புதன், 14 அக்டோபர், 2015

தமுஎகச அமைப்பு சாராம்சத்தில் ஒரு மிதவாத இந்துத்துவ
அமைப்பே என்ற உண்மையைத் தாங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்
அய்யா. பாஜகவை எதிர்ப்பது மோடியை எதிர்ப்பது என்பது
கண்டிப்பாக ஒரு வரம்பைத் தாண்டக் கூடாது என்பதில்
தமுஎகச மிகத் தெளிவாக இருக்கிறது.
**
அப்படியானால் அவர்களின் வரம்புதான் என்ன? ஒட்டு
விழுகிற அளவுக்கு மட்டும் பாஜக எதிர்ப்பை முன்னெடுத்தால்
போதும்; அதற்கு மேல் மோடிக்கு நெருக்கடி கொடுக்கிற
அளவுக்கு இந்த எதிர்ப்பு போய் விடக் கூடாது என்பதில்
தமுஎகச தெளிவாக இருக்கிறது.
**
இதனால்தான் இவர்கள் மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து
இழந்து வருகிறார்கள். 90 ஆண்டு பாரம்பரியம் உடைய கட்சியான
CPI மொத்தமுள்ள 543 லோக்சபா இடங்களில் ஒரே ஒரு இடம்
மட்டுமே பெற்றுள்ளது.CPM கட்சியோ ஒற்றை இலக்கத்தில்
மட்டுமே   இடங்களைப் பெற்றுள்ளது. இவர்கள் போலிக்
கம்யூனிஸ்ட்கள் என்ற விமர்சனம் மக்களாலும் ஏற்றுக்
கொள்ளப் பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக