ஆங்கிலம் தெரியாமல் தற்கொலை செய்த மாணவி!
-----------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------
பள்ளிப்படிப்பு முழுவதும் 12ஆம் வகுப்பு வரை
தமிழ் வழியில் கல்வி பயின்ற இப்பெண், கல்லூரியில்
பி.காம் பட்டப் படிப்பில் ஆங்கில வழியில் சேர்ந்து
உள்ளார். கல்லூரி இப்போதுதான் திறந்துள்ளது.
அதற்குள் ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக
தற்கொலை செய்து கொண்டு விட்டாள் இந்த மாணவி.
உளவியல் ரீதியாக, இந்தத் தற்கொலைக்குக் காரணம்:
----------------------------------------------------------------------------------------------------
1) தாழ்வு மனப்பான்மை
2) மிகத் தாழ்ந்த சுய மதிப்பீடு (low self esteem)
3) தொட்டால் சுருங்கி மனப்பான்மை
4) பொறுமையின்மை, அவசரக் குடுக்கைத் தனம்
5) வாழ்க்கை மிகப் பரந்தது என்ற புரிதல் இல்லாமை/
6) துன்ப துயரங்களை எதிர்கொள்ளும் ஆற்றலின்மை
இன்ன பிற.
மேற்கூறிய நிலைமைக்கு காரணம் என்ன?
--------------------------------------------------------------------------------
1) பொது அறிவு துளியும் இல்லாமல் இருத்தல்.
2) செய்திப் பத்திரிகைகளைக் கூட வாசிக்காமை.
3) விளையாட்டுக்கு போதிய இடம் இந்தப் பெண்களின்
வாழ்க்கையில் கிடையாது. பையன்கள் பாடு தேவலாம்.
அவர்கள் மட்டையை எடுத்துக் கொண்டு கிரிக்கெட்
விளையாட்டுப் போய் விடுவார்கள்.
4) தாயம், சீட்டு, சதுரங்கம் போன்ற
உள்விளையாட்டுக்களில் ஈடுபாடு இன்மை.
5) எங்கள் காலத்தில் நாங்கள் சாண்டில்யனின்
வரலாற்று நாவல்களையும், தமிழ்வாணனின்
துப்பறியும் நாவல்களையும் விடுமுறை நாட்களில்
படித்து விடுவோம். விடுமுறை அல்லாத நாட்களிலும்
படிப்போம். இன்றைய ப்ளஸ் டூ முடித்த தலைமுறைக்கு
வாசிப்பு என்பதே அறவே கிடையாது.
6) தங்களுக்கான உலகத்தை இவர்கள் மிகவும்
குறுகியதான ஒன்றாக சிருஷ்டித்துக் கொண்டு
விட்டார்கள். இதனால் தங்களின் குறுகிய
உலகில் சிக்கல்கள் வருகையில், அந்த உலகத்திற்குள்
அதற்கு தீர்வு இல்லாதபோது உயிரை மாய்த்துக்
கொள்கிறார்கள்.
மாணவர்களும் மாணவிகளும் தங்களின் உலகத்தை
விரிந்து பரந்த ஒன்றாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
சமூகம் அதற்குத் துணை புரிய வேண்டும். இதுதான்
தீர்வு; இது மட்டுமே தீர்வு.
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக