமிலத்தை ஊற்றலாம்.

உங்களின் இளவயது மனைவி மீது கூட ராம்குமார்கள்
ஒருதலையாகக்  காதல் கொள்ளலாம். உங்கள்
மனைவியைப் பின்தொடரலாம். உங்கள் மனைவி
செருப்பைக் கழற்றும்போது, வன்மம் கொண்டு
கொலை செய்யலாம்.

சொந்த ஊரில் இருந்தபோது,  திருமணமான ஒரு
உறவுக்காரப் பெண்ணிடம் காமத்தால் தப்பாக
நடந்து கொண்டு போலிஸாரால் எச்சரித்து
அனுப்பப்பட்ட கயவன் தானே ராம்குமார்!  

இந்தக் கயவர்களுக்கு கல்யாணம் ஆகாத பெண்
என்றோ, அடுத்தவன் மனைவி என்றோ, இன்னும்
சொல்லப் போனால் கூடப் பிறந்த தங்கச்சி என்றோ
எந்த பேதமும் கிடையாது. காமம் வந்தால்
இவனுக்குப் பெண் வேண்டும். பெண் மறுத்தால்
அவளைக் கொல்லுவான்.

அதே போல், குடிபோதையில் பாடுபட்டுச் சாப்பிடுகிற
ஒரு அப்பாவியின் உயிரைப் பறித்து விட்டாள்
குடிகாரி ஐஸ்வர்யா.

ராம்குமார், சுரேஷ், ஐஸ்வர்யா இம்மூவரும்
இந்த சமூகத்துக்கு எதிரானவர்கள். மரண
தண்டனைக்குத் தகுதியானவர்கள்.

இவர்களை 1) நேரடியாக ஆதரிப்பதோ
2) சுற்றி வளைத்து ஆதரிப்பதோ
3) இவர்களின் அநியாயத்தைக் கண்டும் காணாமல்
அமைதி காப்பதோ கயமையிலும் கயமையாகும்.

குற்றவாளிகளை ஆதரிப்பவர்கள், நாளைய தினம்
தாங்கள் ஆதரித்த குற்றவாளிகளாலேயே பாதிக்கப்
படுவார்கள். அப்போது உணர்வதால் பயனில்லை.

குற்றத்தைக் குற்றமாகப் பார்ப்போம்!
குற்றவாளியைக் குற்றவாளியாகப் பார்ப்போம்!
******************************************************************       






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக