பள்ளித் தலைமை ஆசிரியரும் பெரியாரியப்
பேச்சாளருமாகிய தோழர் க பாலகிருஷ்ணன்
அண்மையில் மறைந்தார்! நினைவேந்தல் கூட்டம்
பெரியார் திடலில் வியாழன் 07.07.2016 அன்று.
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆயிரக் கணக்கான
கூட்டங்களை இதுவரை நடத்தியுள்ளது. தொடர்ந்து
நடத்தி வருகிறது.
ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படும்போது,
அது குறித்து பெரியார் திடலில் கூட்டம் நடைபெறும்.
மறைந்த தோழர் க பாலகிருஷ்ணன் அவர்கள்
ஆறு துறைகளிலும் வழங்கப்பட்ட நோபல் பரிசு
குறித்து விரிவுரை ஆற்றுவார்.
சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி இருந்தார்
தோழர் க பாலகிருஷ்ணன். குறிப்பாக அவரின்
துணைவியார் மறைவுக்குப் பின்னர் பொது
நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இதுவரை அவர் உரையாற்றி வந்த,
நோபல் பரிசுச் சொற்பொழிவின் பொறுப்பை
ஏற்றுக் கொள்ளுமாறு வாசகர் வட்ட அமைப்பாளர்கள்
என்னிடம் கேட்டுக் கொண்டனர். அறிவியல்
துறைகளில் ( இயற்பியல், வேதியியல், உயிரியல்)
மட்டுமே சொற்பொழிவாற்றும் பொறுப்பை
ஏற்றுக் கொள்கிறேன் என்றும் பிற மூன்று
துறைகளில் (இலக்கியம், உலக அமைதி, பொருளியல்)
நான் சொற்பொழிவாற்ற விரும்பவில்லை என்றும்
அமைப்பாளர்களிடம் மிகப் பணிவுடன் தெரிவித்தேன்.
இப்போது தோழர் பாலகிருஷ்ணன் நிரந்தரமாக
நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். உடல்நலம்
தேறி மீண்டும் சொற்பொழிவாற்றுவார் என்ற
அமைப்பாளர்களின் நினைப்பில் மண் விழுந்தது.
இந்த ஆண்டும் மேற்கூறிய மூன்று துறைகளுக்கும்
சொற்பொழிவாளர்களைத் தேடிப் பிடிக்கும்
கடினமான பணி , வாசகர் வட்ட அமைப்பாளர்களுக்கு
உள்ளது. ஈடு செய்ய முடியாத இழப்பு என்பார்களே
அது இதுதான் போலும்!
எல்லாத் துறைகளிலும் சொற்பொழிவாற்றும்
பொறுப்பை ஏற்க மறுத்த என்னை நான் நொந்து
கொள்கிறேன். சொற்பொழிவாற்றும் ஒரு பொருளில்
ஆழமான புலமை கொண்டிருக்க வேண்டும்
என்ற கோட்பாட்டை இதுவரை பின்பற்றி
வருபவன் நான் என்ற அடிப்படையிலேயே
நான் அளித்த பொறுப்பை ஏற்க மறுத்தேன்.
இப்போது எல்லாவற்றையும் நினைத்துப்
பார்க்கிறபோது கண்களில் நீர் திரையிடுகிறது.
நாளைய தினம் நடக்கும் அஞ்சலிக் கூட்டத்தில்
பங்கேற்று தோழர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு
அஞ்சலி செலுத்துகிறேன்.
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக