வெள்ளி, 29 ஜூலை, 2016

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும்
குட்டி முதலாளித்துவம்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
1) குட்டி முதலாளித்துவர்களின் அரசியல் பதிவுகள்
அனைத்துமே அடையாள அரசியல் பதிவுகளாக
மட்டுமே உள்ளன.

2) சமகாலப் பிரச்சினைகளை எந்தக் குட்டி முதலாளித்துவ
லும்பனும் எழுதுவதில்லை.

3) கூத்து பாட்டு இவற்றுக்கு எந்த ஒரு சமூகத்திலும்
இடம் உண்டு. கூத்தைத் தவிர்த்து விட்டு எந்த ஒரு
சமூகமும் இயங்க முடியாது. என்றாலும் கூத்தாடிகளை
எல்லாம் புரட்சிக்காரர்களாக, மக்கள் நாயகர்களாக
வரித்துக் கொள்ளும் மனநோய் தமிழர்களிடம்
முற்றிப் போய் உள்ளது.

4) புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர்,
புரட்சித் தமிழன் என்றெல்லாம் கூத்தாடிகள்
கொண்டாடப்படும் இடம் தமிழ்நாடுதான்.

5) அரசியல் தவிர்த்த பிற பதிவுகளை ஆராய்ந்தால்,
அவ்வளவும் சுயஇன்பப் பதிவுகளாகவே உள்ளன.

6) சமகாலப் பிரச்சினைகள் குறித்து குட்டி
முதலாளித்துவம் கவலையே கொள்வதில்லை.
புதிய கல்விக் கொள்கை குறித்து எவரும் அக்கறை
கொள்ளவில்லை.

7) NGO அமைப்புகள் மீதான அரசின் நியாயமான
கட்டுப்பாடுகள் குறித்து எவருக்கும் கருத்து இல்லை.

8) இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

9) அடையாள அரசியலின் இடத்தில் அறிவியலை
வைக்கிறது நியூட்டன் அறிவியல் மன்றம். எமது
அரசியல் பதிவுகள் சமகால சமூகத்தின்
பிரச்சனைகளை அகல்விரிவாகவும் ஆழமாகவும்
எடுத்து வைப்பவை.

10) குட்டி முதலாளித்துவக் கிணற்றுத் தவளைகள்
 திருந்துவார்களா?  எவ்வளவு காலம்தான் குண்டுச்
சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியும்? பார்ப்போம்!
****************************************************************    


இக்கட்டுரை ஸ்டென்ட் கருவிகளின் விலைகளை
ஒப்பிட்டு, சந்தையின் ஏற்ற இறக்கங்களை அலசும்
வணிகம் சார்ந்த கட்டுரை அல்ல. இது அறிவியல்
கட்டுரை. கலாம் கண்டுபிடித்த, மக்களுக்குப்
பயன் தருகிற, ஒரு அறிவியல் கருவியின் கண்டுபிடிப்பு
பற்றிய கட்டுரை. இக்கண்டுபிடிப்பு மக்களுக்கு
எவ்வளவு தூரம் பயனுள்ளது என்பதை உணர்த்தும்
கட்டுரை.  
**
சந்தையில் ஒரு பொருளின் விலைஏற்றம் அல்லது
இறக்கம்  பற்றி ஆய்வு நடத்திக் கட்டுரை எழுதுவது
நியூட்டன் அறிவியல் மன்றம் மேற்கொள்கின்ற
பணி அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக