வெள்ளி, 16 அக்டோபர், 2015

தெரிந்து கொள்வோம் சாகித்ய அகாடமி பற்றி!
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------------
1) நேரு பிரதமராக இருந்தபோது, 1954 மார்ச் 12இல் 
சாகித்ய அகாடமி நிறுவப் பட்டது.
2) இதன் முதல் தலைவராக நேரு இருந்தார்.

3) இந்திய இலக்கியத் துறையின் மிக உயர்ந்த நிறுவனம் இது.
இந்திய இலக்கியத்தை உலகெங்கும் பரப்புவது இதன் நோக்கம்.
4) 1955 முதல் பரிசுகள் வழங்கப்படத் தொடங்கின.

5) ஆரம்பத்தில் பரிசுத் தொகை ரூ 5000 (ரூ ஐந்தாயிரம்).
தற்போது, 2009 முதல் ரூ ஒரு லட்சம்.
6) 24 இந்திய மொழிகளில் பரிசு வழங்கப் படுகிறது.
ஆரம்பத்தில் அதிகமான மக்கள் பேசும் மொழிகளுக்கு 
மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது போடோ (அசாம்) மொழி,
சந்தால் மொழி ஆகிய மொழிகளுக்கும் பரிசு வழங்கப் படுகிறது.

7) 1960 முதல் இந்திய மொழிகள் தவிர, ஆங்கிலத்துக்கும் 
பரிசு வழங்கப் படுகிறது. ஆங்கிலத்தில் முதன் முதலாகப் 
பரிசு பெற்றவர் ஆர் கே நாராயணன். இவரின் The Guide 
நாவல் பரிசு பெற்றது. (தற்போது விருதைத் திருப்பிக் 
கொடுத்த நயன்தாரா செகல் ஆங்கில மொழிக்கான 
விருது பெற்றவர்).

8) இக்கட்டுரை ஆசிரியர், கல்லூரியில் படித்தபோது,
பட்டப் படிப்பில்  PROSE பகுதியில் ஆர் கே நாராயணனின் 
The Guide நாவல் பாடமாக இருந்தது. சாகித்ய அகாடமி 
விருது பெற்ற நாவல் இது என்றும் சாகித்ய அகாடமி 
என்றால் என்ன என்றும் எங்களின் ஆங்கிலப் பேராசிரியர் 
ஆர் பாலசுப்பிரமணியன் கற்பித்தார். அவர் கற்பித்த
செய்திகளே இக்கட்டுரைக்கு அடிப்படையாக அமைகின்றன.

9) அகாடமி வழங்கும் விருதுகள் யாவும் வருடாந்திர 
விருதுகளே. (annual awards)
10) 1996 இல் பாஷா சம்மன் ( Basha Samman) விருது 
தொடங்கப் பட்டது. ஆண்டுதோறும் மூன்று அல்லது 
நான்கு மொழிகளில் இவ்விருது வழங்கப் படும். இங்கு 
பாஷா என்பது மொழி என்று பொருள்படும். இது ஏதோ 
ஒரு இசுலாமிய அறிஞரின் பெயர் என்று நினைத்தல்
வேண்டாம். இவ்விருதின் பரிசுத்தொகை ரூ ஒரு லட்சம்.    

11) 35 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு யுவ புரஸ்கார் விருது 
வழங்கப் படுகிறது. 2011இல் இவ்விருது நிறுவப் பட்டது. இதன் 
பரிசுத் தொகை ரூ 50000 (ரூ ஐம்பதாயிரம்) 
12) குழந்தை இலக்கியத்திற்காக பால சாகித்ய புரஸ்கார் 
விருது வழங்கப் படுகிறது. இவ்விருது 2010இல் நிறுவப் 
பட்டது. பரிசுத் தொகை ரூ 50000 (ரூ ஐம்பதாயிரம்) 
*************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக