சனி, 16 ஜூலை, 2016

இந்தப் பதிவை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
என்பது தெரிகிறது. மிகவும் எளிமையாகவும்
மேலெழுந்தவாரியாகவும் பார்க்கிறபோது,
திமுக ஆட்சிக்கு வராது; வரக்கூடாது என்ற
நோக்கில் எழுதிய பதிவு போலத் தோன்றலாம்.
அது பிறழ் புரிதல்  ஆகும். நிற்க.
**
கண்மூடித்த தனமான காமராசர் வழிபாடு
பிற்போக்கானது. பெரியார், அண்ணா ஆகிய
இருவருமே திராவிட இயக்கத்தின் மூல வேர்கள்.
பெரியார் சொன்னார். அண்ணா செய்தார்.
இன்றைய தமிழ்ச் சமூகம் அடைந்துள்ள
நன்மைகளின் பின்னணியில் இவர்கள்
இருவருக்கும் (பெரியார், அண்ணா) தலைமையான
இடம் உண்டு.மற்றவர்கள் குறிப்பாக, காமராசர்
போன்றவர்கள் எல்லாம் இவர்கள் இருவருக்குப்
பின்னர் வெகுதூரம் தள்ளி நிற்பவர்கள்.
**
திராவிட இயக்கப் பங்களிப்பு பற்றி, படித்து
தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகே
சரியான கருத்து உதிக்கும்.  
---------------------------------------------------------------------------------
நெருக்கடி நிலையை எதிர்த்து காமராசர் என்ன
செய்தார் என்று, காமராசரின் முரட்டு பக்தரும்
தியாகி நெல்லை ஜெபமணியின் புதல்வரும்
கூறுவது என்ன ? படியுங்கள். 


முக்கிய அறிவிப்பு!
---------------------------------------
நேர்மையான அரசியல் விமர்சகர் திரு ரவீந்திரன் துரைசாமி
அவர்கள் காமராசர் குறித்து சற்று முன் ஆங்கிலத்தில் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார். அதை வாசகர்கள் படித்துப் பார்த்து பல உண்மைகளை அறியலாம்.

காமராசர், பக்தவத்சலம், ராமச்சந்திர மேனன் ஆகிய
இந்த மூவரையும் ஒருநாளும் ஏற்றுக் கொள்ள முடியாத
மூத்த தோழர்கள் பலர் இன்னும் இருக்கின்றனர், திமுகவுக்கு
உள்ளும், திமுகவுக்கு வெளியிலும். இன்று காமராசரைப்
புகழ்பவர்கள் நாளை மேனனையும் புகழ்வார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக