செவ்வாய், 20 அக்டோபர், 2015

சுட்டப்படும் நூலாசிரியர்,  கம்யூனிசத்தைக் கைவிட்ட
ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக இருந்து
கொண்டு, விளிம்புநிலை மக்கள் மத்தியில் செயல்பட்டபோது
பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார் என்ற அளவில்,
(இந்த அளவில் மட்டும்) இந்த நூல் வரவேற்கத் தக்கது.
அவ்வளவே.
**
கட்சி கட்டுதலில் லெனின், மாவோ வகுத்தளித்த
கோட்பாடுகளில், எவ்விதப் போதாமையும் இல்லை.
ஆகவே, சுட்டப்படும் நூலாசிரியர் தம்மை ஒரு
கோட்பாட்டாளராகக் கருதிக்கொண்டு கட்சி கட்டுதல்
பற்றிய அவரது புரிதலை முன்வைப்பாரேயானால்
அது ஏற்கத் தக்கதல்ல. ஒரு போலிக் கம்யூனிஸ்ட்
கட்சியில் பணியாற்றியவர் என்ன புரிதலை அடைந்து
விட முடியும்?
**
எம்ஜியார், தேவாரம்,மோகன்தாஸ் ஆட்சிக்காலத்தில்
தமிழ்நாட்டில் புரட்சிகர இயக்கங்களில் செயல்பட்ட
எவராவது கட்சி கட்டுதல் குறித்த கோட்பாடுகளை
முன்வைப்பாறேயானால் அதைப் பரிசீலிக்கலாம்.
ஆனால், தாங்கள் சுட்டும் நூலாசிரியர், after all,
பூர்ஷ்வா அடிவருடியாகச் சிதைந்து போன ஒரு       
போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர். அவரின்
அனுபவங்கள், ஒரு போலிக் கம்யூனிஸ்ட்டின்
அனுபவங்களே. இதைப் பொதுமைப் படுத்தவோ,
இதில் இருந்து படிப்பினை பெறவோ என்ன இருக்கிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக