செவ்வாய், 12 ஜூலை, 2016

நக்சல்பாரி இயக்கம் வெடித்துக் கிளம்பியபோது,
படிப்பைத் துறந்து பல மாணவர்கள் இயக்கத்தில்
சேர்ந்தனர். அனைவரையும் கிராமங்களுக்கு
அனுப்பியது கட்சித் தலைமை. கிராம மக்களைப்
புரட்சிக்கு அணிசேர்க்கச் சென்றனர் மாணவர்களும்
கட்சி ஊழியர்களும்.
**
இதில் கிடைத்த அனுபவம் என்னவெனில்,
நமது அகநிலை விருப்பம் (subjective wish)
புறநிலை யதார்த்தம் (objective reality) இரண்டிற்கும்
இடையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை
இருந்ததை கட்சி உணர்ந்தது. அதற்காக கட்சி
மக்களைத் திட்டவில்லை. மக்களை அனுசரித்தே
நடந்து கொண்டது. ஏனெனில், மக்களே
மேலானவர்கள் என்பதுதான் மார்க்சிய பாலபாடம்.
**
திருச்செங்கோடு மக்களை பெருமாள் முருகன்
அனுசரிக்க வேண்டுமா அல்லது மக்கள்
பெருமாள் முருகனை அனுசரிக்க வேண்டுமா
என்ற கேள்விக்கு மார்க்சியம் தரும் பதில்
ஒன்றுதான். அது மக்களே மேலானவர்கள்
என்பதுதான். ஏனெனில் மார்க்சியம் என்பது
மக்களுக்கானதே தவிர, மார்க்சியத்துக்காக
மக்கள் அல்ல.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக