வெள்ளி, 16 அக்டோபர், 2015

இந்தப் போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது கர்நாடக
எழுத்தாளர் கல்புர்கி என்பவரின் படுகொலை. 86 வயதான
கல்புர்கி சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். இவர்
 பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.
இன்னும் சொல்லப் போனால், இவர் ஒரு நாத்திகர் அல்லர்.
மாறாக, இந்து மத சீர்திருத்தவாதி.
**
இவரின் படுகொலையை சாகித்ய அகாடமி கண்டிக்கவில்லை.
சாகித்ய அகாடமி என்பது எழுத்தாளர்களின் அமைப்பு.
எழுத்தாளர்களின் நலன் பேணும் அமைப்பு. எழுத்தாளர்களின்
உரிமைகளைக் காக்கும் அமைப்பு. இந்த அமைப்பே கல்புர்கியின்
படுகொலையைக் கண்டிக்கவில்லை என்பது நாடெங்கும்
உள்ள எழுத்தாளர்களால் சுட்டிக் காட்டப் பட்டது. ஆனால்,
அதன் பிறகும் சாகித்ய அகாடமி கல்புர்கி கொலையைக்
கண்டிக்கவோ, எழுத்தாளர்களின் உரிமைகளுக்குக் குரல்
கொடுக்கவோ முன்வரவில்லை.
**
இதைக் கண்டித்து ஒவ்வொரு எழுத்தாளராக  விருதுகளைத்
திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இன்று இப்போராட்டம்
பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக