செவ்வாய், 5 ஜூலை, 2016

நியூட்டன் அறிவியல் மன்றம் கொடுக்கும் கணக்குகளில்
எல்லாம் தவறாமல் ஒரு செய்தி இடம் பெறுவதை
வாசகர்கள் கவனித்து இருக்கக் கூடும். கொடுக்கப்பட்ட
கணக்கு எந்த வகுப்புக்கானது, எந்தப் பாடத்திட்டம்
(CBSE அல்லது StateBoard) போன்ற விவரங்கள் கண்டிப்பாக
இடம் பெற்றிருக்கும். சமயத்தில் எந்த ஆண்டு கேட்கப்பட்ட
கேள்வி என்பதும் இடம் பெற்றிருக்கும். இவை வெறுமனே
உபரியான தகவல்கள் அல்ல. இவை அவசியமான
தகவல்கள் ஆகும்.
**
பத்தாம் வகுப்புப் பாடத்திட்டம் என்பது பத்தாம் வகுப்பு
மாணவனின் அறிவெல்லைக்கு உட்பட்டது.
கணிதத்தைப் பொறுத்தமட்டில் வானமே எல்லை.
இதுவே உண்மை. என்றாலும் இந்தக் கோட்பாட்டின் படி பாடத்திட்டம் அமைவதில்லை.
**
திரு வேல்முருகன் சுப்பிரமணியன் கூறியது அனைத்தும்
சரியே. அவர் கூறியது கல்லூரியில்
படிக்கும் மாணவர்களின் அறிவெல்லைக்குத் தகுந்தவாறு
விரிவானதும் ஆழமானதும் ஆகும் (comprehensive and deep).
அது பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஏற்றதில்லை.
இந்தியாவில் நாம் கல்வியிலும் கற்பித்தலிலும்
ஒரு படிமுறையிலான அமைப்பை (graded system)
பின்பற்றி வருகிறோம்.
**
11ஆம் வகுப்பில் ஒரு காட்சி. mv என்பதை differentiate
பண்ணுமாறு ஆசிரியர் கூறுகிறார். (m =mass, v= velocity).
m x dv/dt என்ற விடை சரியானது என்கிறார் ஆசிரியர்.
**
அடுத்து 12ஆம் வகுப்பில் ஒரு காட்சி. 12ஆம் வகுப்பில்
ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு பாடத்திட்டத்தில்
இருக்கிறது. E = m*c squared என்ற derivationஐ பாடம்
நடத்துகிறார் ஆசிரியர். இங்கும் mv என்பதை differentiate
பண்ணுமாறு  சொல்கிறார் ஆசிரியர். பழைய 11ஆம்
வகுப்பு நினைவில் m x dv/dt என்று விடை எழுதும்
மாணவன் ஆசிரியரிடம் அடி வாங்குகிறான்.
**
ஏனெனில், நியூட்டனின் இயற்பியலில் நிறை என்பது
மாறாத ஒன்று. ஐன்ஸ்டினின் சார்பியலில் நிறையும்
மாறும் தன்மை கொண்டதே. எனவே m x dv/dt plus v x dm/dt
என்பதே இங்கு சரியான விடை.  
**
இந்நிகழ்வு உணர்த்துவது யாதெனில், வகுப்பு
உயர உயர ஆழம் அதிகரிக்கும். வகுப்புயர என்று
வாழ்த்துவோம் மாணவர்களை. வேல்முருகன்
அவர்களுக்கு நன்றி.   
**
கணிதத்தின் ஆழ அகலங்களை அற்புதமாக
வெளிப்படுத்தும்  வேல்முருகன் அவர்களின்
கருத்துக்கள் வரவேற்கத் தக்கவை. அவற்றை
மாணவர்கள் மேல் வகுப்புகளில் கற்றுக் கொள்வர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக